த எ க..; புதிய அரசியல் கட்சி தொடங்கும் நடிகர் தனுஷ்..; விரைவில் அறிவிப்பு

த எ க..; புதிய அரசியல் கட்சி தொடங்கும் நடிகர் தனுஷ்..; விரைவில் அறிவிப்பு

 

த எ க..; புதிய அரசியல் கட்சி தொடங்கும் நடிகர் தனுஷ்..; விரைவில் அறிவிப்பு

 

 

சமீப காலமாக நடிகர் தனுஷ் தன் ரசிகர் மன்ற நிர்வாகிகளை சந்தித்து வருகிறார் அவர்களிடம் புகைப்படம் எடுத்துக் கொண்டு வருகிறார்… சில மாதங்களுக்கு முன்பு நடந்த நிகழ்வில் தனுஷின் பேச்சு அரசியல் கலந்து இருந்தது..

இதற்கு முன்பு…நான் போயஸ் கார்டனில் வாழக்கூடாதா. வீடு கட்டக்கூடாதா..?என்றெல்லாம் தனுஷ் பேசிய பேச்சும் விவாத பொருளாக மாறியது..

மேலும் சென்னையில் தான் படித்த பள்ளிக்கு புதிய கட்டிடம் கட்டிக் கொடுத்துள்ளார்.. விளையாட்டுப் போட்டிகளில் வென்ற வீராங்கனைகளை அழைத்து பாராட்டு தெரிவித்து வருகிறார்..

இப்படியாக பலரது கவனத்தை தன் பக்கம் திருப்பி வருகிறார் நடிகர் தனுஷ்.. இதன் மூலம் அவரது அரசியல் ஈடுபாடு பல வகைகளில் வெளிப்பட்டு வருகிறது..

சமீபத்தில் தனது ரசிகர் மன்றத்தை மாவட்ட ரீதியாகவும் தொகுதி வாரியாகவும் பிரித்து மாவட்ட தலைவர்களை நியமித்தார். இதனிடையில் புதிய அரசியல் கட்சியின் பெயரை பதிவு செய்ய உள்ளதாக தகவல்கள் வந்துள்ளன..

தனது கட்சிக்கு ‘தமிழக எழுச்சிக் கழகம்’ என்று தனுஷ் பெயர் சூட்டவுள்ளாராம்.

விரைவில் பொதுவெளியில் தனது அரசியல் நிலைப்பாட்டை தனுஷ் அறிவிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

 

Dhanush new political party name Tamilaga Yezhuchi Kazhagam

Related articles