மெய்யழகன் விமர்சனம்… உறவுகள் தொடர்கதை

மெய்யழகன் விமர்சனம்… உறவுகள் தொடர்கதை

 

 

 

மெய்யழகன் விமர்சனம்… உறவுகள் தொடர்கதை

 

ஸ்டோரி…

20 வருடங்களுக்கு முன்பு சொத்து பிரச்சனை காரணமாக தன் சொந்த ஊர் தஞ்சாவூரை விட்டு வெளியேறுகிறார் அரவிந்த்சாமி.

சென்னைக்கு வந்த பிறகு அம்மா அப்பா மனைவி மகள் என சுயநலமாக வாழ்ந்து கொண்டிருக்கும் அரவிந்த்சாமி ஒரு கட்டத்தில் தன் சித்தி மகள் திருமணத்திற்காக சொந்த ஊருக்கு செல்லும் நிலை ஏற்படுகிறது.

அப்போது கூட குடும்பத்தினர் இல்லாமல் தான் மட்டுமே சென்று திருமணம் வரவேற்பில் மட்டுமே கலந்து கொண்டு உடனே கிளம்ப வேண்டும் என முடிவோடு புறப்படுகிறார்.

அங்கு சென்ற பிறகு திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கார்த்தியை சந்திக்கிறார். இவரை அத்தான் அத்தான் என்று அன்போடு அழைத்து கார்த்தி பழகுகிறார்.. ஆனால் கார்த்தி யார் என்பது கூட தெரியாமல் வரவேற்பை நிறைவு செய்கிறார்.

இரவு சென்னை பஸ்ஸை தவறவிடும் அரவிந்த்சாமி வேறு வழி இல்லாமல் கார்த்தி மனைவி ஸ்ரீதிவ்யா வீட்டில் தங்க நேரிடும் சூழ்நிலை ஏற்படுகிறது.

இவர் எதிர்பாராத அனைத்து உபசரிப்புகளையும் கார்த்தி கவனித்துக் கொள்ள கார்த்தி யார் என்று கூட தெரியாமல் அவரிடம் எப்படி பழகுவது என்ற குற்ற உணர்வுடன் தங்குகிறார் அரவிந்த்சாமி.

கார்த்தி தனக்கு யார் என தெரியாமல் அரவிந்த்சாமி என்ன செய்தார் என்பதெல்லாம் உணர்வுப்பூர்வமான மீதிக்கதை

கேரக்டர்ஸ்…

Karthi – Meiyazhagan
Arvind Swamy – Arulmozhi
Raj Kiran – Chokkalingam
Sri Divya – Nandhini
Devadarsini – Hema
Jayaprakash – Arivudai Nambi
Sriranjani – Valliyammal
Ilavarasu – Ekambaram
Karunakaran – Jagadeesan
Saran Shakthi – Arulmozhi ( 18 Age )
Rachel Rebecca – Pookkarammaa
Indumathy – Latha

கார்த்தியை பார்த்தால் அடடா இப்படி ஒரு உறவு நம் கிராமத்தில் நம் உறவில் கிடைக்காதா என ஏங்க வைக்கிறார்.. எந்த உள்நோக்கமும் இல்லாமல் ஒருவருக்காக ஓடி வந்து உதவி செய்யும் குணம் ஒரு சிலருக்கே இருக்கும்.. அது இந்த மெய்யழகனை கண்டால் உணர முடியும்.

மனிதர்கள் மீது மட்டுமல்ல விலங்குகள் சமூகம் மீதும் தன்னால் அக்கறை காட்ட முடியும்.. ஏன் சைக்கிள் போன்ற ஒரு பொருள் மீது கூட அன்பை வைக்க முடியும் என்பதை இந்த மெய்யழகன் கார்த்தி உணர வைத்திருக்கிறார்.. கார்த்தி அறிமு கட்சியில் அரவிந்த்சாமி கண்களை மூடும்போது அந்த கையில் கூட உடல் மொழியை காட்டி இருக்கிறார் கார்த்தி..

எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் ஓடி வந்து ஒருவரால் அன்பை காட்ட முடியும்.. ஆனால் அவர் யார் என்பது கூட தெரியாமல் அவருடன் எப்படி பழக முடியும் என்ற குற்ற உணர்வை ஒவ்வொரு காட்சியிலும் அழகாக முக பாவனைகளில் வெளிப்படுத்தி இருக்கிறார் அரவிந்த்சாமி..

யார் என்று தெரியாவிட்டாலும் பழகும் கிராமத்து மனிதர்கள்.. யார் என்பது தெரியாமல் பழக மறுக்கும் நகரத்துவாசிகளையும் அடையாளம் காட்டியிருக்கிறார் டைரக்டர் பிரேம்குமார்..

சொந்த ஊருக்கு வந்து லாட்ஜ் எடுத்தும் தங்கும் ஒருவன் நானாக தான் இருக்கும் என அரவிந்த்சாமி சொல்லும்போது வீடில்லாத அனைவருக்கும் அந்த உணர்வு புரியும்..

பாசமான உறவுகளை பொறுமையான உணர்வு கூட தான் காண முடியும்.. அந்த பொறுமை இருந்தால் மட்டுமே இந்த படத்தை ரசிக்க முடியும்.

அரவிந்தசாமியும் கார்த்திக்கும் பயணிக்கும் அந்த சைக்கிள் பயணம் கூட பல நினைவுகளை நமக்கு விட்டுச் செல்லும்.

கார்த்தி மனைவியாக ஸ்ரீதிவ்யா, அரவிந்த்சாமியின் மனைவியாக தேவதர்ஷினி, மற்றும் ராஜ்கிரண் ஜெயபிரகாஷ், பூக்காரி ரேச்சல் ரெபக்கா கண்டக்டர் கருணாகரன் உள்ளிட்ட கதாபாத்திரங்கள் கொஞ்ச நேரமே வந்தாலும் மனதில் நிற்கிறது.

