ஷூட்டிங் ஓவர்.. பர்த்டே பார்ட்டி ஸ்டார்ட்..; ‘அறுவடை’ ஆனந்தத்தில் கார்த்திகேசன்

ஷூட்டிங் ஓவர்.. பர்த்டே பார்ட்டி ஸ்டார்ட்..; ‘அறுவடை’ ஆனந்தத்தில் கார்த்திகேசன்

ஷூட்டிங் ஓவர்.. பர்த்டே பார்ட்டி ஸ்டார்ட்..; ‘அறுவடை’ ஆனந்தத்தில் கார்த்திகேசன்

 

படப்பிடிப்பு முடிந்த நிறைவில் பிறந்தநாள் கொண்டாடிய தயாரிப்பாளர் M.கார்த்திகேசன்!

 

 

ஒவ்வொருவருக்கும் பிறந்தநாள் கொண்டாடும்போது மகிழ்ச்சியான மனநிலை வேண்டும். ஏதோ ஒரு காரியத்தை செய்து முடித்து ஏதோ ஒரு நல்ல செயல் நிறைவு பெற்ற அந்த திருப்தியும் நிறைவும் இருந்தால் அந்த பிறந்தநாள் கொண்டாட்ட மகிழ்ச்சி இரட்டிப்பாகிவிடும்.அப்படி இரட்டிப்பு மகிழ்ச்சியில் இருக்கிறார் தயாரிப்பாளர் M.கார்த்திகேசன்.

‘லாரா’ திரைப்படத்தைத் தயாரித்த இவர், தொடர்ந்து எம். கே .ஃபிலிம் மீடியா ஒர்க்ஸ் பிரைவேட் லிமிடெட் மூலம் இரண்டாவது தயாரிப்பாக ‘அறுவடை’ திரைப்படத்தை உருவாக்கி வருகிறார்..

(மேலும் சில மாதங்களுக்கு முன்பு வெளியாகி மக்களின் ஆதரவை பெற்ற ஒண்டி முனியும் நல்ல பாடனும் என்ற படத்தில் வில்லனாகவும் நடித்திருந்தார்..)

ஒரு தயாரிப்பாளராக நடிகராக அறிமுகமான M. கார்த்திகேசன் முதன் முறையில் இயக்குநராக அவதாரம் எடுத்துள்ளார். அவர் இயக்கத்தில் உருவாகும் இந்த ‘அறுவடை’ திரைப்படத்தில் கதையின் நாயகனாக அவரே நடிக்க, அவருடன் கதாநாயகியாக சிம்ரன் ராஜ் நடிக்கிறார்.

முக்கிய கதாபாத்திரத்தில் பருத்திவீரன் சரவணன் நடிக்கிறார் .மேலும் ராஜசிம்மன், கஜராஜ், அனுபராமி கவிதா, தீபா பாஸ்கர் நடிக்கிறார்கள். இப்படத்திற்கு
பிரேம்குமார் முருகேசன் ஒளிப்பதிவு செய்துள்ளார். ரகு ஸ்ரவன் குமார் இசையமைத்துள்ளார். கே. கே. விக்னேஷ் படத்தொகுப்பு செய்துள்ளார்..

பாடல்கள் – கார்த்திக் நேத்தா, கார்த்திகேசன், கானா சக்தி.நடன இயக்குனர்-ஏஎம்ஜே,கலை இயக்குனர் – ஜோதின் விஷாக்-அனுப்ஷா,ஸ்டண்ட் – டிஆர்.இணை இயக்குனர்-ஜெயன்.

இப்போது நகரம் சார்ந்த டெம்ப்ளேட் திரைப்படங்களே அதிகம் வருகின்றன. அந்த வரிசையில் இடம் பெறாமல் கிராமத்தை நோக்கிச் சென்றுள்ளது படக் குழு.கிராமப்புற மக்களின் வாழ்வியல் கலாச்சாரம் மற்றும் பண்பாட்டைப் பிரதிபலிக்கும் வகையில் உருவாகியுள்ளது இந்த ‘அறுவடை’.

அறுவடைத் திருநாள் என்று அழைக்கப்படும் பொங்கல் திருநாளில் பொங்கல் விழா கொண்டாடி ‘அறுவடை’ படத்தின் படப்பிடிப்பை நிறைவு செய்தனர் .

படம் நிறைவடைந்த நிலையில் இன்று தனது பிறந்த நாளை மகிழ்ச்சியாகக் கொண்டாடிய இயக்குநர் M.கார்த்திகேசன் படத்தைப் பற்றிப் பேசுகையில்,

” ஒரு சாதாரண மனிதனின் வீட்டில் நடைபெறும் ஒரு சிறிய பிரச்சினை, மிகப்பெரிய சிக்கலாக உருவெடுத்து சமூகத்தை எப்படி சீரழிக்கிறது என்பதை விவரிக்கும் வகையில் இப்படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கிறது.

‘வினை விதைத்தவன் வினை அறுப்பான்’ என்ற ஒரு தத்துவத்தை மையப்படுத்தி இப்படத்திற்கு ‘அறுவடை’ என பெயரிட்டிருக்கிறோம். உலகெங்கும் ஜூலை மாதம் படத்தை வெளியிட உள்ளோம்.

படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில் இன்று ஜூன் மாதம் 14ஆம் தேதி பிறந்தநாள் கொண்டாடுவது எனக்குப் பெரிய மகிழ்ச்சியாக இருக்கிறது..

அந்த வகையில் இந்த ஆண்டு எனது பிறந்தநாள் எனக்குப் பெரிய திருப்தியையும் மகிழ்ச்சியையும் நிறைவையும் அளிக்கிறது.” என்றார்.

 

Karthikesan celebrated his birthday and Aruvadai Shoot wrapped

 

 

Related articles