ஓடுவது தலைவருக்கான தகுதியில்ல..; முதல்வர் விஜய்யை சீண்டிய விஜய் சேதுபதி..? ஆதரவாக வந்த அதிமுக.. விஜய் டிவி விளக்கம்..

ஓடுவது தலைவருக்கான தகுதியில்ல..; முதல்வர் விஜய்யை சீண்டிய விஜய் சேதுபதி..? ஆதரவாக வந்த அதிமுக.. விஜய் டிவி விளக்கம்..

 

ஓடுவது தலைவருக்கான தகுதியில்ல..; முதல்வர் விஜய்யை சீண்டிய விஜய் சேதுபதி..? ஆதரவாக வந்த அதிமுக.. விஜய் டிவி விளக்கம்..

 

பொது மேடையும் மைக்கும் கிடைத்து விட்டால் சில பிரபலங்கள் ஏதாவது பேசி சர்ச்சையில் சிக்கிக் கொள்வது வழக்கம்..

நடிகர் விஜய்சேதுபதி சில நேரங்களில் இப்படி பேசுபவர்தான்.. அவரது ரசிகர்கள் ஆதரவு தெரிவித்தாலும் மற்ற ரசிகர்கள் அவரது கருத்துக்கு எதிர்ப்பு தெரிவிப்பது வழக்கம்..

நடிகராக பிஸியா இருந்தாலும் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்..

கடந்த செப்டம்பர் 6ஆம் தேதி தொடங்கியது.. தற்போது தமிழகத்தில் சட்டப்பேரவை நிகழ்ச்சிகள் நேரலையில் ஒளிபரப்பு வருவதால் அதனைப் பற்றி பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.. அந்த வகையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் சட்டப்பேரவை போல சில டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது

ஆளும் அணி மற்றும் எதிர் அணி என இரு அணிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளனர். ஆளும் அணியின் தலைவராக ஷாதிகாவும், எதிர் அணியின் தலைவியாக வினோத் பாபுவும் உள்ளனர்

சில தினங்களுக்கு முன்பு… “தலைவர் என்றால் என்னவென்று தெரியாமல்.. தலைமை பண்பு என்றால் என்னவென்று தெரியாமல், வாய்க்கு வந்தபடி வாக்குறுதிகளை அள்ளித் தெளித்துவிட்டு, எதிரணி மீது பழியை தூக்கிப் போட்டு, அங்கிருந்து தெறித்து ஓடுவது தலைவருக்கான தகுதி இல்லை. அது ஏமாற்று வேலை.” என்று பேசினார் இந்த நிகழ்ச்சியை வழங்கி வரும் விஜய் சேதுபதி..

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.. அவர் தற்போது முதல்வராக இருக்கும் விஜய் குறித்து தான் அவர் பேசுகிறார் என்று ஒரு தரப்பு சமூக வலைத்தளங்களில் சொல்லிக் கொண்டு வந்தனர்..

இதனால் ஆவேசமான விஜய் ரசிகர்கள் விஜய் சேதுபதியின் பழைய வீடியோக்களை பகிர்ந்து வருகின்றனர்.. அவர் சில நிகழ்ச்சிகளில் திமுகவுக்கு ஆதரவாக பேசியதை பகிர்ந்து வருகின்றனர்..

 

இந்நிலையில், விஜய் சேதுபதியின் கருத்துரிமையைப் பாதுகாக்க, அவருக்குச் சட்ட ரீதியாகத் துணை நிற்போம் என அதிமுக எம்.பி.யும், வழக்கறிஞருமான இன்பதுரை தெரிவித்துள்ளார்..

இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரல் ஆனதை தொடர்ந்து பிக் பாஸ் நிகழ்ச்சியை ஒளிபரப்பி வரும் விஜய் டிவி தற்போது பொது விளக்கம் கொடுத்துள்ளது..

அதில்.. விஜய்சேதுபதியின் கருத்துக்கும் தங்களுக்கும் சம்பந்தம் இல்லை என்பது போல விளக்கம் அளித்துள்ளனர்.

 

Vijay Sethupathi controversy speech about Leadership at Bigg Boss show

 

 

 

Related articles