யார் என்பது கூட தெரியாவிட்டாலும் அன்பை காட்டும் கிராமத்து மனிதர்களை சொல்லும் ஏதோ ஒரு வகையில் காட்டி செல்கிறார் இயக்குனர் பிரேம்..

டெக்னீசியன்ஸ் …

Produced by – Jyotika and Suriya
Co–Producer – Rajsekar Karpoorasundarapandian
Writer&Director – C.PremKumar
DOP – Mahendran Jayaraju
Music – GovindVasantha
Editing – R.Govindaraj
Production Designer -Rajeevan
Costume Designer – Subhashree Karthik Vijay
Lyrics – Karthik Netha & Umadevi
Makeup – V.Murugan
FX – S.Alagia koothan -Suren.G
VFX – Phantom Studios
DI – IGene
Colorist – Rajasekaran.KS
Sync Sound – Raghav Ramesh
Stills – Akash
PRO – Johnson

கோவிந்த் வசந்தா இசையில் மெல்லிய இசையை உணர்வுபூர்வமாக கேட்க முடிகிறது.. முக்கியமாக திருமணத்தில் தங்கை காலை எடுத்து மடியில் வைத்து அரவிந்த்சாமி கொலுசு அணிவிக்கும் அந்த காட்சி நிச்சயம் பல அண்ணன் & தங்கைகளுக்கும் கண்ணீரை வரவழைக்கும்.. கமல்ஹாசன் பாடிய யாரோ இவன்.. பாடல் நெஞ்சை கலங்கடிக்கும்

அரவிந்த்சாமி கார்த்தியை சந்தித்ததும் விறுவிறுப்பு கூடி திரைக்கதை வேகம் எடுக்கிறது.. ஆனால் இரண்டாம் பாதியில் கொஞ்சம் நீளத்தை குறைத்து இருக்கலாம்..

எடிட்டர் கோவிந்தராஜன் ஜல்லிக்கட்டு & கார்த்தியின் இலங்கை பிரச்சனை + தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு ஆகிய சமூக சிந்தனை கருத்துக்களை கொஞ்சம் ட்ரிம் செய்திருக்கலாம்.. இரண்டாம் பாதி மட்டுமே ஒன்றரை மணி நேரத்துக்கு மேலாக இருப்பது பொறுமையை சோதிக்கிறது..

மகேந்திரன் ஜெயராஜ் ஒளிப்பதிவு செய்து இருக்கிறார்.. இதுவரைக்கும் தஞ்சாவூர் செல்லாமல் இருந்த மக்களுக்கு தஞ்சாவூரின் அழகை கண் முன் நிறுத்தி இருக்கிறார்.. இனி தஞ்சாவூர் கும்பகோணம் செல்ல வேண்டும் என்ற ஆர்வத்தை ரசிகர்களுக்கு ஏற்படுத்தி இருக்கிறார்..

காஸ்ட்யூமர் சுபாவையும் பாராட்டாமல் இருக்க முடியாது.. கிராமத்து மனிதர்களின் எளிமையான உடை.. நகரத்து மனிதர்களின் ஆடம்பரத்திற்கு ஏற்ற உடை என அனைத்தையும் நேர்த்தியாக வடிவமைத்து இருக்கிறார்..

ஜல்லிக்கட்டு பாம்பு பூனை உள்ளிட்டவை கிராபிக்ஸ் என நம்ப முடியாமல் நிஜமாக பார்ப்பது போன்ற உணர்வு..

96 படத்தில் மறந்து போன பிரிந்து போன காதலர்களை காதலை சொன்ன இயக்குனர் பிரேம்குமார் இந்த மெய்யழகன் படத்தில் ஊரை விட்டுச் சென்ற உறவுகளின் உணர்வை மெய்சிலிர்க்க சொல்லியிருக்கிறார்..

பல வருடங்களுக்கு முன்பு தன் உறவுகளையும் நண்பர்களையும் ஊரில் விட்டு சென்ற சிலர் இந்த படத்தை பார்க்கும்போது அவர்களை மீண்டும் சந்திக்க வேண்டும் என்று எண்ணத்தை ஏற்படுத்தும்.. அது போல நம்மை மறக்காமல் என்றும் நினைவில் வைத்திருக்கும் அந்த அப்பாவி உள்ளங்கள் மூலம் குற்ற உணர்ச்சியும் நமக்கு நிச்சயம் ஏற்பட வாய்ப்பு உண்டு..

இன்றும் பழமை மாறாத வீடுகள்.. ஊர் மக்கள்.. பழமை வாய்ந்த கோயில்.. அந்த கால சைக்கிள்.. அணைக்கட்டு, பாம்பு, பூனை நாய், அதிகாலையில் கோலமிடும் பெண்கள், பால்காரர் பால் வண்டி என ஊர் மக்களையும் கலை இயக்குனர் காட்சிப்படுத்தியிருக்கிறார்

இணை தயாரிப்பாளர் ராஜசேகரும் ஒரு காட்சியில் வந்து நம்மைக் கவர்கிறார்..

உறவுகளை மறந்து ஊரை விட்டுச் சென்ற ஒவ்வொரு மனிதனுக்கும் ஊர் பாசம் தொற்றிக் கொள்ளும் வகையில் தரமான படைப்பை கொடுத்திருக்கிறார்கள் தயாரிப்பாளர் சூர்யா மற்றும் ஜோதிகா.

ஆக மெய்யழகன்… உறவுகள் தொடர்கதை

Meiyazhagan movie review

—–