அலங்கு விமர்சனம் 3.75/5.. நன்றி மறவாத ஜீவன்

அலங்கு விமர்சனம் 3.75/5.. நன்றி மறவாத ஜீவன்

 

 

அலங்கு விமர்சனம் 3.75/5.. நன்றி மறவாத ஜீவன்

ஸ்டோரி…

நாயகன் குணாநிதி.. டிப்ளமா படித்துக் கொண்டு தன் அம்மாவுக்கு உதவியாக இருந்து வருகிறார்.. குடும்ப வறுமை காரணமாக தன் அம்மாவுக்கு உதவ வேண்டி கேரளா ரப்பர் தோட்டத்திற்கு தன் மாமா காளி வெங்கட் உதவியுடன் வேலைக்கு செல்கிறார்.

இதனிடையில் ஒரு விபத்தில் இருந்து நாயைக் காப்பாற்றி வளர்த்து வருகிறார் நாயகன்.. காளியம்மா என்ற அந்த நாயையும் கேரளாவுக்கு அழைத்து செல்கிறார்..

கேரளாவில் கவுன்சிலராக இருக்கும் செம்பன் வினோத்தின் ஆசை மகளை நாய் கடித்து விடுகிறது.. அந்த ஆத்திரத்தில் அந்த ஊரில் உள்ள எல்லா நாயும் அடித்து கொல்ல சொல்கிறான்.. அதன்படி ஊரில் உள்ள அனைத்து நாய்களையும் பிடித்து கொல்கின்றனர் அவரது அடியாள் சரத் அப்பானி.. அப்போது நாயகன் நாயும் அவரிடம் மாட்டிக் கொள்ளவே அதனை மீட்க போராடுகிறார்..

அதன்பிறகு என்ன நடந்தது.? நாயை காப்பாற்ற முடிந்ததா? என்பதெல்லாம் மீதிக்கதை..

 

கேரக்டர்ஸ்…

தர்மன் – குணாநிதி
மலையன் – காளி வெங்கட்
அகஸ்டின் – செம்பன் வினோத்
பிலிப் – சரத் அப்பானி
பச்சை – சவுந்தர்ராஜா
தங்கம் – ஸ்ரீரேகா
காவல் ஆய்வாளர் – சன்முகம் முத்துசாமி
சாக்கோ – ரெஜின் ரோஸ்
கருப்பு – இதயக்குமார்
சிலுவை – மாஸ்டர் அஜய்
மலர் – கொட்ரவை
ஏஞ்சல் – தீக்‌ஷா

குணாநிதி இந்த படத்தின் மூலம் கதையின் நாயகனாக.. கதைக்கு என்ன தேவையோ அந்த கொடுத்து குணாநிதியாக ஜொலிக்கிறார்.. முதல் படத்தில் ஜோடி வேண்டும் என அடம்பிடிக்காமல் அடக்கி வாசித்து இருப்பது பாராட்டுக்குரியது.. நாய் மீது பாசம் காட்டுவது நண்பர்களுக்காக வந்து நிற்பது இருப்பது என அசரவைக்கிறார்.

குணாநிதி நண்பனாக நடித்த அஜய் மற்றும் இதயா இருவரும் கிளைமாக்ஸ் காட்சியில் அடி வாங்கும் காட்சி நம்மை அறியாமல் கண் கலங்க வைக்கும்.. குட் சாய்ஸ்..

குணாநிதியின் அம்மாவாக நடித்த மலையாள நடிகை ஸ்ரீரேகா மிரட்டி இருக்கிறார்.. இவர் மலையாளத்தில் மாநில அரசு விருதை வென்றவர்.. இனி இவருக்கு தமிழ் படங்களில் வில்லி வேடத்திற்கு சிவப்பு கம்பளம் வைக்கப்படும்..

செம்பன் வினோத் மற்றும் அப்பணி சரத் இருவரும் வில்லன் நடிப்பில் மிரட்டி இருக்கின்றனர்.. நாய்க்கடியால் பாதிக்கப்பட்டவரும் அவரது குடும்பமும் படும் வேதனைகளை நடிப்பில் காட்டி இருக்கின்றனர்..

தாய் மாமனாக வரும் காளி வெங்கட் வழக்கம் போல தன் நடிப்பில் முத்திரை பதிக்கிறார்.. இந்த படத்தில் அவர் பேசும் மலைப்பிரதேச பாஷையும் அந்தப் பணிவும் கவனிக்க வைக்கிறது..

 

டெக்னீசியன்ஸ்…

தயாரிப்பு நிறுவனம் : DG பிலிம் கம்பெனி, மேக்னஸ் பிரொடக்‌ஷன்ஸ்
தயாரிப்பாளர் : சபரிஷ், சங்கமித்ரா செளமியா அன்புமணி
விநியோகஸ்தர் : சக்தி பிலிம் பேக்டரி B. சக்திவேலன்
இயக்குனர் : SP சக்திவேல்
இசை : அஜீஷ்
ஒளிப்பதிவு : பாண்டிக்குமார்
படத்தொகுப்பு : சான் லோக்கேஷ்
கலை இயக்குனர் : ஆனந்த்
சண்டை : தினேஷ் காசி
மக்கள் தொடர்பாளர் : இரா. குமரேசன்

அஜீஸ் இசையில் பாடல்களை விட பின்னணி இசை அதிகம் கவனம் பெறுகிறது.. முக்கியமாக நாய்கள் விரட்டும் காட்சியும் பின்னர் வில்லனோடு குணாநிதி மோதும் காட்சிகளும் அசத்தல் ரகம்..

பாண்டி குமார் ஒளிப்பதிவில் மலைப்பிரதேச காட்சிகள் நாய்கள் காட்சிகள் கண்களுக்கு விருந்தளிக்கிறது..

‘உறுமீன் & பயணிகள் கவனிக்கவும்’ படத்தை இயக்கி எஸ் பி சக்திவேல் இந்த படத்தை இயக்கியிருக்கிறார்.. கேரளாவில் நடந்த முன்பு சம்பவத்தை கொஞ்சம் கமர்சியல் கலந்து தமிழ் ரசிகர்களுக்கு ஏற்றவாறு கொடுத்திருக்கிறார்..

முதலில் நாயை வைத்து கதையை நகர்த்தி இருந்தாலும் பின்னர் ஹீரோ வ்ஸ் வில்லன் என மாற்றி கிளைமாக்ஸ் இல் நாயை வைத்து முடித்து இருக்கிறார் இயக்குனர்.

‘அரசியல் வாரிசு’ தயாரித்த படத்தை இயக்கினாலும் அதில் எந்த சமரசம் செய்து கொள்ளாமல் அலங்கு படத்தை அருமையாக கொடுத்திருக்கிறார் இயக்குனர் சக்திவேல்..

இந்த சக்திவேலுக்கு உறுதுணையாக இருந்து படத்தை விநியோக செய்திருக்கிறார் மற்றொரு சக்திவேலன்.. இந்த இரண்டு ‘சக்தி’-களோடு சங்கமித்ராவும் இணைத்து தரமான படத்தை கொடுத்திருக்கின்றனர்..

Alangu movie review