தெரியாம பேசாதீங்க.. அவ்ளோ கஷ்டப்பட்டு இருக்கோம்.. – ‘மூக்குத்தி அம்மன் 2’ விழாவில் சுந்தர் சி

தெரியாம பேசாதீங்க.. அவ்ளோ கஷ்டப்பட்டு இருக்கோம்.. – ‘மூக்குத்தி அம்மன் 2’ விழாவில் சுந்தர் சி

 

தெரியாம பேசாதீங்க.. அவ்ளோ கஷ்டப்பட்டு இருக்கோம்.. – ‘மூக்குத்தி அம்மன் 2’ விழாவில் சுந்தர் சி

 

சுந்தர். சி இயக்கத்தில் நயன்தாரா, ரெஜினா கேசண்ட்ரா, ஊர்வசி உள்ளிட்டோர் நடிப்பில் உருவான படம் ‘மூக்குத்தி அம்மன் – 2’ மஹாசக்தி..

மேலும் கன்னட நடிகர் துனியா விஜய், யோகி பாபு, கருடா ராம், சிங்கம் புலி, அபினயா, அஜய் கோஷ், மைனா நந்தினி, சுவாமிநாதன் ஆகியோர் நடித்துள்ளனர்.

www.rightnewsraja.com

சுந்தர் சி யின் ஆஸ்தான இசையமைப்பாளர் ஹிப் ஹாப் ஆதி இசையமைத்துள்ளார்.. இந்தப் படத்தை வேல்ஸ் ஃபிலிம்ஸ் நிறுவனம்.. குஷ்புவின் அவ்னி சினிமாஸ் மற்றும் நயன்தாராவின் ரவுடி பிக்சர்ஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன..

சென்னை செம்பரம்பாக்கம் வேல்ஸ் திரையரங்கில் நயன்தாராவுக்கு 60 அடி உயர கட்டவுட் வைக்கப்பட்டுள்ளது. இது தமிழ்நாட்டில் ஒரு நடிகைக்கு வைக்கப்பட்டுள்ள உயரமான கட்டவுட் எனக் கூறப்படுகிறது.

கடந்த 21ஆம் தேதி ‘வேர்ல்ட் ஆஃப் மகாசக்தி’ எனும் முன்னோட்டம் வெளியானது.

இந்தப்படம் வருகிற நவம்பர் 6 ஆம் தேதி தீபாவளி வெளியீடாகத் வருகிறது.

www.rightnewsraja.com

இதன் முன்வெளியீட்டு நிகழ்வு சென்னையில் நடைபெற்றது. இதில், சுந்தர்., குஷ்பு, ஹிப்ஹாப் ஆதி, நடிகை இனியா, நடிகர் யோகி பாபு உள்ளிட்டோர் கலந்துக் கொண்டனர்…

வழக்கம் போல், நடிகை நயன்தாரா நிகழ்வில் பங்கேற்கவில்லை.. அவர் ரஜினியுடன் ‘தர்மன்’ பட ஷூட்டிங்கில் பங்கேற்பதால் இங்கு வரவில்லை என கூறப்பட்டது..

இந்த நிகழ்வில் நடிகர் யோகி பாபு பேசும்போது…

சுந்தர் அவர்களிடம் குழந்தையாக வந்தேன்.. இப்போ முடி நரைத்து விட்டது.. இப்போது எனக்கு மூன்று குழந்தை ஆகிவிட்டது.. குழந்தை வரம் இல்லாமல் எத்தனையோ பேர் இருக்கிறார்கள்.. அது ஒரு மிகப்பெரிய பாக்கியம்.. கடவுள் அருளால் இந்த படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்.. ” என்றார்..

