சிட்டுக் குறிஞ்சி விமர்சனம்.. புரியாத புதிராய் இயற்கையின் நாடகம்
சிட்டுக் குறிஞ்சி விமர்சனம்.. புரியாத புதிராய் இயற்கையின் நாடகம்
தமிழகத்தில் ஒரு பகுதியில் அமைந்த ஓர் அழகான கிராமம் சிட்டுக்குறிஞ்சி.. அந்த பகுதியை மையப்படுத்தி கதைக்களம் அமைத்திருக்கிறார் இயக்குனர் மீனாட்சி சுந்தரம்..
ஸ்டோரி…
கேரளாவில் இருந்து கொடைக்கானலுக்கு ஒரு ஆராய்ச்சிக்காக வருகிறார் நாயகன் ரஜித்.. அங்கு வந்த வேளையில் அவரால் அன்றைய தினம் வனத்துறை ஆபிஸர் சந்திக்க முடியாமல் போகிறது.. ஆனால் ஆபிசர் வீட்டில் தங்க நேரிடுகிறது.. அங்கு அதிகாரியின் மனைவி அஜிலா மட்டுமே இருக்கிறார்.. அவரது அழகில் மயங்கும் ரஜித் தன் காதலை சொல்கிறார்.. அவரின் காதலை ஏற்க மறுக்கிறார் அஜிலா.. எனவே அங்கிருந்து கிளம்புகிறார்.. ஒரு வாரம் கழித்து மீண்டும் தன் நண்பன் பப்பு உடன் அதே பகுதிக்கு வருகிறார் ரஜித்..
ஆனால் அங்கு எல்லாமே மாறி இருக்கிறது.. ஆனால் அஜிலா தோற்றத்தில் இருக்கும் வேறொரு பெண்ணை சந்திக்கிறார்.. அவரைத் துரத்தும் போது பிரச்சனையாகிறது.. இந்த சூழ்நிலையில் ஊர் பஞ்சாயத்து கூடுகிறது.. இவர் சொல்வதை யாரும் ஏற்கவில்லை..
அதன் பிறகு அங்கு என்ன நடந்தது இவர் சொல்வது உண்மைதானா.? கடந்த வாரம் இவரை யாரும் பார்க்கவில்லை என்று சொல்வது உண்மை என்றால் இவர் யாரைப் பார்த்தார் என்ன நடந்தது என்பதெல்லாம் திரைக்கதை..

கேரக்டர்ஸ்…
– ரஜித் சிஆர் (பிரஜித் / அமுதன்)
– தீப்ஷிகா (ஆரா / அஜிலா)
– ஸ்ரீராம் கார்த்திக்
– நக்ஷா சரண்
– வி.ஜே. பப்பு
தனக்குப் பொருத்தமான கேரக்டர் தேர்ந்து எடுத்து அதில் ஸ்கோர் செய்திருக்கிறார் அஜித்.. 2 தோற்றத்தில் நடித்திருக்கிறார்.. ஒரு கேரக்டர் முழுக்க தாடி.. மறு கேரக்டர் 1980 காலகட்ட ஹீரோஸ் சாயல்.. இரண்டிலும் மாறுபட்ட உடல் மொழியை கொடுத்து நடித்து இருக்கிறார்..
டிவியில் பிரபலமான பப்பு இது மலையாள பேசி ஓரளவுக்கு நண்பன் கேரக்டருக்கு பொருந்தி போகிறார்.. தீப்ஷிகா நடிப்பிலும் அழகிலும் கவர்ந்து விடுகிறார்..
ஸ்ரீராம் கார்த்திக் மற்றும் நக்ஷா சரண் ஆகியோர் கதை ஓட்டத்திற்கு உதவி உள்ளனர்.. இவர்களுடன் – ஜி.எம். குமார்
– சுஜாதா
– வணக்கம் கந்தசாமி
– கராத்தே ராஜா
– ஈஸ்வர்பாபு உள்ளிட்டோரும் கதைக்கு பக்கபலம்..
கீரை விற்கும் பெண்ணாக மஞ்சு வருகிறார்..
பல படங்களில் வில்லனாக மிரட்டிய ராம்ஸ் இதில் குணசித்திர கேரக்டர்.. இடைவேளைக்கு பிறகு அவர் கதை சொல்லியே திரைக்கதை நகர்கிறது..

டெக்னீசியன்ஸ்
குறிஞ்சி மல மேல கல்யாணம்.. குருவி மனசுல குமாளம்…
ஆகாயம் காணாத பால் வண்ணமே.. ஆகிய இரண்டு பாடல்களும் வரிகளும் ரசிக்க வைக்கிறது… ரம்யமான இசையை கொடுத்திருக்கிறார் இசையமைப்பாளர் மாறா..
எழுத்து & இயக்கம்: வீ.ஜே. மீனாட்சி சுந்தரம்
* தயாரிப்பு நிறுவனம்: பிளாக் அண்ட் வைட் * மீடியா சொல்யூஷன்ஸ் பிரைவேட் லிமிடெட்
* தயாரிப்பாளர்: டி. ஜூட் அனந்த்
* இசை: மாறா
* ஒளிப்பதிவு: பிரான்சிஸ் ராஜ்குமார் ஏ.
இவரது ஒளிப்பதிவில் கொடைக்கானல் காட்சிகள் அழகு… முக்கியமாக அந்த மலை ஓரத்தில் இருக்கும் அஜிலா வீடு… நைட் பார்ட்டி டின்னர் காட்சிகள் கொள்ளை அழகு..
* படத்தொகுப்பு: மகேந்திரன் கணேசன்
* கலை இயக்கம்: ராம்ஜி
* தயாரிப்பு மேலாளர்: ஏ.வி. பழனிசாமி
* மக்கள் தொடர்பு: ரியாஸ் K அகமது, பாரஸ் ரியாஸ்

மீனாட்சி சுந்தரம் இயக்கியிருக்கிறார்.. பார்த்த விஷயங்கள் அனைத்தும் ஒரு வாரத்தில் மறைந்து போகும் மர்மம் என்ற என்ற ஒற்றை கதையை எடுத்து அதற்கு ஒரு பிளாஷ் பேக் காட்சிகள் அமைத்து அதில் ஒரு காதல் கதையை அமைத்து இரண்டாம் பகுதியை நீளமாக காட்டியிருக்கிறார்..
காதலுக்கு என்றும் அழிவில்லை.. அது l தொலைத்தவர்களை தேடிச்செல்லும் ஒரு உணர்வுபூர்வமான பாதை.. காதல் உண்மையானால் காதலில் தோற்றவர்கள் ஏதோ ஒரு பந்தத்தில் ஏதோ ஒரு ஜென்மத்தில் மீண்டும் இணைவோம் என்பதாகவே சிட்டுக்குறிஞ்சி கதையை நிறைவு செய்து இருக்கிறார் டைரக்டர்..
Rejith in Chittu Kurinji movie review
————————————

