ஏழு கடல் ஏழு மலை விமர்சனம்… தீரா காதலைத் தேடும் சாகாவரம் பெற்றவனின் பயணம்
ஏழு கடல் ஏழு மலை விமர்சனம்… தீரா காதலைத் தேடும் சாகாவரம் பெற்றவனின் பயணம்
ஸ்டோரி…
ஒரு தீபாவளி தினத்தில் ரயிலில் பயணிக்கும் ஒரு சிறுவனுக்கு ஒரு தாய் கதை சொல்வதாக படம் தொடங்குகிறது… இது பற்றிய மூன்று நிமிட வீடியோ படம் ரிலீசுக்கு முன்பே youtube இல் வெளியாகியுள்ளது..
8000 வருடங்களாக வாழ்ந்து கொண்டிருக்கும் சாகாவரம் பெற்ற நிவின் பாலி ஒரு ரயிலில் பயணிக்கிறார்.. அவர் தன் காதலியை தேடி பயணித்துக் கொண்டிருக்கிறார்.. ரயில் ஓட தொடங்கிய நேரத்தில் திடீரென என்ட்ரி கொடுக்கிறார் சூரி…
எட்டு வருடங்களாக வெளிநாட்டில் வேலை செய்த ஒருவர் தீபாவளி தினத்தில் தன் மகனை காண ஆசையுடன் ஓடி வந்து ட்ரெயினில் பயணிக்கிறார்.. அந்த பெட்டியில் நிவின் சூரியைத் தவிர ஒரு எலியும் உண்டு..
தவறுதலாக நிவின் பாலியை தட்டி எழுப்பி விடுகிறார் சூரி.. இதனால் தன் கனவு கலைந்த ஆவேசத்தில் அவருக்கு பல தொல்லைகளை கொடுக்கிறார்…
மேலும் அந்த எலியை சூரி தொந்தரவு செய்ய உன் மகனைப் பார்க்க வேண்டும் என்றால் அந்த எலி தொந்தரவு செய்யாதே.. உன் மகனும் ஒரு உயிர் தான்.. எலியும் ஒரு உயிர்தான் என அதற்கு ஆதரவாக நிற்கிறார் நிவின்..
என் மகனின் உயிரும் எலியின் உயிரும் ஒன்றா என்று கேட்கிறார் சூரி..
இப்படியான இவர்களின் மோதலில் நடக்கும் சம்பவங்கள் தான் திரைக்கதை..

கேரக்டர்ஸ்…
நிவின் பாலி – சூரி – அஞ்சலி – எலி..
நீண்ட தலை முடி தாடி ஆக்ரோஷம்… இந்த உலகத்தில் எல்லா உயிரும் ஒன்றுதான் அனைத்திற்கும் வாழும் உரிமையுண்டு.. என நிவின் பாலி தன் கேரக்டரை நிமிரச் செய்திருக்கிறார்..
பெரும்பாலும் புராணக் கதைகளில் ஒரு சாகாவரம் பெற்றவன் அனைத்து உயிர்களையும் கொன்று அசுரத்தனமாக நடந்து கொள்வான்.. ஆனால் சாகாவரம் பெற்ற நிவின் பாலி அனைத்து உயிர்களுக்கும் மதிப்பளிப்பது வாழ்வது (இதுவே) முதல் முறை..
சூரி கதை நாயகனா வில்லனா.? காமெடி.? என்று கேட்கும் வகையிலேயே தன் கேரக்டரை வெளிப்படுத்தி இருக்கிறார்.. திடீரென மரணத்திற்கு பயந்து மன்னிப்பு கேட்பதும் திடீர் என ஆவேசம் கொண்டு எழுவதும் என சிறப்பான நடிப்பில் சூரி..
அழகு தேவதையாக அஞ்சலி.. வெள்ளை உடையில் வந்து நம் மனங்களை கொள்ளை அடித்துக்கிறார்..
நிஜ எலியை பயன்படுத்தி அதற்கும் சில காட்சிகளை வைத்திருக்கிறார் இயக்குனர் ராம்… எலி குஞ்சுகளை காணும் போது நமக்குள் ஒரு சின்ன பரவசம் ஏற்படும்..

டெக்னீசியன்ஸ்…
Writer & Director – Ram
Starring – Nivin Pauly, Anjali, Soori
Producer – Suresh Kamatchi
Music – Yuvan Shankar Raja
Additional Music – Santhosh Dhayanidhi
DOP – N K Ekhambram
Editor – Mathi VS
PRO – A. John
Stills – Jaikumar Vairavan
யுவன் ஷங்கர் ராஜா – சந்தோஷ் தயாநிதியின் இசை கூட்டணி.. பாடல்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதம்.. ‘யாரோ நீ… மாயமோ…’…. ‘கெஞ்சுறேன்.. கெஞ்சுறேன்…’.. ‘குறிஞ்சி மலர்களை பறிக்க ஆளில்லை…’ உள்ளிட்ட பாடல்களும் வரிகளும் நம்மை மெய்மறக்க செய்கிறது..
ஒளிப்பதிவாளர் ஏகாம்பரம்… தனுஷ்கோடி கடலழகை அஞ்சலியை விட அழகாக காட்டியிருக்கிறார்.. ஒரு ரயில் பெட்டிக்குள் நடக்கும் கதையை இரண்டு மணி நேரத்திற்கு மேலாக சொல்ல முடியும் என்றால் அது ஒளிப்பதிவாளரின் கைவண்ணம்.. பல கோணங்களில் படமாக்கி நம்மையும் ரயிலில் பயணிக்க வைக்கிறார்..
மூன்று காலகட்டங்களில் நடக்கும் நிவினின் காதல் கதைகளும் அது தொடர் உரையாடல்களும்.. கதை சொல்லலாக இந்த ரயில் பயணம் தொடர்கிறது..
ஐந்து வருடத்தில் 10 காதலை தேடும் இந்த சமூகத்தில்… ஆயிரம் ஆண்டுகளாக தன் காதலியை தேடும் ஒருவன் மூலம் காதலின் மகத்துவத்தை சொல்லி இருக்கிறார் இயக்குனர் ராம்…
ரயிலில் மாட்டிய எலி, ஆதி மனிதன் பெருமை, முயல் முதலை குரங்கு விலங்குகளின் கதைகள் என குழந்தைகளுக்கும் கதை சொல்லி அவர்களை கவர்ந்து விடுகிறார் ராம்..
Yezhu Kadal Yezhu Malai movie review

