ஸ்ரீதேவி – மீனா வரிசையில் லக்‌ஷனா ரிஷி.. ‘எங்க அப்பா’ விழாவில் பாராட்டிய பாக்யராஜ் & பேரரசு

ஸ்ரீதேவி – மீனா வரிசையில் லக்‌ஷனா ரிஷி.. ‘எங்க அப்பா’ விழாவில் பாராட்டிய  பாக்யராஜ் & பேரரசு

 

 

ஸ்ரீதேவி – மீனா வரிசையில் லக்‌ஷனா ரிஷி.. ‘எங்க அப்பா விழாவில் பாராட்டிய பாக்யராஜ் & பேரரசு

 

ஒரு சில நடிகர் நடிகைகள் மட்டுமே குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் ஆகி இன்றும் சினிமாவில் நட்சத்திரங்களாக ஜொலித்துக் கொண்டிருக்கின்றனர்.

அந்த வரிசையில் நடிகர்களில் கமல்ஹாசன் சிலம்பரசன் அஜித் விஜய் உள்ளிட்டவரை சொல்லலாம்.

அதுபோல நடிகைகளில் ஸ்ரீதேவி மீனா உள்ளிட்ட நடிகைகளை சொல்லலாம்.

இந்த வரிசையில் லக்‌ஷனா ரிஷி இணைவார் என எங்க அப்பா பட இசை வெளியீட்டு விழாவில் பாக்யராஜ் மற்றும் பேரரசு பாராட்டினர்..

குழந்தை நட்சத்திரம் லக்‌ஷனா ரிஷியை, ‘வருங்கால கதாநாயகி’ என இயக்குனர்கள் கே.பாக்யராஜ், பேரரசு இருவரும் “எங்க அப்பா” ஆல்பம் இசை விழாவில் பாராட்டினார்கள்!

அப்பா மீடியா சார்பில், லக்‌ஷனா ரிஷி நடிக்க, எஸ்.வி.ரிஷி எழுதி, இயக்கியுள்ள “எங்க அப்பா” இசை ஆல்பத்தை இயக்குனர் கே.பாக்யராஜ் வெளியிட, இயக்குனர் பேரரசு பெற்றுக் கொண்டார்!

விழாவில் பேபி லக்‌ஷனா ரிஷி, தயாரிப்பாளர் அனீஷா சதீஷ், இயக்குனர் எஸ்.வி.ரிஷி, இசையமைப்பாளர் சந்தோஷ் சாய், நடிகர்கள் பயில்வான் ரங்கநாதன், விஜய் கணேஷ், பாவா லட்சுமணன், பெஞ்சமின், மீசை ராஜேந்திரன், சௌந்தர்ராஜன், ராஜாதிராஜா, காதல் சுகுமார், காதல் சரவணன், அழகேஷ், தெனாலி, கராத்தே ராஜா, சின்ராசு, பிஆர்ஓ கோவிந்தராஜ், நடிகைகள் சுமதி, ஸ்ரீதேவி ஆகியோர் கலந்துக் கொண்டனர்!

அனைத்து கலைஞர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவருக்கும் இயக்குனர்கள் கே.பாக்யராஜ், பேரரசு இருவரும் நினைவுப் பரிசு வழங்கி, பாராட்டினார்கள்!

Lakshna Rishi starring Enga Appa Audio லான்ச்