‘யோகி டா’ விழா மேடையை காதல் மேடையாக மாற்றிய விஷால் – சாய் தன்ஷிகா

‘யோகி டா’ விழா மேடையை காதல் மேடையாக மாற்றிய விஷால் – சாய் தன்ஷிகா

‘யோகி டா’ விழா மேடையை காதல் மேடையாக மாற்றிய விஷால் – சாய் தன்ஷிகா

 

‘கபாலி’ படத்தில் ரஜினியின் மகளாக நடித்து இந்திய அளவில் பிரபலமானவர் நடிகை சாய் தன்ஷிகா

தற்போது சாய் தன்ஷிகா, முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள படம் ‘யோகிடா’. இதில் ஷாயாஜி ஷிண்டே, மனோபாலா, கபீர் துஹான் சிங், எஸ்தர் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

கவுதம் கிருஷ்ணா எழுதி இயக்கியுள்ளார். மலையாளத்தில் ‘லூசிஃபர்’ உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசை அமைத்துள்ள தீபக் தேவ் இசையமைத்துள்ளார். பூபதி ஒளிப்பதிவு செய்துள்ளார்..

இந்தப் படத்தின் ட்ரெய்லர் மற்றும் ஆடியோ விழா சென்னையில் நடைபெற்றது.. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக நடிகர் விஷால் கலந்து கொண்டார்.. அப்போதே விஷால் சாய் தன்ஷிகா இருவரின் காதல் வெளிச்சத்திற்கு வந்தது..

இந்த விழாவில் கலந்துகொண்ட ஆர் வி உதயகுமார், ராதாரவி ஆகியோர் சாய் தன்சிகா மற்றும் விஷால் காதலை உறுதிப்படுத்தி பேசினர்..

 

இந்த விழாவில் பேசும்போது நடிகை சாய் தன்ஷிகா.. லவ் யூ பேபி.. எங்கள் இருவரின் திருமணம் ஆகஸ்ட் 29ஆம் தேதி (விஷால் பிறந்தநாள்) அன்று நடைபெற உள்ளதாக தெரிவித்தார்..

எனக்கு ஒரு பிரச்சனை என்று வந்தபோது முதலில் வந்து நின்றவர் நடிகர் விஷால் எனக் குறிப்பிட்டு பேசினார் நடிகை தன்சிகா..

நானும் சாய் தன்ஸிகாவும் காதலித்து வருகிறோம்.. விரைவில் இருவரும் திருமணம் செய்து கொள்ள உள்ளோம்.. அதற்குள் நடிகர் சங்க கட்டிடப் பணிகளை முடிக்க வேண்டும் என கட்டிட பணியாளர்களை வற்புறுத்தி வருவதாகவும் ஆகஸ்ட் 29ஆம் தேதி திருமணம் நடக்கும் எனவும் தெரிவித்தார்..

‘யோகி டா’ படத்தில் வருவது போல நடிகை தன்சிகா என்னை அடிக்க மாட்டார் என்று நினைக்கிறேன் என்று கலகலப்பாக பேசினார் நடிகர் விஷால்..

Vishal and Saidhanshika love proposal at Yogi da event