‘அமரன்’ படத்தை இலவசமாக திரையிட பாஜக எம்எல்ஏ வானதி கோரிக்கை
‘அமரன்’ படத்தை இலவசமாக திரையிட பாஜக எம்எல்ஏ வானதி கோரிக்கை
கோவை மாவட்டம் காந்திபுரம் பேருந்து நிலையம் அருகில் பேருந்து நிழற்குடை திறப்பு விழா நடந்தது. அதில் கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏ-வும் பாஜக தேசிய மகளிரணி தலைவருமான வானதி சீனிவாசன் பங்கேற்று நிழற்குடையை திறந்து வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது:
‘அமரன்’ குழுவினருக்கு வாழ்த்துகள். இந்த படத்தை கமல்ஹாசன் தயாரித்த ‘ரெட் ஜெயின்ட் மூவீஸ்’ நிறுவனம் விநியோகம் செய்தது கூடுதல் சந்தோஷம்.
அமரன் தேசப்பற்று மிக்க படம்.. இந்த படத்தை பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு இலவசமாக திரையிட வேண்டும்” இவ்வாறு வானதி கூறினார்.
Amaran should be screened free for Students says BJP MLA Vanathi

