ராவ் பஹதூர் விமர்சனம்.. தெலுங்கு மசாலா படத்திலிருந்து மாறுபட்ட பீரியட் காமெடி டிராமா
ராவ் பஹதூர் விமர்சனம்.. தெலுங்கு மசாலா படத்திலிருந்து மாறுபட்ட பீரியட் காமெடி டிராமா
ஸ்டோரி…
ராமப்பா ராவ் பஹதூர்.. இவர் ஓர் அரசு குடும்பத்து வாரிசு.. இவருக்கு மனைவி இருந்தாலும் இவருடன் பல ஆண்டுகளாக பேசாமல் அரண்மனையின் வேறு ஒரு அறையில் தங்கி வாழ்ந்து வருகிறார்..
ஒருநாள் ராவ் பஹதூர் உடல்நிலை மோசமடைந்து படுத்த படுக்கையாகிறார்..
அரச குடும்பத்து வாரிசுக்கு உடல்நிலை சரியில்லை என்ற தகவல் கிடைத்ததும் அவரது நண்பரும் மருத்துவருமான ஆச்சாரி அரண்மனைக்கு வருகிறார்..
அப்போது மரணப் படுக்கையில் இருக்கும் போது இதனால் வரை காத்து கிடந்த ஒரு ரகசியத்தை மருத்துவரிடம் சொல்கிறார் ராவ் பஹதூர்.. அந்த சந்தேகம் தீர்ந்தால் நான் நிம்மதியாக கண்ணை மூடி மரணம் அடைந்து விடுவேன் என்கிறார்..
இதனால் அதிர்ச்சி கொள்கிறார் ஆச்சாரி.. அப்படி என்ன ரகசியம் சொன்னார்? அந்த ரகசியத்தால் என்ன பிரச்சனை.? அதன் பின் விளைவுகள் என்ன.? என்பதெல்லாம் சுவாரஸ்யமான திரைக்கதை..

கேரக்டர்ஸ்…
ராமப்பா ராவ் பஹதூராகவே சத்யதேவ் வாழ்ந்திருக்கிறார் என்று சொன்னாலும் அது மிகையல்ல.. காரணம் உடல் மொழியிலும் கண் அசைவில் கூட சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.. இளமை முதுமை என இரண்டு தோற்றத்திலும் மாறுபட்ட நடிப்பை கொடுத்திருக்கிறார்..
நாயகனுக்கு இணையான ஒரு கேரக்டரில்
ஆச்சாரியாக வரும் விகாஸ் முப்பாலா பாராட்டுகளை பெறுகிறார்..
தீபா பிளேஷ்பேக்கில் வந்தாலும் நம்மை நடிப்பால் ஈர்த்து விடுகிறார்..
அச்சம்மாவாக பாலா பரசர்.. காமெடியில் கலக்கி இருக்கிறார்.. யார் இவர் என்று நம்ம கேட்க வைக்கிறார்..
இவர்களுடன் ஐபிஎஸ் அதிகாரியாக ஆனந்தும் தன் பங்குக்கு நடிப்பில் கலக்கி இருக்கிறார்..

டெக்னீசியன்ஸ்…
சமரன் சாயின் இசையமைக்க கார்த்திக் பர்மர் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.. 1960 காலகட்டங்களை ரசிகர்கள் கண் முன் நிறுத்த இவர்கள் பட்ட சிரமங்களை காட்சிகள் வெளிப்படுத்துகிறது.
கலை இயக்குநர் ரோஹன் சிங்கின் பணி சிறப்பு.. அரண்மனை இப்படி இருந்திருக்குமோ என்று வியக்க வைக்கிறார்..
இயக்குனரான வெங்கடேஷ் மஹா படத்தொகுப்பாளராகவும் பணி செய்திருக்கிறார்.. எனவே காட்சிகளை அதற்கு ஏற்ப கட்டிங் செய்து எடுத்திருக்கிறார்..
அரசர் குடும்பத்து கதை என்றாலும் அதை சீரியஸாக போர் என்றெல்லாம் காட்டாமல் மிகவும் நகைச்சுவையாக திரைக்கதை அமைத்து ரசிகர்களை ஈர்த்து இருக்கிறார் இயக்குனர்.. இடைவேளைக்கு முன்பை விட இடைவேளைக்கு பின்பு கதையில் கூடுதல் கவனம் எடுத்து இருப்பாரு போல படம் முழுக்க நகைச்சுவை அதிலும் கிளைமாக்ஸ் சிரிப்பலை…
ராஜ பரம்பரையின் சாதிவெறி ஆணவம் ஆகியவற்றையும் அடித்து நொறுக்கி சோசியல் மெசேஜ் கொடுத்திருக்கிறார்.. வழக்கமான தெலுங்கு மசாலா படத்திலிருந்து ஒரு மாறுபட்ட பீரியட் டிராமா படத்தை கொடுத்திருக்கிறார் இயக்குனர் வெங்கடேஷ் மஹா..
இந்தப் படத்தை பிரபல தெலுங்கு நடிகர் மகேஷ்பாபு வழங்குகிறார்..
Satya Dev starrer Rao Bahadur movie review
—-

