அமீர் – ஸ்வாசிகா – அனிஷ்மா இணையும் ‘மாகாளி’ படத்தை தயாரிக்கும் மாரி செல்வராஜ்

அமீர் – ஸ்வாசிகா – அனிஷ்மா இணையும் ‘மாகாளி’ படத்தை தயாரிக்கும் மாரி செல்வராஜ்

 

அமீர் – ஸ்வாசிகா – அனிஷ்மா இணையும் ‘மாகாளி’ படத்தை தயாரிக்கும் மாரி செல்வராஜ்

 

ஒரு பக்கம் பிசியான இயக்குனராக இருந்தாலும் மறுபக்கம் திரைப்படத் தயாரிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகிறார் இயக்குனர் மாரி செல்வராஜ்.

இவரது மனைவி திவ்யா அவர்களது ‘நவ்வி ஸ்டூடியோஸ்’ தயாரிக்கும் அடுத்தப் படம் குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. அயங்கரன் இண்டர்நேஷ்னல் நிறுவனத்தோடு இணைந்து தயாரிக்கின்றனர்..

அதன்படி ‘மாகாளி’ எனத் தலைப்பு வைக்கப்பட்டுள்ள இதில் அமீர் நாயகனாக நடிக்கிறார்.

அறிமுக இயக்குநர் அரவிந்த் இயக்குகிறார். இவர் மாரி செல்வராஜின் உதவி இயக்குநர் ஆவார்..

மேலும் ஸ்வாசிகா, அனிஷ்மா அனில் குமார், லெனின் பாரதி உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்கிறார்.

கூடுதல் தகவல்…

இளையராஜா இசையில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் ‘மஞ்சணத்தி’ என்ற படம் உருவாகி வருகிறது.. இதில் பிரியங்கா மோகன் மற்றும் கயாடு லோஹர் நடிக்கின்றனர். மாரி செல்வராஜின் மனைவி திவ்யா ‘நவ்வி ஸ்டூடியோஸ்’ சார்பில் இந்தப் படத்தை தயாரித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது..

 

Ameer starrer Maakaali in Mari Selvaraj production