ஓம் விமர்சனம் 3.75/5.. செம்மரக் கடத்தலும்.. செங்குருதி காவலர்களும்…

ஓம் விமர்சனம் 3.75/5.. செம்மரக் கடத்தலும்.. செங்குருதி காவலர்களும்…

 

ஓம் விமர்சனம் 3.75/5.. செம்மரக் கடத்தலும்.. செங்குருதி காவலர்களும்…

 

அமரன் படத்தின் மூலம் தேசிய விருதை வென்ற இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் வந்திருக்கும் திரைப்படம் ஓம்.. இதில் மம்மூட்டி, தனுஷ், சாய்பல்லவி, ஸ்ரீ லீலா, இந்திரன்ஸ், நவாசுதீன் உள்ளிட்ட நட்சத்திர பட்டாளம் இணைந்து இருப்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.. படம் எப்படி என்பதை பார்க்கலாம்…

ஸ்டோரி…

ஆந்திர மாநிலத்தில் ஒரு பகுதியில் செம்மரங்கள் தமிழர்களால் வெட்டப்படுகிறது.. இதனை கடத்தி துபாய் நாட்டில் விற்று கோடிக்கணக்கில் சம்பாதிக்கிறார் மம்முட்டி.. ஆனால் மம்மூட்டி இடம் இருந்து இந்த செம்மர கடத்தல் மரங்களை வாங்குபவர் யார் என்பதை அறிய போலீஸ் வலை வீசி தேடி வருகின்றனர்..

இதில் முக்கிய போலீஸ் அதிகாரியாக சாய் பல்லவி செயல்படுகிறார்.. இவரின் கீழ் பணி புரியும் அண்டர் கவர் காப் தனுஷ் மெல்ல மம்மூட்டியின் கூட்டத்தில் நுழைகிறார்..

அதன் பிறகு என்ன நடந்தது.? அந்த கடத்தல் மன்னனை கண்டுபிடித்தார்களா? தனுஷின் சுய ரூபத்தை கண்டுபிடித்தாரா மம்மூட்டி? சாய் பல்லவியின் திட்டம் நிறைவேறியதா? OM ஆப்ரேஷன் மோல் ப்ராஜெக்ட் நிறைவேறியதா? என்பதெல்லாம் அதிரடியான திரைக்கதை..

கேரக்டர்ஸ்…

ஓம் தொடங்கி ஆறு மணி நேரம் அப்பாவி இளைஞன் போல் வரும் தனுஷ் ஒரு கட்டத்தில் போலீஸ் என தெரிய வரும்போது ரசிகர்களின் பல்ஸ் எகிறும்.. தன் பணியை மனைவி ஸ்ரீ லீலாவிடம் சொல்ல முடியாமல் தவிக்கும் காட்சிகளிலும்.. தன் தந்தை இந்திரன்சை இழந்துவிட்ட துடிக்கும் காட்சிகளின் கண் கலங்க வைக்கிறார் நடிப்பு அசுரன் தனுஷ்..

நேர்மையான மம்முட்டியிடம் பழகி குற்ற உணர்ச்சியில் தவிக்கும் தனுஷ் ஒரு கட்டத்தில் ஆக்ஷனிலும் அசத்தல்…

நீண்ட நாட்களுக்குப் பிறகு தமிழில் மம்மூட்டி.. பிடிக்காத செம்மரக்கடத்தலை செய்யும் போதும்.. மனைவிக்காக ஏங்கும் காட்சிகளிலும்.. தனுஷ் மீது பாசம் காட்டும் காட்சிகளிலும் அசத்தலான நடிப்பை கொடுத்திருக்கிறார்..

மம்மூட்டி – தனுஷ் ஆகிய இரு மாபெரும் நடிகர்களுடன் போட்டி போட்டு சாய் பல்லவி சபாஷ் பெறுகிறார்.. கடமை என்றால் குடும்பத்தை கூட கவனிக்காத ஒரு நேர்மையான காவலராக வாழ்ந்திருக்கிறார்.. கிளைமாக்ஸ் காட்சியில் சாய்பல்லவி யின் முடிவு கண்கலங்க வைக்கும்..

கணவனின் வேலை என்ன என்று கூட தெரியாமல் மாமனாரிடம் சண்டை போடும் ஸ்ரீ லீலாவின் நடிப்பு சிறப்பு.. ஆனால் இவரது வட்டார பேச்சு இவரது கேரக்டர் படத்திற்கு பொருந்தவில்லை..

பேரனுக்காக உருகும் தாத்தா இந்திரன்ஸ் தாத்தாவுக்காக உருகும் பேரன் என இருவரும் நடிப்பில் சிறப்பு..

டெக்னீசியன்ஸ்…

இசையமைப்பாளர் சாய் அபயங்கர்.. வீழா வீரா பாடல் அனைவரின் பேவரைட் சாங்காக அமைந்துள்ளது.. பின்னணிக்கு இசையில் மிரட்டி இருக்கிற சாய் அபயங்கர்.. இவரது பின்னணி இசை படத்தின் விறுவிறுப்பை கூட்டியிருக்கிறது..

இடைவேளை வரை மெதுவாக செல்லும் திரைக்கதை இடைவேளைக்குப் பிறகு வேகமாக சென்றாலும் படத்தின் நீளம் பெரும் குறை..

படத்தின் தன்மை மாறாமல் தெலுங்கு மொழியிலும் ஹிந்தி மொழியிலும் பல காட்சிகள் இருக்கிறது… ஆனால் ஹிந்தி வசனங்கள் வரும்போது கீழே சப்டைட்டில் போடவில்லை.. அதை கவனித்திருக்கலாம்.

செம்மரக் கடத்தலில் புஷ்பா உள்ளிட்ட பல படங்களை பார்த்து இருக்கிறோம். இதில் கடத்தல் மட்டுமல்லாமல் குடும்ப செண்டிமெண்டையும் இணைத்து அதில் போலீஸ் போராட்டத்தையும் உணர்வு பூர்வமாக காட்டியிருக்கிறார் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி..

 

Dhanush in OM movie review