ஆக்டோபஸ் வெப் சீரிஸ் விமர்சனம் 4.5/5

ஆக்டோபஸ் வெப் சீரிஸ் விமர்சனம் 4.5/5

 

 

ஆக்டோபஸ் வெப் சீரிஸ் விமர்சனம் 4.5/5

 

அர்ச்சனா ரவிச்சந்திரன், அஷ்வின் மற்றும் வினோத் கிஷன் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ள இந்த OCTOPUS ஏழு எபிசோடுகள் கொண்ட தொடர்.. நவம்பர் 27, 2026 அன்று Zee 5 தளத்தில் பிரத்யேகமாக வெளியாகவுள்ளது.

ஸ்டோரி…

அன்பு நகர் என்ற குடியிருப்பு பகுதியில் தன் மனைவியுடன் குடியேறுகிறார் நாயகன் அஸ்வின்.. இவரது வீட்டருகே அர்ச்சனா உள்ளிட்ட பலரும் வசிக்கின்றனர் இவர்கள் அனைவரும் வேறு வேறு குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்றாலும் அன்பாக சித்தப்பா மாமா அத்தை பாட்டி என அனைவரும் ஒரு உறவு முறையாகவே பழகி வருகின்றனர்..

அந்த பகுதிக்கு ஒரு அஸ்வின் யாரிடமும் பேசாமல் மனைவியை கொடுமைப்படுத்தும் கொடுகாரனாக வாழ்கிறார் இந்த சூழ்நிலையில் ஒரு நாள் இரவில் மனைவியை கொலை செய்து விடுகிறார்.. எனவே  அன்பு நகர் குடியிருப்பு வாசிகள் காவல்துறையில் புகார் கொடுக்கின்றனர் போலீஸ் விசாரிக்கும் போது அங்கு மனைவி என்ற ஒரு நபர் இல்லை அவருக்கு அஸ்வினுக்கு திருமணம் ஆகவில்லை என்கிறார்.. வீட்டின் உள்ளே சென்றபோது ஒரு குடும்பம் நடத்தியதற்கான எந்த ஒரு அடையாளமும் இல்லை அப்படி என்றால் யார் சொல்வது உண்மை அஸ்வின் நிஜமாக திருமணமானவரா அல்லது பேச்சிலரா? அஸ்வின் மனைவி பார்த்தவர்கள் சொல்வதெல்லாம் உண்மைதானா என்பதெல்லாம் யூகிக்க முடியாத அதிரடியான சஸ்பென்ஸ் திரில்லர் கதை..

கேரக்டர்ஸ்…

அர்ச்சனா கதை நாயகி.. எந்த ஹீரோவும் இல்லாமல் ஒரு கதை நாயகியாக ஹீரோயினி நேசம் காட்டியிருக்கிறார்.. அதுபோல அஸ்வின் மற்றும் வினோத் கிருஷ்ணன் இருவரும் தங்களுடைய கேரக்டரில் முத்திரை பதித்துள்ளனர்..
இவர்களுடன் அந்த குடியிருப்பில் வசிக்கும் ஒவ்வொருவரும் ஒரு கேரக்டராகவே தங்களின் நிலை நிறுத்தி படத்திற்கு மிகப்பெரிய பலம் கொடுத்துள்ளனர்..

சித்து குமரேசன், கோடங்கி வடிவேலு, பகவதி பெருமாள், சரித்திரன் மற்றும் கலைவாணி பாஸ்கர் ஆகியோர் சிறப்பான பங்களிப்பை கொடுத்துள்ளனர்..

டெக்னீசியன்ஸ்…

படத்தின் என்பது சதவீதம் ஒரு குடியிருப்பு பகுதியில் நடந்தாலும் எங்கும் சோர்வு தராத ஒரு பயிற்சி தராத ஒரு திரில்லர் கதையை கொடுத்திருக்கிறார் இயக்குனரும் எழுத்தாளருமான ஜெயச்சந்திர ஹாஷ்மி.. இவர் சீனு ராமசாமியிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர்.. ஆனால் அவரது எந்த சாயலும் இல்லாமல் அருமையான திரை கதையை கொடுத்திருக்கிறார் முக்கியமாக ஒரு இணைய தொடருக்கு தேவையான அனைத்தையும் கொடுத்து இந்த அசத்தலாக கொடுத்திருக்கிறார்..

பொதுவாக இது போன்ற புலனாய்வு கதைகளில் காவல்துறை அல்லது அது சம்பந்தமான சிபிஐ என விசாரணை வளையத்திற்கு வருவார்கள் ஆனால் இதில் முழுக்க முழுக்க நண்பர்களை ஒரு புலனாய்வு கதையை செய்வதும் ஆராய்வதும் என வித்தியாசமான கதை கண்ணோட்டத்தில் இயக்கியிருக்கிறார் எழுத்தாளரும் இயக்குநருமான ஜெயச்சந்திர ஹாஷ்மி..

 

  • OCTOPUS web series review