‘மூக்குத்தி அம்மன் 2’ பூஜை : மத்திய அமைச்சரையும் காக்க வைத்த நயன்தாரா

‘மூக்குத்தி அம்மன் 2’ பூஜை : மத்திய அமைச்சரையும் காக்க வைத்த நயன்தாரா

 

‘மூக்குத்தி அம்மன் 2’ பூஜை : மத்திய அமைச்சரையும் காக்க வைத்த நயன்தாரா

 

 

ஆர்.ஜே.பாலாஜி இயக்கி கதையின் நாயகனாக நடித்த திரைப்படம் மூக்குத்தி அம்மன்.. இதில் மூக்குத்தி அம்மன் ஆக நடித்திருந்தார் நயன்தாரா.

தற்போது இதன் இரண்டாம் பாகத்தை வேல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க நாயகியாக நயன்தாரா நடிக்க சுந்தர் சி இயக்குகிறார்..

வேல்ஸ் இண்டர்நேஷனல், அக்னி சினி மேக்ஸ் மற்றும் ரவுடி பிக்சர்ஸ் நிறுவனங்கள் இணைந்து ரூ. 100 கோடி பட்ஜெட்டில் மிக பிரம்மாண்டமாக தயாரிக்கிறது. கோயில் செட் ஒரு கோடி செலவில் போடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது..

இந்த படத்தின் பூஜை விழா சென்னையில் இன்று (மார்ச் 6) சென்னை, பிரசாத் ஸ்டுடியோவில் நடந்தது. இதற்காக அம்மன் கோயில் போன்ற பிரத்யேக செட் போட்டு விழாவை நடத்தினர்.

விழாவில் மத்திய அமைச்சர் எல் முருகன் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். மேலும் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ், நடிகர் ஜெயம் ரவி, தயாரிப்பாளர் தாணு, நடிகைகள் குஷ்பு, மீனா, ஹிப்ஹாப் ஆதி, யோகி பாபு, கருடா ராம், கேஎஸ் ரவிக்குமார், ரெஜினா, உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர்..

விழாவிற்கு மத்திய அமைச்சர் உள்ளிட்ட பலரும் முன்னதாகவே வந்து காத்திருந்தனர்.. ஆனால் நயன்தாரா விழாவிற்கு தாமதமாகவே வந்தார்.. விஐபி செலெக்டிவ் பத்திரிக்கையாளர்கள் மற்றும் கேமராமேன்கள் பலரும் காத்திருந்தனர்..

பூஜை தொடங்கும் முன்பே ஜெயம் ரவி, தாணு ஆகியோர் கிளம்பி சென்று விட்டதாக கூறப்படுகிறது..

வெங்கட் ராகவன் வசனத்தில் ஹிப்ஹாப் ஆதி இசையமைக்க கோபி அமர்நாத் ஒளிப்பதிவு செய்கிறார்.. கலை பொன்ராஜ் சண்டை பயிற்சி ராஜசேகர்..

Nayanthara late for Mookuthi Amman 2 Pooja

 

 

—–