அப்பா குட்டி விமர்சனம்.. 3.5/5
அப்பா குட்டி விமர்சனம்.. 3.5/5
ஸ்டோரி…
மனைவி இல்லாத விஜய் ஆண்டனி தன் ஒரே மகளுடன் வாழ்ந்து வருகிறார்.. தந்தையை அப்பா குட்டி என்று அழைக்கிறார் மகள்.. மகள் படிக்கும் பள்ளியில் இருக்கும் ஆசிரியை பிரீத்தி அஸ்ராணி விஜய் ஆண்டனியை காதலிக்கிறார்.. ஆனால் அவரின் காதலை ஏற்க மறுக்கிறார் விஜய்..
ஒரு கட்டத்தில் மகளுக்கு ஒரு நோய் இருப்பதை அறிகிறார்.. மற்றொரு குழந்தை இருந்தால் அந்த குழந்தையின் ஸ்டெம் செல்ஸ் எடுத்து இந்த குழந்தைக்கு சிகிச்சை செய்யலாம் என்கிறார் டாக்டர்..
இந்த சூழ்நிலையில் விஜய் ஆண்டனி என்ன செய்தார்? தன் செல்ல மகளின் உயிரை எப்படி காப்பாற்றினார்.? அவரால் காப்பாற்ற முடிந்ததா என்பதெல்லாம் சென்டிமென்ட் திரைக்கதை..

கேரக்டர்ஸ்…
அப்பா குட்டி – இந்த படத்தின் தயாரிப்பாளர் நாயகன் இசையமைப்பாளர் எடிட்டர் என அனைத்து பொறுப்புகளையும் ஏற்றுள்ளார் விஜய் ஆண்டனி.. இப்படி ஒரு அப்பா இருப்பாரா கிடைக்க மாட்டாரா என்கிற அளவுக்கு விஜய் ஆண்டனி உணர்வுகளை மென்மையாக கடத்தி இருக்கிறார்..
ஆனால் இதெல்லாம் ஓவர் பா என்பது போல சில காட்சிகளில் செயற்கை தனம் இருப்பதையும் காண முடிகிறது.. (முக்கியமாக ரவுடி கொலை முயற்சி காட்சி..)
அயோத்தி படத்தில் நடிப்பில் அழவைத்த ப்ரீத்திஅஷ்ராணி இதில் நாயகி.. குழந்தை இருக்கிற அப்பனை காதலிக்கலாம்.. பொண்டாட்டி இருக்கிற கணவனை தான் காதலிக்க கூடாது என ஸ்ரீஜாவிடம் பிரீத்தி சொல்லும் போது கை தட்ட வைக்கிறார்..

டெக்னீசியன்ஸ்…
ஏன் இந்த பெண்ணுக்கு உன் மீது லவ் வந்தது என்ற பாடல் மற்றும் அப்பாவுக்கு அடுத்து கணவன் தான் என்ற பாடலும் ரசிக்க வைக்கிறது.. பின்னணி இசையிலும் கவர்கிறார் விஜய் ஆண்டனி..
விஜய் ஆண்டனி நண்பர்களாக வரும் ஜென்சன் திவாகர் மற்றும் முருகானந்தம் நடிப்பு ரசிக்க வைக்கிறது.. முக்கியமாக இந்த சீரியஸ் படத்தில் முருகானந்தம் காமெடி காமெடி கலக்கல் ரகம்..
இனி கிளைமாக்ஸ் இப்படி இருக்கும் என்று நாம் யூகிக்கும்போது கோர்ட் காட்சியை வைத்து படத்தின் கதையோட்டத்தை மாற்றி இருக்கிறார் இயக்குனர் மூ மாறன்.. நம்ப முடியாத சில லாஜிக் இருந்தாலும் இது வட இந்தியாவில் நடந்த ஒரு உண்மை சம்பவத்தின் தொகுப்பு என்பதால் இதை மறுக்க முடியவில்லை..
Appa Kutty movie review
—

