நிறம் விமர்சனம்… யாருக்கு என்ன நிறம்..? யார் அறிவாரோ..?

நிறம் விமர்சனம்… யாருக்கு என்ன நிறம்..? யார் அறிவாரோ..?

 

நிறம் விமர்சனம்… யாருக்கு என்ன நிறம்..? யார் அறிவாரோ..?

 

 

ஸ்டோரி…

முகேன் மற்றும் ப்ரீத்தி அஸ்ராணி இருவரும் மருத்துவ துறையைச் சார்ந்தவர்கள்.. இருவரும் காதலிக்கின்றனர்.. ஒரு கட்டத்தில் இருவருக்கும் பிரச்சனை வந்து பிரிவு ஏற்படுகிறது.. சில தினங்களில் பிரீத்தி காணாமல் போகிறார்.. எனவே காதலன் மீது சந்தேகம் வருகிறது.. இப்படியான சூழ்நிலையில் முகேனை கைது செய்கிறது போலீஸ்.. ஜாமீனில் வெளியே வரும் காதலியை தேடுகிறார்.. பிரீத்தியை கடத்தியது யார்? அவர் எங்கு சென்றார்.? கடத்தியவர்கள் பணமும் கேட்கவில்லை அப்படி என்றால் கடத்தியவர்களின் நோக்கம் என்ன.? என்ன நடந்தது என்பதெல்லாம் நிறத்தின் மீதி கதை..

கேரக்டர்ஸ்…

முகேன் ராவ் மற்றும் பிரீத்தி இருவருக்கும் ரொமான்டிக் கெமிஸ்ட்ரி சிறப்பு.. ஆக்சன் பாட்டு என முதிர்ச்சியான நடிப்பை கொடுத்திருக்கிறார் முகேன்..

பொறுப்பான மருத்துவப் பெண்ணாக பிரீத்தி.. நடிப்பிலும் அழகிலும் கொள்ளை கொள்கிறார்..

மற்றொரு ஹீரோயின் தான்யா ஹோப்.. மாடர்ன் உடையில் வந்து மயக்குகிறார்..

இவர்களுடன் வில்லனாக நிதின் சத்தியா… சுரேகா வாணி, கஜராஜ் உள்ளிட்டோரம் உண்டு..

டெக்னீசியன்ஸ்…

இமானின் பின்னணி இசை சிறப்பு.

மாமா வரியா.. சாட்டர்டே சண்டே பச்சக்.. மண்டே மார்னிங்.. டச்சசக் டச்க்.. இந்த ஐட்டம் சாங் ஆட்ட போட வைக்கும்..

அடி அடி நூதானா.. உன்ன விட்டு போவேனா.. என்ற பாடல் காதலர்களை கவரும்..

கிருஷ்ண பலராம் இயக்கியிருக்கிறார் மருத்துவத்துறையில் நடக்கும் பிரச்சனைகள்.. பெண்களுக்கு எதிரான குற்றங்கள்.. என அனைத்தையும் கலந்து கமர்சியல் விருந்து படைக்க முயற்சித்து இருக்கிறார்.. முக்கியமாக ஒவ்வொரு மனிதர்களின் நிறம் மாறுபடும் என்பதையும் காட்சிப்படுத்தி இருக்கிறார்..

 

Niram movie review