கந்தகோட்டம் சூரசம்ஹாரம் நாடகத்தில் வீரபாகுவாக அசத்திய ஆதேஷ் பாலா
கந்தகோட்டம் சூரசம்ஹாரம் நாடகத்தில் வீரபாகுவாக அசத்திய ஆதேஷ் பாலா
நவம்பர் 7.. 2024ல் சென்னை கந்தகோட்டத்தில் சூரசம்ஹாரம் நாடகம் வடிவில் பல மக்கள் மத்தியில் வெகுவிமரிசையாக நடைபெற்றது..
கிபி 1866 ஆம் ஆண்டு முதல் இன்று வரை உயர்திரு கே.பி.ஆறுமுக செட்டியார் வம்ச வகையறாக்கள் இந்த கந்தக்கோட்ட சூரசம்ஹார நிகழ்ச்சியை நடத்தி வருகின்றனர்.
ஹெரான் ராமசாமி குழுவினர் 1986 ஆம் ஆண்டு முதல் 40 வருடமாக சிறப்பாக திரை கலைஞர்கள் நடிக்க சூரசம்ஹார நிகழ்ச்சியை நடத்தி வருகின்றனர்.
இதில் வீரபாகுவாக பேட்ட.. முண்டாசுபட்டி, அந்தகன், பிதா திரைப்புகழ் நடிகர் ஆதேஷ் பாலா & சூரபத்மனாக சண்முகம். கலாதர் நடித்தனர்..
ஹெரான் முரளிதரன் சூரசம்ஹார கதையை தொகுத்து வழங்கினார்..

நடிகர் ஆதேஷ் பாலா பற்றிய அறிமுகம்.. :
இவர் பழம்பெரும் நடிகர் சிவராமனின் திரையுலக வாரிசு ஆவார்..
தமிழில் ரஜினி, அஜித், பிரஷாந்த், சூர்யா, விக்ரம் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களின் படத்தில் முக்கிய வேடங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் நடிகர் ஆதேஷ் பாலா.
அண்மையில் வெளியான ‘அந்தகன்’ படத்தில் பிரசாந்த் & ஊர்வசி ஆகியோருடன் நடித்திருந்தார்.
இவர் மேலும் பல குறும்படங்களை இயக்கியும் நடித்தும் இருக்கிறார்.
இந்த நிலையில் முதல்முறையாக ஆதேஷ் பாலா கதையின் நாயகனாக மலையாளத்தில் ரகுராம் என்ற படத்தில் அறிமுகமாகிறார்..
Aadesh Bala as Veerabagu in Soorasamaaram


