சத்தியவான் சாவித்திரி விமர்சனம் 3.75/5.. ஆண்களை விட பத்து கட்டம் தாண்டி பெண் யோசிப்பாள்..

சத்தியவான் சாவித்திரி விமர்சனம் 3.75/5.. ஆண்களை விட பத்து கட்டம் தாண்டி பெண் யோசிப்பாள்..

 

சத்தியவான் சாவித்திரி விமர்சனம் 3.75/5.. ஆண்களை விட பத்து கட்டம் தாண்டி பெண் யோசிப்பாள்..

 

ஸ்டோரி…

பிரபலமான வழக்கறிஞர் மிஷ்கின்.. இவரிடம் அசிஸ்டன்ட் வழக்கறிஞராக பணிபுரிகிறார் கீர்த்தி சுரேஷ்.. ஒரு கட்டத்தில் சில்பா மஞ்சுநாத் கொலை செய்யப்படுகிறார்.. அவருக்கும் கீர்த்தியின் கணவர் சாருகேசிக்கும் கள்ளத்தொடர்பு இருப்பதை அறிகிறார்.. இந்தக் கொலை வழக்கு கோர்ட்டு விசாரணைக்கு வருகிறது..

கணவருக்கு ஆதரவாக கீர்த்தி வாதாட அவருக்கு எதிராக வாதாடுகிறார் அவரது சீனியர் வக்கீல் மிஷ்கின். வென்றது யார் என்பதுதான் கோர்ட்டு சஸ்பென்ஸ் கதை..

கேரக்டர்ஸ்…

வழக்கமான நையாண்டி கிண்டல் இல்லாமல் பொறுப்பான வழக்கறிஞராக நின்று நிதானமாக வாதாடி மார்க்கண்டேயனாக தன் நடிப்புக்கு மகுடம் சூட்டி இருக்கிறார் மிஷ்கின்..

ஒரு பக்கம் கணவன்.. அவனின் கள்ளக்காதல்.. மறுபக்கம் சீனியர் வக்கீல்.. இதற்கு இடையில் சிக்கிய சிறை பறவையாக சாவித்திரி கேரக்டரில் சபாஷ் பெறுகிறார் கீர்த்தி சுரேஷ்.. கிளைமாக்ஸ் காட்சியில் இவரது நடிப்பும் துடிப்பும் செம..

இவர்களுடன் கீர்த்தியின் கணவனாக புதுமுக நடிகர் சாருகேஷ். மேலும் பிரகிடா, சில்பா மஞ்சுநாத், பாலா சரவணன் அனைத்து கேரக்டர்களும் பக்க பலம்..

வழக்கமான நீதிபதி கேரக்டரில் ஒய் ஜி மகேந்திரன்.. தீபா சங்கர் உள்ளிட்டோரும் உண்டு..

டெக்னீசியன்ஸ்…

சாம் சி எஸ் இசையமைத்திருக்கிறார்.. என்ன விலை படத்தில் வாட்டர் பபுல் வைத்து பின்னணி இசை அமைத்த இவர் இந்த படத்தில் விறுவிறுப்பான பின்னணி இசை கொடுத்து மெருகேற்றி இருக்கிறார்..

மிஷ்கின் கீர்த்தி வாதாடும் காட்சிகளில் அதற்கு ஏற்ப கேமரா ஆங்கிள் வைத்து படத்திற்கு சுவாரஸ்யம் கூட்டி இருக்கிறார் ஒளிப்பதிவாளர் அருள் வின்சென்ட்..

பிரசன்னா ஜி..கே.. எடிட்டிங்.. படத்தின் விறுவிறுப்புக்கு இவரது பணி சிறப்பு..

ஜெய் பீம் & என்ன விலை உள்ளிட்ட பல படங்களில் அதிரடியான கோர்ட் சீன்களை பார்த்திருக்கும் அந்த வரிசையில் முழுக்க முழுக்க கோர்ட்டில் படமாக்கப்பட்ட படம் சத்தியவான் சாவித்திரி..

வேறு ஒருவரின் வழக்காக இல்லாமல் கணவருக்காக வாதாடும் மனைவி அவரை எதிர்க்கும் சீனியர் வக்கீல் என் அதிரடியான திருப்பு முனை திரைக்கதை அமைத்திருக்கிறார் இயக்குனர் பிரவீன் விஜய்..

வழக்கமான நீதிமன்ற வழக்கு விசாரணை படமாக அல்லாமல் ஒரு ஆண் என்பவன் ஒரு கட்டத்திற்கு சிந்தித்தால் பெண் என்பவள் 10 கட்டங்களை தாண்டி சிந்திப்பாள் என்பதை கீர்த்தி கேரக்டர் மூலம் ஆணித்தரமாக உணர்த்தி இருக்கிறார் இயக்குனர் பிரவீன் விஜய்..

 

Sathyavan Savithri movie review

 

—-