வெங்கட் பிரபுவால் வெடித்த கங்கை அமரன்..; சிக்கலைத் தீர்த்த சிவகார்த்திகேயன்
வெங்கட் பிரபுவால் வெடித்த கங்கை அமரன்..; சிக்கலைத் தீர்த்த சிவகார்த்திகேயன்
தமிழ் சினிமாவில் சூப்பர் ஹிட் இயக்குனர்களில் ஒருவர் வெங்கட் பிரபு..
வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்த கோட் திரைப்படத்தில் ஒரு கெஸ்ட் ரோலில் நடித்திருந்தார் சிவகார்த்திகேயன்..
அப்போதே வெங்கட் பிரபுவின் அடுத்த பட ஹீரோ சிவகார்த்திகேயன் என்று பேசப்பட்டது.. இந்த நிலையில் ராதிகா நடிப்பில் உருவான தாய் கிழவி என்ற படத்தை தயாரித்திருந்தார் சிவகார்த்திகேயன்.. இந்த படத்தை சிவக்குமார் முருகேசன் என்பவர் இயக்கியிருந்தார்..
இந்த படத்தை தொடர்ந்து மீண்டும் சிவக்குமார் முருகேசன் உடன் கூட்டணி வைத்திருந்தார் இந்த முறை நடிகராக..
இவர்கள் இணையும் ‘சேயோன்’ திரைப்படத்தை கமல்ஹாசன் தயாரிக்கிறார்..
இந்த நிலையில் வெங்கட் பிரபுவின் தந்தையும் பிரபல இயக்குனருமான கங்கை அமரன் ஒரு பேட்டியில்… ஒரு முன்னணி நடிகர் ஒருவர் தன்னுடைய மகனுக்கு கால்சீட் தருவதாக சொல்லி ஏமாற்றிவிட்டார்.. அவர் அடுத்தடுத்த படங்களில் நடிக்க சென்று விட்டார் என்று கூறியிருந்தார்..
இதனால் சமூக வலைத்தளங்களில் தீயாக பற்றிக் கொண்டது..
தற்போது. வெங்கட் பிரபு தன் X பக்கத்தில் சிவகார்த்திகேயன்.. தனக்கு தம்பி முறை ஒரு நண்பர்.. விரைவில் நாங்கள் இணைந்து பணிபுரிவோம்..
ஒரு தந்தையாக தன் மகனுக்காக தன் ஆதங்கத்தை தெரிவித்து இருந்தார் (அப்பா கங்கை அமரன்) எனக் குறிப்பிட்டு இருந்தார்..
இந்த நிலையில் சிவகார்த்திகேயன் வெங்கட் பிரபுக்கு விளக்கம் அளித்துள்ளார்..
அந்த பதிவில்.. நாமெல்லாம் ஒரே குடும்பம்.. இதற்கு ஏன் நீங்கள் விளக்கம் கொடுத்து கொண்டு இருக்கிறீர்கள்… விரைவில் நாம் இருவரும் இணைந்து பணிபுரிவோம்” என சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.
இத்துடன் இந்த பிரச்சனை தீர்த்து வைக்கப்பட்டுள்ளது..
Sivakarthikeyan solved issue of Venkat Prabu movie call sheet

