தவறாதீர்.. : ‘மெய்யழகன்’ படத்தை பார்க்க இவ்வளவு விஷயம் இருக்கா.?

தவறாதீர்.. : ‘மெய்யழகன்’ படத்தை பார்க்க இவ்வளவு விஷயம் இருக்கா.?

 

 

தவறாதீர்.. : ‘மெய்யழகன்’ படத்தை பார்க்க இவ்வளவு விஷயம் இருக்கா.?

 

புரட்டாசி 11… ‘மெய்யழகன்’ திரைப்படம் திரைக்கு வருகிறது.. சூர்யா தயாரிப்பில் கார்த்தி நடிப்பில் கோவிந்த் வசந்தா இசையில் பிரேம்குமார் இயக்கி படம் தான் ‘மெய்யழகன்’.

இதில் அரவிந்தசாமி ஸ்ரீதிவ்யா ராஜ்கிரன் ஆகியோர் நடித்திருக்கின்றனர்.

இந்த படத்தை நிச்சயம் நீங்கள் பார்க்க வேண்டும்.. அதற்கான காரணங்கள் தான் இதோ…

உங்களிடம் மைக்கை நீட்டி.. உங்களுக்கு பிடித்த காலகட்டங்கள் எது? மீண்டும் எந்த வாழ்க்கைக்கு செல்ல விரும்புகிறீர்கள் என கேட்டால்… நாம் சொல்லும் ஒரே பதில் பள்ளி பருவம் மட்டுமே.. அப்படி பள்ளி பருவத்தை காட்டி நம்மை அழைத்துச் சென்றவர்தான் 96 இயக்குனர் பிரேம்குமார்.

பள்ளி பருவ காதல் என்றென்றும் வாழ்வில் நிலைத்து நிற்கும்.. காதல் கைகூடாவிட்டாலும் அந்த நினைவுகளை மறக்க முடியாத என விஜய் சேதுபதி – திரிஷா மூலம் காதலை சொன்ன இந்த இயக்குனரின் அடுத்த படைப்பு தான் மெய்யழகன்.

96 படத்திற்கு மெய்சிலிர்க்கும் இசையை கொடுத்தவர் கோவிந்த் வசந்தா.. தற்போது இயக்குனர் பிரேம் மற்றும் கோவிந்த வசந்தா இருவரும் ‘மெய்யழகன்’ படத்தில் மீண்டும் இணைந்து இருக்கின்றனர்.

அதுபோல தமிழ் சினிமாவில் முக்கியமான இடத்தை பிடித்திருப்பவர்கள் சூர்யா மற்றும் கார்த்தி.. கடைக்குட்டி சிங்கம் படத்தில் சூர்யா தயாரிப்பாளராகவும் கார்த்தி நடிகராகவும் இணைந்து இருந்தனர்.

அது குடும்ப உறவுகளை அழகாக சொன்ன படம்.. தற்போது கடைக்குட்டி சிங்கம் அணியும் 96 அணியும் இணைந்திருப்பதால் நிச்சயம் அந்த படத்தின் தரம் உயர்ந்ததாகவே இருக்கும்…

தமிழ் சினிமாவில் அழகான நாயகர்கள் பலர் இருந்தாலும் அதில் முக்கியமான இடத்தை பிடித்திருந்தவர் தான் அரவிந்தசாமி.. தற்போது அவரும் சூர்யா & கார்த்தியுடன் இணைந்து மெய்யழகன் படத்தில் இணைந்திருக்கிறார்.

தரமான படங்களை பார்த்து அதை மட்டுமே விநியோகம் செய்வேன் என அடம்பிடித்து இருப்பவர்தான் சக்தி வேலன்.. அவர் இந்த படத்தை தமிழகம் முழுவதும் வெளியிட இருக்கிறார்.

மேலும் கிராமத்துக்கே உரிய அழகான நாயகியாக ஸ்ரீதிவ்யா பல படங்களில் பார்த்திருக்கிறோம். தற்போது மெய்யழகன் படத்தில் ஸ்ரீதிவ்யா இணைந்துள்ளார்.. அது மட்டும் இல்லாமல் 96 படத்தில் அருமையான நடிப்பை கொடுத்த தேவதர்ஷினியும் நடித்திருக்கிறார்.

இந்தக் கூட்டணிக்கு மேலும் மகுடம் சேர்க்கும் வகையில் நடிகர் கமல்ஹாசன் இந்த படத்தில் உருக்கமான பாடலை பாடிய ரசிகர்களை கவர்ந்திருக்கிறார்..

போதை கஞ்சா மது புகை மாது என தமிழ் சினிமா ரசிகர்கள் மூழ்கிக் கிடக்கும் இந்த சூழ்நிலையில் குடும்ப உறவுகளையும் கிராமத்தையும் அழகாக சொல்லி இருக்கிறது மெய்யழகன் ட்ரைலர்.

முக்கியமாக தமிழைப் போற்றும் வகையில் மெய்யழகன் படத்தின் போஸ்டர்கள் ஒவ்வொன்றும் வடிவமைக்கப்பட்டுள்ளது முக்கியமாக புரட்டாசி 11ஆம் தேதி ( செப்டம்பர் 27) முதல் படம் திரைக்கு வருகிறது என அறிவித்திருக்கின்றனர்.

அதுபோல மெய்யழகன் ப்ரொமோஷன் பணிகளில் கூட 1980 காலகட்டங்களை நினைவுபடுத்தும் விதமாக ஐஸ் வண்டியில் மெய்யழகன் போஸ்டரை ஒட்டி வைத்திருக்கின்றனர்..

இப்படியாக மெய்யழகனை காண குழுவினர் அழைத்தால் நாம் செல்வதில் தவறில்லையே..

Why we must watch Meiyazhagan movie

 

 

 

 

Related articles