சிக்மா விமர்சனம்…
சிக்மா விமர்சனம்…
ஸ்டோரி…
கோடி கோடியாக பணம் ஒரு கண்டெய்னரில் இருக்கிறது.. (உடனே இது அரசியல் கதை என்று நினைக்க வேண்டாம்.. இது முழுக்க சூதாட்ட கதை.)
அந்த கண்டெய்னரை திறக்கும் ஒரு சாவி எப்படியோ வேறு வழியில் நாயகன் சுதீப் கிஷன் கைகளில் கிடைக்கிறது.. இதனை அறியும் வில்லன் கோஷ்டி நாயகனை துரத்துகிறது..
ஏற்கனவே லட்சக்கணக்கில் அப்பா வாங்கிய கடனை அடைக்க முடியாமல் தவிக்கும் ஹீரோ இதனை வைத்து பணம் சம்பாதிக்க திட்டம் போடுகிறார்..
அவர் ஆசை நிறைவேறியதா..? அவர் கடனை அடைத்தாரா.? வில்லன் கோஸ்ட்டி என்ன செய்தனர்..? என்பதெல்லாம் அதிரடியான திரைக்கதை..

கேரக்டர்ஸ்…
Sundeep Kishan – Lead
Faria Abdullah – Lead
Raju Sundaram
Sampath Raj
Shiv Panditt
Anbu Thasan
Yog Japee
Sheela Rajkumar
அப்பாவி ஹீரோ சுந்திப் கிஷன்.. ஒரு கட்டத்தில் அதிரடியாக சதுரங்க வேட்டை ஆடும் ஆட்டம் ரசிக்க வைக்கிறது.. ரொமான்ஸ் காட்சிகளை விட ஆக்ஷன் காட்சிகளில் தூள் கிளப்பி இருக்கிறார்..
வழக்கமான ஹீரோயின் கேரக்டரில் பஃரியா அப்துல்லா.. ஹீரோவுக்கு ஏற்ற உயரமான நடிகை..
வில்லன் ஷிப்பண்டிட்.. செம ஸ்டைலிஷ்.. ஹீரோ லுக்கில் இருக்கிறார்.. சம்பத்ராஜ் கம்பீரம் காட்டியிருக்கிறார்.. ஜோக் ஜே பி வில்லத்தனத்தில் மிரட்டி இருக்கிறார்..
அதுபோல ராஜூ சுந்தரம் & அன்புதாசன் உள்ளிட்ட கேரக்டர்கள் படத்திற்கு பலவீனம்.. காமெடி என்ற பெயரில் மொக்கை போட்டுள்ளனர்.. நாயகனின் பிளாஷ்பேக் அம்மாவாக ஷீலா ராஜ்குமார்.. அவரின் லைப்ரரி கான்செப்ட் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் கேரக்டர் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை…

டெக்னீசியன்ஸ்…
Music: Thaman S
Cinematography: Krishnan Vasant
Editor: Praveen K.L.
Art Director: Benjamin M
Stunts: Venkat & Silva
Lyricists: Vivek & Super Subbu
விஜய்க்கு பல சூப்பர் ஹிட் பாடல்களை கொடுத்தவர் இசையமைப்பாளர் தமன்.. தற்போது அவர் மகன சஞ்சய் இயக்கும் படத்திற்கு இசையமைத்திருக்கிறார்.. அதிரடியான பின்னணி இசை கொடுத்திருக்கிறார்.. பாடல்களும் தாளம் போட வைக்கிறது.. முக்கியமாக ஒரு பாடலுக்கு ஆடும் கேத்தரின் தெரசா ஆட்டம் ரசிக்க வைக்கிறது.. கேத்ரின் காஸ்டியூம் சூப்பர்..
கிருஷ்ணன் வசந்த் ஒளிப்பதிவு செய்து இருக்கிறார்.. தன் கேமரா கைவண்ணத்தில் பிரம்மாண்டமாக காட்டியிருக்கிறார்.. இது போன்ற சூதாட்ட கிளப் இங்கெல்லாம் இருக்கிறதா என்ற கேள்வி எழுகிறது..
தமிழக முதல்வர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் படத்தை இயக்கியிருக்கிறார்.. வெளிநாட்டில் டைரக்ஷன் படித்து வந்த அவர் ஹாலிவுட் ஸ்டைலில் படத்தை கொடுத்திருக்கிறார்..
ஏழ்மையான நாயகன் பணக்காரர் வில்லன் என வழக்கமான பார்முலாவை சொல்லி இருக்கிறார்.. ஆனால் நாயகனுக்கு வில்லனாக மாஸ் நடிகர்களை இறக்கி இருக்கலாம்.. வில்லன் கெத்து காட்டி இருந்தால் ஹீரோ இன்னும் மாஸ் காட்டிஇருப்பார்..
கேரக்டர் நடிகர் தேர்வில் சில தடுமாற்றங்கள் இருந்தாலும் ஒரு இயக்குனராக பிரம்மாண்டத்தை காட்டி சிக்மா படத்தின் மூலம் தன் இன்னிங்சை சினிமாவில் ஆரம்பித்து இருக்கிறார் ஜேசன் சஞ்சய்.. வாழ்த்துக்கள் ப்ரோ..

PRO: Suresh Chandra & Vamsi Shekar
Head of Lyca Productions: Tamil Kumaran
Director: Jason Sanjay
Producer: A. Subaskaran
Production: Lyca Productions
தாத்தா எஸ் ஏ சந்திரசேகர் வழியில் பட இயக்குனராக சஞ்சய் அறிமுகமாகி இருந்தாலும் தன் அப்பா விஜய் வழியில் கடைசியாக ஒரு பாட்டுக்கு ஆட்டமும் போட்டு இருக்கிறார்..
Sanjay in Sigma movie review

