மழையில் நனைகிறேன் விமர்சனம்.. காதல் மழை
மழையில் நனைகிறேன் விமர்சனம்.. காதல் மழை
ஸ்டோரி…
நாயகன் அன்சன் பால்.. நாயகி ரெபா ஜான்.. நாயகன் ஒரு கிறிஸ்டியன்.. வேலை வெட்டி இல்லாதவர்.. நாயகி ஒரு ஹிந்து.. இவர் அமெரிக்கா சென்று செட்டில் ஆக வேண்டும் என்று ஆசைப்பட்டு அதற்காக முயற்சிகளை ஈடுபட்டு வருகிறார்..
இருவரும் சந்தித்துக் கொண்டாலும் எதிரும் புதிருமாக இருக்கின்றனர். ஒரு சூழ்நிலையில் இருவரும் ஒரே பைக்கில் பயணிக்க வேண்டிய சூழ்நிலை.. அப்போது எதிர்பாராத விதமாக விபத்து ஏற்படுகிறது.. இருவரும் வெவ்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்படுகின்றனர்.
அதன் பின்னர் என்ன நடந்தது? இவர்கள் மீண்டும் சந்தித்துக் கொண்டார்களா.? இவர்களின் காதலுக்கு வீட்டில் சம்மதம் கிடைத்ததா? என்பதெல்லாம் மீதிக்கதை..

கேரக்டர்ஸ்…
சில படங்களில் சின்ன வேடங்களில் நடித்து வந்த அன்சன் பால் இந்த படத்தில் கதையின் நாயகனாக.. இடைவேளை வரை பணக்கார பையனாக ஸ்மார்ட்டாக சுற்றித் திரியும் ஹன்சன் இடைவேளைக்குப் பிறகு பொறுப்பான கணவனாக நல்ல நடிப்பை கொடுத்திருக்கிறார்..
நாயகி ரெபா ஜான் ரொமான்ஸிலும் தேர்ச்சி பெறுகிறார்.. ஆனால் இவர்களின் முன்னேற்றம் திடீரென உயர்வது நம்பும்படியாக இல்லை..
நாயகனின் அப்பாவாக மேத்தீவ் வர்கீஸ் மற்றும் அம்மாவாக அனுபமா குமார், நாயகியின் அப்பாவாக சங்கர் குரு ராஜா உள்ளிட்டோர் கவனிக்கத்தக்க நடிப்பு கொடுத்திருக்கின்றனர்..
நாயகனின் நண்பராக கிஷோர் ராஜ்குமார், வெற்றிவேல் ராஜா.. இவர்கள் இருவரும் ஆபத்தில் நண்பனை அறியலாம் என்ற வார்த்தைகளுக்கு ஏற்ப இவர்களின் கேரக்டர் வெளிப்படுகிறது.. (சதீஷ் நடித்த நாய் சேகர் படத்தின் இயக்குனர் கிஷோர் ராஜ்குமார் என்பது குறிப்பிடத்தக்கது.

டெக்னீசியன்ஸ்…
ஜே கல்யாண் அவர்களின் ஒளிப்பதிவில் காட்சிகள் அனைத்தும் கண்களில் ஒன்று வைக்கிறது. மனதிலும் இடம் பிடிக்கிறது.
விஷ்ணு பிரசாத் இசையில் பாடல்கள் ரசிக்க வைக்கிறது.. ஆனால் இத்தனை பாடல்கள் தேவையா என்ற கேள்வியும் வெறும் ஜோடி பாடலாக மட்டுமே அமைந்திருக்கிறது.. அதை தவிர்த்து இருக்கலாம்.
சுரேஷ்குமார் என்பவர் இந்த படத்தை இயக்கி இருக்கிறார்.. மழையில் நனைகிறேன் என்ற தலைப்புக்கு ஏற்ப மழையில் காதலர்கள் சந்திக்க வைத்து கடைசியாக மழையில் நனைய விட்டிருக்கிறார்.. எந்த திருப்புமுனையும் இல்லாத வழக்கமான காதல் கதை.. ஆனால் கடைசியில் மட்டும் கிளைமாக்ஸ் காட்சியை கொஞ்சம் திருப்புமுனை வைத்து சுவாரசியம் ஏற்படுத்த முயற்சித்திருக்கிறார் இயக்குனர் சுரேஷ்குமார்..
ஆக மழையில் நனைகிறேன்.. காதல் மழை
Mazhaiyil Ninaigiren movie review

