எனக்கு பஞ்சாயத்து செட்டாகாது.. 50 வருஷமனாலும் ஜிவி பிரகாஷ் ஸ்கூல் பையன்.. – ‘Happy Raj’ விழாவில் விஜய் சேதுபதி

எனக்கு பஞ்சாயத்து செட்டாகாது.. 50 வருஷமனாலும் ஜிவி பிரகாஷ் ஸ்கூல் பையன்.. – ‘Happy Raj’ விழாவில் விஜய் சேதுபதி

 

எனக்கு பஞ்சாயத்து செட்டாகாது.. 50 வருஷமனாலும் ஜிவி பிரகாஷ் ஸ்கூல் பையன்.. – ‘Happy Raj’ விழாவில் விஜய் சேதுபதி

 

ஒரு பக்கம் இசையமைப்பாளர்… ஒரு பக்கம் நடிகர் என இரண்டு பக்கங்களில் பிஸியாக ஓடிக் கொண்டிருப்பவர் ஜி வி பிரகாஷ்.

இவரின் இசையில் உருவான ‘யூத்’ படத்தின் பாடல்கள் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தன.. இந்த நிலையில் தற்போது இவர் ஜிவி பிரகாஷ் நாயனாக நடித்துள்ள ஹேப்பி ராஜ் என்ற திரைப்படம் மார்ச் 27 ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது.

இந்த நிலையில் இந்த படத்தின் பிரஸ் மீட் சென்னை கிரீன் பார்க் ஹோட்டலில் நேற்று நடைபெற்றது

பிரதீப் ரங்கநாதனிடம் உதவி இயக்குநராக பணிப்புரிந்த மரியா இளஞ்செழியன் இயக்க ஜி.வி பிரகாஷ், கெளரி பிரியா நடித்திருக்கும் படம் ‘ஹேப்பி ராஜ்’.

ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்திருக்கிறார்.. நீண்ட வருடங்களுக்கு பிறகு இந்த படத்தின் மூலம் அப்பாஸ் ரீ என்ட்ரி கொடுக்கிறார்..

பியாண்ட் பிக்சர்ஸ் தயாரித்திருக்கிறது..

இவ்விழாவில் கலந்து கொண்ட விஜய் சேதுபதி பேசும்போது… “முதலில் தயாரிப்பாளர் சங்க தேர்தலில் வெற்றி பெற்ற தமிழ்குமரன் சாருக்கும் அவரது அணிக்கும் வாழ்த்துகள்

ஏதாவது பஞ்சாயத்து என உட்கார்ந்து, அதற்கு தீர்ப்பு வழங்கப்போய், நம்ம படத்தை ஏதாவது செய்துவிடுவார்களோ என்ற பயம் தான்.. நமக்கு அந்த பஞ்சாயத்து எல்லாம் செட் ஆகாது..

பொறுப்பு என்று ஒன்று கொடுத்தால், அந்த பொறுப்பை பொறுப்பாக செய்யவேண்டும். மற்றபடி வெற்றி பெற்ற உங்களுக்கு என்னுடைய வாழ்த்துகள்.

எப்படி நடிகரோ, இயக்குநரோ சினிமாவை படிக்கிறார்களோ, அதேபோல் தயாரிப்பாளர்கள் வியாபாரத்தையும், ஸ்க்ரிப்ட்டையும் படித்தால் நன்றாக இருக்கும், நிறைய படம் பண்ணுங்கள்.

ஜி வி. பிரகாஷ் நன்றாக பாட்டு போடுவார். ஆனால், ஜஸ்டின் பிரபாகரன் உடன் இரண்டாவது முறை இணைந்து பணியாற்றுகிறார்..

ஜஸ்டின் ‘பண்ணையாரும் பத்மினி’யும் படத்திலிருந்து பழக்கம். அவன் மீது அன்பும் மரியாதையும் உண்டு.

சமீபத்தில் அவனுடைய ‘சர்வம் மாயா’, ‘சிறை’ போன்ற படங்கள் எல்லாம் ஹிட்டாகி இருக்கிறது.

ஹாப்பி ராஜ் படத்தின் ட்ரெய்லர் மிக ஜாலியாக இருந்தது. ஜி வி எப்போதுமே ஸ்கூல் பையனாக நடிக்கலாம்… 90ஸ், ஜென் ஸீ, இன்னும் 50 வருடம் கழித்து எடுத்தால் கூட ஸ்கூல் பையனாக நடிப்பார் போல.. எல்லோருக்கும் வாழ்த்துகள்”

இவ்வாறு விஜய் சேதுபதி படக்குழுவினரை வாழ்த்து பேசினார்..

 

Vijay Sethupathi at Happy Raj event GV Prakash in school boy look nice