கேரளத்தில் ச்செய்து கழிஞ்சு..; தமிழ்நாட்டில் செய்வீர்களா.? முதல்வர் விஜய்க்கு ‘ஹரா’ விஜய் ஸ்ரீ கோரிக்கை

கேரளத்தில் ச்செய்து கழிஞ்சு..; தமிழ்நாட்டில் செய்வீர்களா.? முதல்வர் விஜய்க்கு ‘ஹரா’ விஜய் ஸ்ரீ கோரிக்கை

 

கேரளத்தில் ச்செய்து கழிஞ்சு..;
தமிழ்நாட்டில் செய்வீர்களா.? முதல்வர் விஜய்க்கு ‘ஹரா’ விஜய் ஸ்ரீ கோரிக்கை

 

 

பல வருடங்களுக்குப் பிறகு நடிகர் மோகன் ரீ என்ட்ரி கொடுத்த திரைப்படம் ‘ஹரா’.. இந்த படத்தை விஜய் ஸ்ரீ இயக்கி இருந்தார். கோவையை சேர்ந்த மோகன் என்பவர் தயாரித்திருந்தார்..

இதில் அனித்ரா, மொட்ட ராஜேந்திரன், அனுமோல், வனிதா விஜயகுமார், சிங்கம் புலி உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர்..

இந்தப் படத்தில் ஒரு காட்சியில் மோகன் தன்னுடைய மகளுக்கு மாதவிடாய் காலத்தில் விடுமுறை வேண்டும் என்பார்.. தன் மகள் வயதுக்கு வந்திருப்பதால் அவளை தேர்வு எழுத அனுமதிக்க முடியாது எனவும் சொல்லியிருப்பார்.

மேலும் படக்குழுவினர் அப்போதைய தமிழக அரசுக்கு மாதவிடாய் காலங்களில் பள்ளி மாணவிகளுக்கு விடுமுறை வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்த நிலையில் கேரளாவில் தற்போது காங்கிரஸ் அரசு பொறுப்பேற்றுள்ளது இதன்படி கேரள முதல்வர் சதீசன் அங்கு பள்ளி மாணவிகளுக்கு மூன்று நாட்கள் மாதவிடாய் விடுமுறை அளித்துள்ளார்..

இதைக் குறிப்பிட்டு ‘ஹரா’ பட இயக்குனர் விஜய் ஸ்ரீ ஜீ.. கேரளத்தைப் போன்று தமிழ்நாட்டில் செய்வீர்களா.? என தமிழக முதல்வர் விஜய் அவர்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்..

 

Vijay sri request CM Vijay Grand leave for School girls on Menstrual period