நல்லவரா? கெட்டவரா? Game Changer ஷங்கர் – ராம் சரண் கூட்டணியின் டீஸர் எப்படி?
Game Changer of Indian Cinema ஷங்கர் – ராம் சரண் கூட்டணியின் டீஸர் எப்படி?
இயக்குநர் ஷங்கர் & தெலுங்கு நடிகர் ராம் சரண் கூட்டணியில் உருவாகியுள்ள திரைப்படம் ‘கேம் சேஞ்சர்’.
இதில் கியாரா அத்வானி நாயகி. அஞ்சலி, எஸ்.ஜே.சூர்யா, ஸ்ரீகாந்த், சமுத்திரக்கனி, நவீன் சந்திரா, ஜெயராம், சுனில் உட்பட பலர் நடித்துள்ளனர்..
ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் சார்பில் தில் ராஜு, மெகா பட்ஜெட்டில் தயாரிக்க தமன் இசையமைத்துள்ளார்.
இந்தப் படத்தின் டீசர் தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது.. இந்த டீஸரில்…
ராம் மாதிரி நல்லவன் எவனும் இல்ல; ஆனா கோபம் வந்தா அவன மாதிரி கெட்டவன் யாருமில்ல” என்ற வசனத்துடன் தொடங்குகிறது..
வழக்கம்போல டைரக்டர் சங்கரின் பிரம்மாண்டம் ஒவ்வொரு காட்சியிலும் தெரிகிறது.
தெலுங்கு படம் என்பதால் ஆக்ஷன் காட்சிகளை ‘அன்லிமிட்ட’டாக வைத்திருக்கிறார் ஷங்கர்.
வேட்டி கட்டிக்கொண்டும், காலேஜ் ஸ்டூடண்ட் போன்றும் காட்சியளிக்கிறார் ராம் சரண்..
என்னை கணிக்க முடியாது என்ற வசனத்துடன் இந்த டீசர் முடிகிறது..
பொங்கல் & சங்கராந்தி பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 10-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Shankars Game changer teaser review
——

