அன்பில் அவன் விமர்சனம் 4/5… ஆக்ஷனில் அவன்.. ஆசையில் அவள்
அன்பில் அவன் விமர்சனம் 4/5… ஆக்ஷனில் அவன்.. ஆசையில் அவள்
ஸ்டோரி…..
அசோக் செல்வன் – ப்ரீத்தி முகுந்தன் இருவரும் காதல் திருமணம் செய்த ஜோடிகள்… காதலனுக்காக வசதியான வாழ்க்கையை விட்டு வந்தவள் ப்ரீத்தி..
தன் காதல் மனைவிக்காக அவளது இலட்சிய கனவை நிறைவேற்ற நினைக்கிறார்.. அதன்படி ஹோம் ஸ்டே Home Stay ஒரு வீட்டை வாங்கி அதில் சுற்றுலா பயணிகளை தங்க வைத்து அதன் மூலம் பிசினஸ் செய்ய நினைக்கின்றனர்..
ஆனால் ஏற்கனவே அந்த வீட்டிற்கு ஆசைப்படும் அந்த ஊர் எம் எல் ஏ.. அந்த ஊர் போலீஸ் மற்றும் வழக்கறிஞர் இணைந்து அசோக் செல்வனை எதிர்க்கின்றனர்… அவர்களை எதிர்த்து இவரால் அந்த கனவு வீட்டை வாங்க முடிந்ததா? தன் மனைவியின் ஆசையை நிறைவேற்ற முடிந்ததா? என்பதெல்லாம் யூகிக்க முடியாத அதிரடியான திரைக்கதை..

கேரக்டர்ஸ்…
அசோக் செல்வன் – சூர்யா
பிரீத்தி முகுந்தன் – இயல்
கதிர் பாலு – எம்.எல்.ஏ. ராஜநாயகம்
மஹா டெல்லி கணேஷ் – இன்ஸ்பெக்டர் தவசி
ரேவதி – ராணி பத்மினி
அசோக் செல்வன் – பிரீத்தி முகுந்தன் இருவரின் கெமிஸ்ட்ரி சூப்பர்.. இவர்களுக்கு ரொமான்டிக்காகவே ஒரு படம் எடுக்கலாம் என்கிற அளவுக்கு இருவரும் நெருக்கமாக நடித்துள்ளனர்.. ஒரு கட்டத்தில் அசோக் ப்ரீத்தி அடித்துக் கொள்ளும் காட்சி ஒரு ரியல் ஜோடியின் எதார்த்த சண்டையை நினைவுப்படுத்தும்..
அசோக் செல்வன் பிரீத்தி உள்ளிட்ட ஒரு சில முகநூல் தெரிந்திருந்தாலும் தெரியாத முகங்கள்… ஊர் எம் எல் ஏ… இவரது பாடி லாங்குவேஜ் & குரல் கூட மிரட்டல்..
டேனியல் பாலாஜி சாயலில் இருக்கும் போலீஸ் உள்ளிட்ட அனைவரும் மிரட்டலான நடிப்பை கொடுத்து யார் இவர்கள் என கேட்க வைக்கின்றனர்..
சாபுமோன் அப்துசமத் – வழக்கறிஞர் மார்ட்டின்… தமிழும் மலையாளமும் கலந்தும் பேசும் இவர் செம கெத்து நடிப்பு..

டெக்னீசியன்ஸ்…
இசை : கோவிந்த் வசந்தா
ஒளிப்பதிவு : கௌதம் ராஜேந்திரன்
படத்தொகுப்பு : செல்வா ஆர்.கே.
அனைத்தும் சிறப்பு..
சண்டைக்காட்சிகள் : பீட்டர் ஹெய்ன்
கதை : விக்னேஷ் ராஜா
திரைக்கதை : விக்னேஷ் ராஜா, ஆர். கார்த்திகேயன், அசோக் செல்வன்
மக்கள் தொடர்பு : யுவராஜ்
இயக்கம் : ஆர். கார்த்திகேயன்
தயாரிப்பு : கே. கருணாமூர்த்தி, அசோக் செல்வன், அபிநயா செல்வம்

அன்பில் அவன் என ரொமான்டிக்காக டைட்டில் இருந்தாலும் ஆக்ஷனில் அவன் என்றும் சொல்லும் அளவுக்கு அதிரடியான பல ஆக்ஷன் காட்சிகளை வைத்து மிரட்டி இருக்கிறார்…
முதல் பாதி முழுவதும் விறுவிறுப்பாக செல்லும் திரைக்கதை இடைவேளைக்குப் பிறகு ஜெட் வேகத்தில் பறக்கிறது.. முக்கியமாக ஆக்ஷன் பீட்டர் ஹெயின் பின்னி எடுத்திருக்கிறார்..
கார்த்திகேயன் இயக்கியிருக்கிறார்.. ஒரு ஹோம் வீடு அதனை சுற்றியுள்ள அரசியல் அந்த வீட்டிற்க்காக அடித்துக் கொள்ளும் எம்எல்ஏ என சாதாரண கதையாக இருந்தாலும் அதை எடுக்கும் விதத்தில் தான் சூப்பர் ஹிட் இயக்குனர் என இடம் நிரூபித்து இருக்கிறார்..
Anbil Avan movie review

