மகாசேனா : Cooler போட்ட ஹீரோவை  கலாய்த்த ஜான் விஜய்.; யானையுடன் விமலின் சவாலான நடிப்பு

மகாசேனா : Cooler போட்ட ஹீரோவை  கலாய்த்த ஜான் விஜய்.; யானையுடன் விமலின் சவாலான நடிப்பு

மகாசேனா : Cooler போட்ட ஹீரோவை  கலாய்த்த ஜான் விஜய்.; யானையுடன் விமலின் சவாலான நடிப்பு

 

என் கேரியரில் ‘மகாசேனா’ பெரிய பட்ஜெட்.. யானையுடன் சவாலான நடிப்பு.. – விமல்

 

தினேஷ் கலைச்செல்வன் இயக்கத்தில் விமல், யோகி பாபு, சிருஷ்டி டாங்கே, கபீர், ஜான் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘மகாசேனா’.

இந்த திரைப்படம் வரும் டிசம்பர் 12-ம் தேதி திரைக்கு வருகிறது.

இதில் இடம்பெற்றுள்ள ‘யார் இங்கு வாழனும்’ என்ற பாடல் சமீபத்தில் வெளியானது..

இப்படம் தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம், இந்தி என 5 மொழிகளில் பான் இந்தியா திரைப்படமாக வெளியாகிறது..

இந்தப் படத்தில் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.. இந்த விழாவில் நடிகர் விமல் பேசும்போது..

” அனைவருக்கும் வணக்கம்.. என் அருகில் கபீர் சார் அமர்ந்திருக்கிறார் அவர் எப்போதும் பேசிக் கொண்டிருப்பார்.. நான் எல்லாத்துக்கும் Yes என்று சொல்லிக் கொண்டிருப்பேன்.. ஆனால் எனக்கு எதுவும் புரியவில்லை..

ஜான் விஜய் அண்ணாவுடன் கலகலப்பு படத்தில் இணைந்து நடித்த அன்று முதல் அவர் எனக்கு நல்ல பழக்கம்.. கொடைக்கானல் சென்றால் அவர் வீட்டில் விருந்து அளிப்பார்.. அவருடைய விருந்து எப்படி இருக்கும் என்பதை நீங்களே புரிந்து கொள்ளுங்கள்..

இந்த படத்தில் நிஜ யானையுடன் நடித்தேன்.. இது சவாலான அனுபவமாக இருந்தது. என்னுடைய கேரியரில் நான் நடித்த படங்களில் மிகப்பிரமாண்டமாக மிகுந்த பொருட்செவில் எடுக்கப்பட்டம் இதுதான்.. டிசம்பர் 12ஆம் தேதி இந்த படம் திரைக்கு வருகிறது..

ஜான் விஜய் பேசும்போது…

நான் மேடையில் இருக்கும் போது Cooling Glass போடுவேன்.. இப்போ மேடையில் cooler போட்டு இருப்பதால் நான் போடவில்லை.. (மேடையில் விமல் & கபீர் இருவரும் Cooler போட்டு இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது..

 

Vimal and John Vijay speech at Mahasenha audio launch