நிர்வாகம் பொறுப்பல்ல விமர்சனம்… நல்லவனே இல்லாத சமுதாயத்தில் ஒருவன் மட்டும் எப்படி கெட்டவன்.?
நிர்வாகம் பொறுப்பல்ல விமர்சனம்… நல்லவனே இல்லாத சமுதாயத்தில் ஒருவன் மட்டும் எப்படி கெட்டவன்.?
Censored U A
Time : 129 59
ஸ்டோரி…
‘நிர்வாகம் பொறுப்பல்ல..’ இது போன்ற பல வாசகங்களை பல இடங்களில் நாம் பார்த்திருப்போம்.. நம் வாகனங்களை எங்கேயாவது நிறுத்தினால்.. அதில் பொருட்கள் திருடு போனால் நிர்வாகம் பொறுப்பல்ல என்ற வாசகம் பார்த்திருப்போம்..
அதுபோல கொள்ளையடிப்பதில் இரண்டு வகை.. ஒன்று நம்மிடம் வந்து கொள்ளை அடிக்கும் திருடர்கள்.. இரண்டாவது ரகம் – நம்மை அவர்களிடம் வரவைத்து நமக்கு பேராசை காட்டி அதன் மூலம் கோடி கோடியாக கொள்ளையடித்து திருடுவது இன்னொரு வகை..
இதில் இரண்டாவது வகை தான் இந்த நிர்வாகம் பொறுப்பல்ல..
கார்த்தீஸ்வரன் – கார்ப்பரேட் கொள்ளை கும்பல் தலைவன்.. இவரது கூட்டணியில் ஆதவன் அகல்யா உள்ளிட்ட நால்வர் இருக்கிறார்கள்.. இவர்கள் புது புதுசாக வியாபார ஆசை காட்டி மக்களை வரவழைத்து அதிக வட்டி தருவதாக ஆசை காட்டி எல்லாரிடத்திலும் கொள்ளை அடித்து சுருட்டிக்கொண்டு ஓடுவது தான் இவர்கள் வழக்கம்..
இறுதியாக என்ன நடந்தது.? கொள்ளை அடித்த பணத்தை என்ன செய்தார்கள்.? மக்களை எப்படி எல்லாம் ஏமாற்றினார்கள்.? என்பதுதான் படத்தின் கதை..

கேரக்டர்ஸ்…
S Kaarthieswaran, Livingston, Iman annachi, Aadhavan, Akalya Venkatesan, MR Arjun, Kothai Santhanam, Ammanpuram Saravanan Rana, Sreenithi, Sarkar Meena, Mrithula Suresh, Jayashree Binuraj, Dheekshanya, Manju and others…
லிவிங்ஸ்டன் அவரது குடும்பம் உள்ளிட்ட காட்சிகள் கடன் தொல்லையால் படும் அவஸ்தைகள் கண்முன் நிறுத்தி இருக்கின்றனர்.. ஆதவன் – அகல்யா உள்ளிட்ட நால்வர் தங்களால் முடிந்த வரை இந்த நிர்வாகத்திற்கு பலம் கொடுத்துள்ளனர்..

டெக்னீசியன்ஸ்…
Direction : S Kaarthieswaran
Music: Srikanth Deva
Editor: Sajin C
DOP: NS Raajesh
Lyrics: Karunakaran
Producer: D Radhakrishnan
ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்திருக்கிறார்.. பின்னணி இசையில் தெறிக்க விட்டுள்ளார் பாடல்கள் ஆட்டம் போட வைக்கிறது..
ராஜேஷ் ஒளிப்பதிவு செய்ய சஜின் எடிட்டிங் செய்து இருக்கிறார்..
கார்த்தீஸ்வரன் தான் இயக்குனர் ஹீரோ என்பதால் தனக்கு வேண்டி எல்லா காட்சிகளையும் அவரை மையப்படுத்தி அமைத்திருக்கிறார்.. அவருக்கு வேண்டிய பாட்டு ஃபைட் இப்படியாக கதையை நகர்த்தி இருக்கிறார்..
ஒரு மீட்டிங் காட்சியில்.. ஆதவன் ஒரு துபாய் சேட்டு போலவும் குண்டான நபர் ஜப்பான் மல்யுத்த வீரர் போலவும் காட்டப்படுகிறது.. இவர்களெல்லாம் பேசுவதை பார்த்தால் எவரும் நம்ப மாட்டார்கள்.. ஆனால் இப்படியாக காட்சிகளை வைத்து ஏதோ படம் எடுக்க வேண்டும் என்பதற்காகவே எடுத்தது போல தெரிகிறது..
நட்டி நடித்த சதுரங்க வேட்டை படம் வந்த பிறகு அதே பாணியில் பல படங்கள் வருவதை பார்த்திருக்கிறோம்.. அதில் சில படங்கள் மட்டும் தான் சுவாரஸ்யம் திரில்லர் கலந்திருக்கிறது.. இதில் எந்த லாஜிக்கும் இல்லாமல் மக்களை ஏமாற்றி பணம் பறித்து உல்லாச வாழ்க்கை வாழ்கிறார்கள்.
ஒரு கட்டத்தில் ஒரு பெண் தொழில் அதிபரிடம் அவரின் கடன் பிரச்சினைக்காக ₹ 50 கோடி கொடுத்து உதவுகிறார்.. ஆனால் சில தினங்களிலே ₹ 500 கோடி இவருக்கு தேவைப்படுவதாக கேட்கிறார்.. இது போன்ற லாஜிக் ஓட்டை இருக்கிறது.. தெரியாத ஒரு நபருக்கு 500 கோடியை யார் எப்படி கொடுப்பார்கள் என்பதற்கான எந்த விளக்கமும் இல்லை..
ஊழல் செய்யாத அரசியல்வாதி இல்லை.. காணிக்கை பெறாத கடவுள் இல்லை.. லஞ்சம் கேட்காத அதிகாரிகள் இல்லை.. பத்திரம் பதிவு செய்ய லஞ்சம் கொடுக்காத மக்கள் இல்லை.. ஓட்டு போட பணம் வாங்காத ஜனங்கள் இல்லை..
அப்படியே குற்றம் செய்து மாட்டிக் கொண்டாலும் வழக்கை வாதாடும் வக்கீல்… தீர்ப்புக்கு லஞ்சம் வாங்கும் நீதிபதி.. கல்விக்கும் மருத்துவத்துக்கும் பணம்..
இப்படி இங்கு எவரும் யோக்கியம் இல்லை.. நான் செய்வது மட்டும் எப்படி குற்றமாகும் என்று விளக்கம் கொடுத்திருக்கிறார் இயக்குனர் நடிகர் கார்த்தீஸ்வரன்..
ஆக நான் செய்யும் எந்த குற்றத்திற்கும் நான் உள்ளிட்ட எனது நிர்வாகம் பொறுப்பல்ல என்ற விளக்கம் கொடுத்திருக்கிறார் கார்த்தீஸ்வரன்..
Niruvagam Porupalla movie review

