தமிழக இடைத்தேர்தலில் 2 தொகுதிகளிலும் தவெக வெற்றி..; புதுச்சேரியில் என்.ஆர். காங். வெற்றி
தமிழக இடைத்தேர்தலில் 2 தொகுதிகளிலும் தவெக வெற்றி..; புதுச்சேரியில் என்.ஆர். காங். வெற்றி
தமிழ்நாட்டில் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் (தவெக) கூட்டணி ஆட்சி அமைந்த பிறகு நடைபெறும் முதல் இடைத்தேர்தல் இது..
இந்த மதுராந்தகம் மற்றும் தாராபுரம் இரண்டு தொகுதிகளிலும் அதிமுக வேட்பாளர்கள் வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினராக தேர்ச்சி பெற்றிருந்தனர்..
ஆனால் இவர்கள் இருவரும் கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்குள் தங்களது சட்டமன்ற எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தனர்..
அதன் பின்னர் இருவரும் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தனர்.. அதன் பிறகு வரும் முதல் இடைத்தேர்தல் இது என்பதால் அனைவரது எதிர்பார்ப்பும் இந்த இரு தொகுதிகளின் மீதும் இருந்தது..
எம்ஜிஆர் காலம் தொடங்கி ஜெயலலிதா காலத்தில் கூட இந்த இரு தொகுதிகளும் அதிமுகவின் கோட்டையாக இருந்தது.. இந்தத் தொகுதிகளில் இரண்டாவது இடத்தை திமுக பெற்று இருந்தது.
மூன்றாவது இடத்தில் TVK கட்சி இருந்தது எனவே தாவைக்கா போட்டியிட்டால் தவெக சார்பில் இந்த இரு வேட்பாளர்களும் போட்டியிட்டால் அவர்களுக்கு வெற்றி வாய்ப்பு கிடைக்குமா.? என்று தமிழக மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு காத்திருந்தது..
மேலும் தவெக அரசின் சுமார் 4 மாத கால ஆட்சிக்கான முக்கிய மதிப்பீடாகப் இந்த இரு தொகுதியில் வெற்றி வாய்ப்பு பார்க்கப்படுகிறது..
தாராபுரம் இடைத்தேர்தலின் 23 சுற்று வாக்கு எண்ணிக்கையும் முடிந்து, தவெக வேட்பாளர் சத்தியபாமா வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளார்.
66,841 வாக்குகள் பெற்று, 9,471 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் சுகன்யாவை (57,370) வீழ்த்தினார். அதிமுக வேட்பாளர் பானுமதி 45,280 வாக்குகள் பெற்று மூன்றாம் இடத்தை பிடித்தார்..
நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கார்த்திகா 5268 வாக்குகளைப் பெற்றுள்ளார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் லட்சுமணன் 1157 வாக்குகள் பெற்றுள்ளார்.
மதுராந்தகம் தொகுதி நிலவரம்..
தவெக – மரகதம் குமரவேல்: 74,048
திமுக – பரந்தாமன்: 54,008
அதிமுக – கனிதா சம்பத்: 47,450
நாதக – ஜானகிராமன்: 2,709
சிபிஎம் – பி.சுகந்தி: 1,986
புதுச்சேரியில் உள்ள தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தலில் என்.ஆர் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் அஷோக் ஆனந்த் வெற்றி பெற்றுள்ளார்.
தமிழகத்தில் 25 ஆண்டுகளுக்கு பிறகு ஒரு இடைத்தேர்தலை பணம் கொடுக்காத தேர்தலாக மாற்றி, மிகப் பெரிய வெற்றி பெற்றிருக்கிறார் முதல்வர் விஜய்’ என தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்..
TVK 2 candidates won in By Election of Tamilnadu
———–

