விடுதலை 2 விமர்சனம் 3.5/5… புரட்சிப்புலி

விடுதலை 2 விமர்சனம் 3.5/5… புரட்சிப்புலி
ஸ்டோரி…
மழைவாழ் மக்களின் நிலங்களை ஆக்கிரமிக்க திட்டமிடுகிறது அரசு.. இதனை எதிர்த்துப் போராடுகிறார் வாத்தியார் விஜய் சேதுபதி.. எனவே மக்களை விரட்ட அதிரடிப்படையை அந்த பகுதியில் அமைக்கிறது அரசு.. இதில் ஜீப் டிரைவராக பணிக்கு செல்கிறார் சூரி.. அங்கு மக்களோடு மக்களும் பழகி ஒரு கட்டத்தில் விஜய் சேதுபதியை போலீஸிடம் பிடித்துக் கொடுக்கிறார் சூரி.. இது முதல் பாகத்தின் கதை..
விடுதலை 2ஆம் பாகத்தில் விஜய் சேதுபதி தன்னுடைய பின்னணி குறித்து போலீஸிடம் கூறிக் கொண்டிருக்கிறார்.. சூரியின் வாய்ஸ்-ஓவரில் கதை நகர்கிறது. ஆனால் துரதிர்ஷ்டம் என்னவென்றால், அவர் வாத்தியாரிடம் கேட்டு தனது தாய்க்கு எழுதும் கடிதம் கதை அவருக்கே புரியவில்லை என்பது வருத்தம்..
முதல் பாகத்தில் சூரியை சுற்றியே கதைகளம் அமைக்கப்பட்டு இருந்தது.. இரண்டாம் பாகத்தில் விஜய்சேதுபதியின் பின்னணி குறித்து திரைக்கதை அமைத்திருக்கிறார் இயக்குனர் வெற்றிமாறன்..
இதில் மக்கள் படை உருவான விதம், வாத்தியாரின் கம்யூனிசம் பாதை, காவல்துறைக்கும் மக்கள் படைக்கும் இடையே நடந்த போரில் வென்றது யார்.? சூரியின் குற்ற உணர்வு என்ன செய்தது ஆகியவற்றை திரைக்கதையாக அமைத்திருக்கிறார்..
முதல் காட்சியே பெருமாள் வாத்தியாரிடம் போலீஸ் அதிகாரி கெளதம் மேனன் ஆங்கிலத்தில் விசாரிப்பது தான் முதல் காட்சி.. அதனைத் தொடர்ந்து விஜய் சேதுபதி சொல்லும் ஃப்ளாஷ் பேக் மீதிக்கதை..
கேரக்டர்ஸ்…
Vijay Sethupathi,
Soori
Manju Warrier
Chetan
Kishore,
Anurag Kashyap,
Ken Karunas,
Rajeev Menon, Gautham Vasudev Menon,
Bose Venkat, Bhavani Sre, Vincent Ashokan
புரட்சியாளன் தத்துவ கருத்துக்களை பேசும் சித்தாந்தன் என கேரக்டரை உள்வாங்கி நடித்திருக்கிறார் விஜய் சேதுபதி.. ‘மைதிலி என்னைக் காதலி’யின் “என் ஆசை மைதிலியே…..”ன்னு ஒரு டான்ஸ் போடும் விஜய்சேதுபதி.. அடேங்கப்பா பெருமாள் வாத்தியார் ரகம்.. சிறப்பு..
வாத்தியாராக சமூக பாடம் எடுத்திருக்கிறார்.. வாழ்கை பருவங்களில் அவர் எதிர்கொண்ட சூழ்நிலைகளை புரிந்து நடித்திருப்பது சிறப்பு. வயதான தோற்ற மேனரிசங்கள் வேற லெவல்..
சூரி தன் கேரக்டரை அழகாக வெளிப்படுத்தி இருக்கிறார்.. உணர்வுகளை உள்வாங்கி குமரேசனாக ரசிகர் நெஞ்சங்களில் குடியேறுகிறார்..
அவரது மனைவியாக புரட்சி புலியாக மஞ்சு வாரியர். தைரியம் நிறைந்த பெண்ணாக சிறப்பாக நடித்திருக்கிறார். மஞ்சு காதல் காட்சிகள் ரசிக்க வைக்கிறது.
கம்பெனி ஓசியாக வரும் சேத்தன் வில்லனிசம் செம.. இனிமே வட இந்திய வில்லன்களை விட இவருக்கு கூடுதல் வாய்ப்பு கிடைக்கும்..
அது போல் ராஜீவ் மேனன் நடிப்பும் பட்டைய கிளப்பும் ரகம்.. வாத்தியாரின், வாத்தியாராக வரும் கிஷோரின் கம்யூனிசம் கொள்கைகள் கலக்கல்.. கென் கருணாஸின் ஆக்ஷன் கொஞ்ச நேரமே என்றாலும் விடுதலை படத்தில் கனமான பாத்திரத்தை எடுத்து கலக்கியிருக்கிறார்.. கருபண்ண சாமியாகவே மாறி ருத்ர தாண்டவம் ஆடுவது செம..
டெக்னீசியன்ஸ்…
Director: Vetrimaaran
Music: Ilaiyaraaja
Director of Photography: R Velraj
Art Director: Jacky
Editor: Ramar
Costume Designer: Uthara Menon
Stunts: Peter Hein, Stunt Siva & Prabhu
Co-Producer: V Manikandan
Producer: Elred Kumar (RS Infotainment)
வேல்ராஜின் ஒளிப்பதிவில் வனத்தின் வாசத்தை உணரலாம்.. கொடுமையான சூழ்நிலைகளில் உணர்வு கொடுத்திருப்பது பாராட்டுக்குரியது..
இளையராஜா இசையை நாம் சொல்லவே வேண்டாம்.. தினமும் தினமும் உன் நினைப்பு என்று பாடல் வரிகளுக்கு உயிரூட்டுவது போல திரைக்கதை காட்சிக்கும் உயிர் கொடுத்திருக்கிறார்..
‘பொல்லாதவன்’ தொடங்கி திரைக்கதையில் எந்த சமரசமும் இல்லாத ஒரு இயக்குனர் வெற்றிமாறன்.. திரைக்கதை சரியாக அமைந்து விட்டால் எந்த ரசிகனும் கதையுடன் ஒன்று விடுவான் என்பதை ஒவ்வொரு காட்சியிலும் கொடுத்திருக்கிறார். இயக்குனர் ஆனால் படம் முழுவதும் நிறைய கம்யூனிஸ்ட் உரையாடல்கள் & பயிற்சி தெரிகிறது.. அதை கொஞ்சம் குறைத்து இருக்கலாம்..
ஆக விடுதலை 2… புரட்சிப்புலி
Viduthalai Part 2 movie review
—-