டிவி சேனல் தொடங்கும் TVK விஜய்..; அட பெயரே பிரைட்டா வெயிட்டா இருக்கே.!

டிவி சேனல் தொடங்கும் TVK விஜய்..; அட பெயரே பிரைட்டா வெயிட்டா இருக்கே.!

 

 

 

டிவி சேனல் தொடங்கும் TVK விஜய்..; அட பெயரே பிரைட்டா வெயிட்டா இருக்கே.!

 

 

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவரான விஜய் அரசியல் களத்தில் குதித்து விட்டார்.. அவர் சமீபத்தில் தனது கட்சி தமிழக வெற்றிக் கழகம் சார்பாக மிகப்பெரிய மாநாட்டை நடத்தினார்.

திராவிடமும் தமிழ் தேசியமும் தன் இரு கண்கள் போன்றது.. தனது அரசியல் எதிரி திமுக என்பதையும் வெளிப்படையாக பேசியிருந்தார் விஜய்.

இதனையடுத்து திமுக தரப்பில் இருந்து எதிர்ப்பு குரல்கள் கிளம்பி விட்டன. தனது அரசியல் கட்டப் பணிகள் தொடர்பாக ஆலோசனைக் கூட்டங்களையும் நடத்தி வருகிறார் விஜய்.

இதன்படி அடுத்த 2025 ஆம் ஆண்டு முதல் தமிழக முழுவதும் சுற்றுப்பயணம் செய்து தன் கட்சிக் கொள்கைகளை மக்களிடம் நேரடியாக கொண்டு சேர்க்க உள்ளார்.

2026 சட்டமன்றத் தேர்தலை குறிவைத்து அதற்கேற்ற படி அரசியல் பணி நடத்தி வருகிறார் நடிகர் விஜய்.

இந்த நிலையில் தன்னுடைய கட்சி கொள்கைகளையும் தன்னுடைய கட்சி செய்திகளையும் மக்களிடையே கொண்டு சேர்க்க புதிய டிவி சேனல் ஒன்றை நடிகர் விஜய் தொடங்க உள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.

அதன் படி தன்னுடைய டிவி சேனலுக்கு ‘தமிழ் ஒளி’ அல்லது ‘வெற்றி டிவி ‘என்று விஜய் பெயரிட உள்ளதாகவும் கூறப்படுகிறது..

ஏற்கனவே விஜய் டிவி என்ற பெயரில் ஒரு சேனல் இருப்பதால் விஜய் அந்த பெயரை தவிர்த்திருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.

எனவே விரைவில் இது பற்றி அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது..

Actor Vijays new Tv channel updates

 

 

 

 

 

 

 

Related articles