நடிகை ஊர்வசி பேசும்போது…

எனக்கும் குஷ்பூவுக்கும் நீண்ட காலம் பழக்கம்.. நாங்கள் இருவரும் நெருங்கிய தோழிகள்.. முதல்முறையாக குஷ்பூவை சந்தித்தபோது அவரது பெயரே எனக்கு ஆச்சரியமாக இருந்தது.. குஷ்பூ என்றால் நறுமணம் என்று பொருள்.

www.rightnewsraja.com

ஆனால் நான் அவரை அன்று முதல் குப்புசாமி என்று தான் அழைப்பேன்.. என் அம்மாவுக்கு குஷ்பூ பிடிக்கும்.. அவர் அம்மாவுக்கு என்னை பிடிக்கும்.. ” அம்மன் அருளால் இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெறும்.. என்று பேசினார் ஊர்வசி..

நடிகை குஷ்பு பேசும்போது…

ஊர்வசி என்னை குப்புசாமி என்று அழைப்பார்.. நான் அவரை பொடி என்று அழைப்பேன்.. எனக்கு பிறந்தது இரண்டு குழந்தைகள் நான் தத்தெடுத்த பிள்ளை என் கணவர் சுந்தர்.. ” என்று பேசினார் குஷ்பூ..

ஹிப்ஹாப் ஆதி பேசும்போது..

இந்த ட்ரெய்லரில் நயன்தாராவை மட்டும் காட்டி இருக்கிறோம். காட்டாத நிறைய விஷயங்கள் இருக்கு…

பொதுவாக என் படங்களில் உள்ள பாடல்கள் ஒவ்வொன்றாக சிங்கிளாக வெளியிடுவோம்.. ஆனால் இந்த படத்தில் பாடல்களை வெளியிடவில்லை.. இதற்காக பின்னணி இசை ட்ராக் அதிக அளவில் உடைத்திருக்கிறோம்.. ஒரு வித்தியாசமான அனுபவத்தை இந்த படம் கொடுக்கும்..” என்றார்..

இந்தப் படத்தின் இயக்குனர் சுந்தர் சி பேசும்போது…

மூக்குத்தி அம்மன் முதல் பாகத்திற்கும் இந்த இரண்டாம் பாகத்திற்கும் எந்த தொடர்பும் கிடையாது.. இந்தப் படத்திற்காக இரண்டு வருடங்களாக மிகப்பெரிய உழைப்பை கொடுத்திருக்கிறோம்..

வழக்கமான அம்மன் படம் என்றால் குழந்தையை, ஊரைக் காப்பாற்றும் கதையாக இருக்கும். ஆனால், மூக்குத்தி அம்மன் – 2 படம் அம்மன் தன்னையே காப்பாற்றும் கதையாக உருவாகியுள்ளது

இந்தப் படத்தின் டிரைலர் காட்சிகள் பார்த்தபோது கிராபிக்ஸ் காட்சிகளை சிலர் கிண்டல் செய்தனர்.. எதையும் தெரியாமல் பேசாதீர்கள்.. இந்தப் படத்திற்காக 300 தமிழகத்தைச் சேர்ந்த வி எஃப் எக்ஸ் கலைஞர்கள் ஒன்றரை வருடங்களாக உழைத்துள்ளனர். வெளிநாட்டு கலைஞர்களை வைத்து கிராபிக்ஸ் காட்சிகளை உருவாக்கவில்லை..

www.rightnewsraja.com

சில இடங்களில் மட்டும் ஏ ஐ தொழில் நுட்பத்தை பயன்படுத்தி இருக்கிறோம். அது வைத்து கூட ஒரு போட்டி வைக்கலாம் என்று நினைத்தேன்.. ஆனால் அதற்கு நாங்கள் செலவிட நேரமில்லை..

இந்த தீபாவளிக்கு ‘மூக்குத்தி அம்மன்’ திரைப்படம் மாபெரும் விருந்தாக அமையும்.. அம்மனின் அருள் செழிக்கட்டும்.. ” என்று பேசினார் சுந்தர்

 

Mookuthi Amman 2 Mahasakthi Grand Event at Chennai