பேய் கொட்டு விமர்சனம்..; இன்வெஸ்ட்மெண்ட் ஆண்.?. அட்ஜஸ்ட்மென்ட் பெண்.?
பேய் கொட்டு விமர்சனம்..; இன்வெஸ்ட்மெண்ட் ஆண்.?. அட்ஜஸ்ட்மென்ட் பெண்.?
சினிமாவில் உள்ள 32 துறைகளை கையாண்டு பெண் ஒருவரே இரு வேடங்களை ஏற்று எஸ். லாவண்யா இயக்கத்தில் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் ‘பேய் கொட்டு’.
ஸ்டோரி..
ஊட்டிக்கு ஒருமுறை செல்கிறார் நாயகி லாவண்யா.. அங்கு அவர் சில செல்ஃபி போட்டோக்கள் எடுக்கும் போது அதில் கண்ணுக்குத் தெரியாத மற்றொரு உருவம் பதிவாகி இருப்பதை பார்க்கிறார்.. மேலும் அங்கு கீழே விழுந்த யாரோ ஒருவரின் ஸ்பை கேமராவையும் எடுத்துக் கொண்டு வருகிறார்.
அதன் பிறகு வீட்டில் சென்று படுக்கும் போது எல்லாம் தன்னை யாரோ தலையில் கொட்டுவது போல உணர்கிறார்.. இதனை அடுத்து தன் அம்மா ஸ்ரீஜா ரவியிடமும் இதை சொல்கிறார்.. அவருக்கும் சில தினங்களில் இது போன்ற தலையில் கொட்டும் உணர்வு வருகிறது..
அப்போது தன் வீட்டில் அமானுஷ்யங்கள் இருப்பதை அறிகிறார்.. தான் ஊட்டிக்கு சென்று வந்த பிறகு தான் இதுபோல சம்பவங்கள் நடக்கிறது என்பதை அறிய மீண்டும் அங்கே செல்கிறார்..
அங்கே சென்ற பின் தான் தன் போல் உருவம் கொண்ட ஒருவரால் தான் தனக்கு இந்த பிரச்சனை ஏற்படுகிறது என்பதை அறிந்து அவரைக் கண்டறிய என்ன செய்தார் என்பதே கதை..
இந்தப் பேய் கொட்டில் இருந்து எப்படி தப்பித்தார் நாயகி லாவண்யா..? இவரைப் போலவே இருக்கும் அந்த பெண்ணின் நிறைவேறாத ஆசைகளை நிறைவேற்றினாரா? என்பதெல்லாம் மீதிக்கதை..

கேரக்டர்ஸ்…
இதில் லாவண்யா, தீபா சங்கர், ஸ்ரீஜா ரவி, சாந்தி ஆனந்தராஜ், பட்டம்மா, ஆடம், சசிகுமார், செல்வம் உள்ளிட்டோர் தங்கள் நடித்து உள்ளனர்..
தீபாவின் காமெடி களைக் கட்டி இருக்கிறது.. அவரது பயந்த சுபாவம் இந்த பேய் படத்திற்கு பெரிதும் உதவி இருக்கிறது.. வழக்கம் போல அழகான நடிப்பில் அம்மாவாக கவருகிறார் ஸ்ரீஜா.. ஒரு காட்சியில் “அகோரி.. உன் கையில் தாயத்து கட்டுவதை விட உன் கழுத்தில் தாலி கட்டி இருக்கலாம் என்று கிண்டல் செய்யும்போது தன் மகளின் திருமண வயதை உணர்த்தும் அம்மாவாக பிரதிபலிக்கிறார்.. சில காட்சிகள் வந்தாலும் கருப்பு சூர்யாவும் ரசிக்க வைக்கிறார்..
முக்கியமாக நாயும் பேயும் இணைந்து போட்டி போட்டு நடித்து இருந்தது என்றும் சொல்லலாம்.. தேடப்படும் ஸ்பை கேமராவை நாய் கொண்டு வரும் காட்சி சிறப்பு..
மனம் நொந்து போனதே.. வாழ்க்கையில் என்ற பாடல் இந்த பேய் படத்திற்கு தென்றல் போல ரசிகர் மனதை வருடும்.
சினிமாவில் உப்புமா கம்பெனிகளை ஆரம்பித்து பெண்களுக்கு வலை வீசும் கயவர்களையும் அடையாளப்படுத்தி இருக்கிறார்.. அது மட்டும் இல்லாமல் பாப்புலாரிட்டி வைத்துக் கொண்டு மற்றவர் உழைப்பை திருடி பெரிய கலைஞர்கள் ஆகும் சிலரையும் சாடி இருக்கிறார் லாவண்யா..
பொதுவாக நம் விமர்சனங்களில் டெக்னீசியன்ஸ் என்ற வார்த்தை பயன்படுத்துவோம்.. ஆனால் பேய் கொட்டு என்ற இந்த பட விமர்சனத்தை பொறுத்தவரை அணைத்து பணிகளையும் லாவண்யா என்ற பெண் ஒருவரே கையாண்டு இருப்பது 10 உலக சாதனைகளை படைத்து இந்த பேய் கொட்டு படத்தை கொடுத்திருக்கிறார்.
ஒரு திரைப்படத்திற்காக பலரும் பணிபுரிந்தால் ஒரு விதமான தரம் கிடைக்கும்.. ஒருவரே பணிபுரிந்தால் ஒரு விதமான தரம் கிடைக்கும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.. ஆனால் லாவண்யா என்ற ஒரு தனிநபர் செய்துள்ள அசாத்திய பணிக்கு விருதுகள் கொடுத்து பாராட்டலாம்.. சில லாஜிக் குறைகள் இருந்தாலும் தரம் குறைவாக இருந்தாலும் தன்னால் எதையும் செய்து காட்ட முடியும் என்று நிரூபித்த அவரின் தனித்திறமைக்கு மனதார பாராட்டுகளை தெரிவிக்கலாம்..
இதில் சிஜி(CG) ,vfx காட்சிகள் பல இடத்தில் சிறப்பான தரத்தை கொண்டுள்ளன.. பேய் தலையில் கொட்டக்கூடிய காட்சிகளும் நன்றாக வந்துள்ளன..
சினிமாவில் உள்ள 32 துறைகளை கையாண்டது மட்டுமல்லாமல் நடிகை லாவண்யா இரண்டு தோற்றத்தில் நடித்து படத்திற்கு மேலும் வலு சேர்த்து இருக்கிறார்.. நடிப்பிலும் இன்னும் கூடுதல் மெனக்கட்டு இருக்கலாம்.. ஒருவேளை ஒருவரை எல்லா பணியும் கையாண்டு இருப்பதால் முகத்தில் சோர்வாக காணப்படுகிறாரா என்ற கேள்வி எழுகிறது.
சினிமாவில் பெண்களுக்கு அட்ஜஸ்மெண்ட், ஆண்களுக்கு இன்வெஸ்ட்மென்ட் என்ற மைய கதையை பயன்படுத்தி ஆபாசம் இல்லாமல் எடுத்திருப்பது சிறப்பு.. திறமை இல்லாதவர்கள் திரையில் ஜொலிக்கிறார்கள்.. ஆனால் திறமை இருந்தும் பலர் பல காரணங்களால் மறைமுகமாக தவிர்க்கப்படுகிறார்கள் என்ற கருத்தை வலியுறுத்தி இருக்கிறது இந்த பேய் கொட்டு..
Only Lavanyas Pei Kottu movie review

