பழைய டைட்டில் நடிகர்.. சிவகார்த்திகேயன் தேடி போறாரா.? அவருக்கு தேடி வருதா.?
பழைய டைட்டில் நடிகர்.. சிவகார்த்திகேயன் தேடி போறாரா.? அவருக்கு தேடி வருதா.?
தமிழ் சினிமாவில் இளம் நடிகர்களில் ஒருவர் சிவகார்த்திகேயன்.. இவர் குறுகிய காலத்தில் தமிழ் சினிமாவில் பல பிளாக்பஸ்டர் ஹிட் படங்களை கொடுத்து முன்னணி நடிகராக வளர்ந்து இன்று கோடிகளில் சம்பாதிக்கும் நடிகராக உயர்ந்திருக்கிறார்.
இவரின் 25வது படத்திற்கு ‘பராசக்தி’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இதில் ஜெயம் ரவி, அதர்வா, ஸ்ரீலிலா உள்ளிட்டோரும் நடித்து வருகின்றனர்.
இந்த நிலையில் பராசக்தி என்ற படத்திற்கு மாபெரும் பஞ்சாயத்து உருவாகியுள்ளது.. அருண் பிரபு இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்துவரும் படத்திருக்கும் ‘பராசக்தி’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது..இந்த பஞ்சாயத்து தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகியுள்ளது.
இந்த நிலையில் இதற்கு முன்பு சிவகார்த்திகேயன் ஏற்கனவே பழைய பட டைட்டில்களில் நடித்திருக்கிறார்.. அந்த லிஸ்ட் இதோ…
தனுஷ் தயாரிப்பில் துரை செந்தில்குமார் இயக்கிய படம் ‘எதிர்நீச்சல்’.. 1970களில் இதே படத்தலைப்பில் நடிகர் நாகேஷ் நடித்திருந்தார்.
தனுஷ் தயாரிப்பில் துரை செந்தில்குமார் இயக்கத்தில் ‘காக்கி சட்டை’ படம் வெளியானது.. இதே தலைப்பில் 1980ல் நடிகர் கமல்ஹாசன் நடித்திருந்தார்.
அதுபோல ரஜினிகாந்த் நடித்த ‘வேலைக்காரன்’ என்ற படத் தலைப்பிலும் சிவகார்த்திகேயன் ஒரு படத்தில் நடித்திருந்தார்.. அது மட்டும் இல்லாமல் ரஜினி நடித்த ‘மாவீரன்’ என்ற பட பெயரிலும் சிவகார்த்திகேயன் படமும் வெளியானது..
அதுபோல கடந்த 2024 ஆம் ஆண்டு சிவகார்த்திகேயன் நடிப்பில் ‘அமரன்’ படம் வெளியாகி சூப்பர்ஹிட் ஆனது.. இதே பட தலைப்பில் நடிகர் கார்த்தி நடித்த படம் 1990களில் வெளியாகியிருந்தது குறிப்பிடத்தக்கது..
சிவகார்த்திகேயனை பழைய டைட்டில் தேடி வருகிறதா அல்லது சிவகார்த்திகேயன் தேடி செல்கிறாரா? என்ற கேள்வி கோலிவுட்டில் எழுந்துள்ளது.. இதற்கு முன்பு காக்கிச்சட்டை என்ற படத்திற்கும் நடிகர் தனுஷ் தயாரித்திருந்த அந்த படத்தின் தலைப்புக்கு மட்டும் ரூபாய் 25 லட்சம் கொடுக்கப்பட்டதாகவும் சிவகார்த்திகேயன் பிடிவாதத்தால் இது நடந்ததாகவும் அப்போது பரபரப்பாக பேசப்பட்டது..
Old movies title and Sivakarthikeyan success formula

