JAILER 2 – ரஜினியின் 50 வருட சினிமா வாழ்வில் இதுதான் ஃபர்ஸ்ட் டைம்…!?
JAILER 2 – ரஜினியின் 50 வருட சினிமா வாழ்வில் இதுதான் ஃபர்ஸ்ட் டைம்…!?
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘ஜெய்லர் 2’. இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க நெல்சன் இயக்கியுள்ளார்..
ஜெய்லர் முதல் பாகத்தில் ரஜினியுடன் இணைந்த நட்சத்திரங்கள் ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, மிர்னா இதிலும் இணைந்துள்ளனர்..
கேமியோ ரோல்களில் மோகன்லால் மற்றும் சிவராஜ்குமார் ஆகியோர் டிரெய்லர் காட்சிகளில் இடம்பெற்றுள்ளனர்..
ஆனால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஹிருத்திக் ரோஷன் மற்றும் விஜய் சேதுபதி கேரக்டர்கள் ட்ரெய்லரில் இடம் பெறவில்லை
புதியதாக சேர்க்கப்பட்ட நட்சத்திரங்கள்…
எஸ்.ஜே.சூர்யா, வித்யா பாலன், மிதுன் சக்ரவர்த்தி, சூரஜ் வெஞ்சாரமூடு, அபிக்ஷா போர்வால், அண்ணா ராஜன், ஹக்கிம் ஷா, பகவதி பெருமாள், மேகனா ராஜ், ஷம்னா காசிம் மற்றும் ஜதின் சர்னா & பலர்..
அனிருத் இசையமைக்க விஜய் கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவையும், ஆர். நிர்மல் படத்தொகுப்பையும் , டி.ஆர்.கே. கிரண் கலை இயக்கம், பல்லவி சிங் மற்றும் முத்துல் ஹஃபீஸ் ஆடை வடிவமைப்பு ஆகியோர் தொடர்ந்துள்ளனர்.
சண்டைப் பயிற்சி இயக்குனர் சேத்தன் டி’சோசா இணைந்துள்ளார்..
‘ஜெயிலர் 2’ திரைப்படம் வழக்கமான திரையரங்குகள் மட்டுமின்றி IMAX திரைகளிலும் வெளியாகவுள்ளது.. ரஜினி 50 ஆண்டு கால திரைப்பயணத்தில் IMAX-ல் வெளியாகும் முதல் திரைப்படம் இது என்பது குறிப்பிடத்தக்கது..

ஜெயிலர் 2 திரைப்படத்திற்கு சென்சாரில் ‘UA 16+’ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.
‘ஜெயிலர் 2’ திரைப்படம் 165 நிமிடங்கள் 18 வினாடிகள் (2 மணி நேரம் 45 நிமிடங்கள் 18 வினாடிகள்) ஓடக்கூடியதாக உருவாக்கப்பட்டுள்ளது..
Jailer 2 movie in imax and Censor Running Time news updates

