ரிஷிகேஷ் கங்கை நதிக்கரையில் காதலரை மணந்தார் ரம்யா பாண்டியன்
ரிஷிகேஷ் கங்கை நதிக்கரையில் காதலரை மணந்தார் ரம்யா பாண்டியன்
தேசிய விருது பெற்ற ‘ஜோக்கர்’ திரைப்படத்தில் நடித்து இந்திய அளவில் பிரபலமானவர் நடிகை ரம்யா பாண்டியன்.
அதை தொடர்ந்து விஜய் டிவி யில் குக் வித் கோமாளி மற்றும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் இவருக்கென தனி ரசிகர் கூட்டத்தை உருவாக்கினார்.
கடந்த வாரம் நடிகை ரம்யா பாண்டியன் யோகா ஆசிரியரான லோவல் தவானை திருமணம் செய்யவுள்ளதாக ஒரு வீடியோவை வெளியிட்டு இருந்தார்.
இந்நிலையில் ரம்யா பாண்டியனுக்கும் லோவல தவானுக்கும் ரிஷிகேஷ் அருகே சிவபுரி கங்கை நதிக்கரையில் திருமணம் இன்று நவம்பர் 8 நடைப்பெற்றது.
இந்தத் திருமண நிகழ்ச்சி எளிமையாக நடைபெற்றது.. இந்த விழாவில் நடிகர் அருண்பாண்டியன், கீர்த்தி பாண்டியன் மற்றும் அசோக் செல்வன் ஆகியோர் கலந்து கொண்டனர்..
இந்த திருமணத்தின் வரவேற்பு நிகழ்ச்சி விரைவில் சென்னையில் நவம்பர் 15ஆம் தேதி நடைபெற உள்ளது..
Actress Ramya Pandiyan got married

