ரஜினி நடிக்க மறுத்த ‘உயிருள்ளவரை உஷா’ ரீ-ரிலீஸ்.. ‘குதிரை முகம்’ நளினி.. டி.ராஜேந்தர் பரபரப்பு பேச்சு
ரஜினி நடிக்க மறுத்த ‘உயிருள்ளவரை உஷா’ ரீ-ரிலீஸ்.. ‘குதிரை முகம்’ நளினி.. டி.ராஜேந்தர் பரபரப்பு பேச்சு
சகலகலா வல்லவன் கமல்ஹாசன் என்றாலும் கிட்டத்தட்ட அவருக்கு நிகராக சகல கலைகளிலும் வல்லவர் டி ராஜேந்தர்..
இவரது மேடைப்பேச்சு ரசிக்காதவர்கள் இருக்க முடியாது.. எதுகை மோனையில் பல நேரங்கள் சிறப்பாற்றும் திறமை இவருக்கு உண்டு..
அதுபோல சினிமாவில் பாடல் காட்சிகளில் டி ஆர் போடும் வித்தியாசமான பிரம்மாண்ட சட்டைகளுக்கு இப்போதும் ரசிகர் பட்டாளம் உண்டு.. இவர் தயாரித்து இயக்கிய பல படங்களை இவரே விநியோகம் செய்து இருக்கிறார்.. மேலும் பல படங்களை உரிமைகளை இவரை தற்போது வரை கைவசம் வைத்திருக்கிறார்.
டி.ராஜேந்தர் இயக்கத்தில் நளினி நாயகியாக அறிமுகமான படம், ‘உயிருள்ளவரை உஷா’. (நடிகை அமலாவையும் இவர்தான் அறிமுகம் செய்து வைத்தார்..)
ராதா ரவி, எஸ்.எஸ்.சந்திரன், கவுண்டமணி, சரிதா உள்பட பலர் நடித்திருந்தனர். 1983-ம் ஆண்டு வெளியான இப்படம் சூப்பர் ஹிட்டானது.
டி ராஜேந்தர் இசையில் படத்தில் இடம்பெற்ற அனைத்து பாடல்களும் எவர் க்ரீன் பாடலாக அமைந்துள்ளது..
முக்கியமாக யேசுதாஸ் பாடிய வைகைக் கரை காற்றே நில்லு… பாடல் இன்றளவும் ரசிகர்களின் ஃபேவரைட் பாடலாக இருக்கிறது.
இந்நிலையில், இப்படம் 44 வருடங்களுக்குப் பிறகு 4கே டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் பிப்.13-ம் தேதி மீண்டும் ரிலீஸ் ஆகிறது. இதற்கான விழா சென்னையில் நடைபெற்றது..
தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு, இயக்குநர் விக்ரமன், ஆர்.கே.செல்வமணி, ராதாரவி, நளினி ஆகியோர் கலந்து கொண்டனர்.
விழாவில் டி.ராஜேந்தர் பேசும்போது, “இப்படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டு ஒரிஜினல் காப்பியை பைனான்சியர்களுக்கு போட்டு காண்பித்தேன்.
ஜெமினி லேபில் படத்தைப் பார்த்து விட்டு, நளினி, நாயகியாக சரியாக வரமாட்டார்; அவருக்கு ‘ குதிரை போல நீட்டு முகம்’ என்று அவரை மாற்றச் சொன்னார்கள். ஆனால், அவரை கதாநாயகியாக்கி படம் எடுத்தேன். 4 ஆயிரம் அடி பிலிம் வாங்கி, நீட்டு முகம் என்ற சொன்னவர்களிடம் அவரை ‘நீட்’ முகமாக மாற்றினேன்..
நளினியின் தலைமுடியை விரித்துப் போட வைத்து, பேக் லைட்டில் வைத்து படமாக்கினேன்.
அந்த பேக் லைட் தான் என் நாயகியின் ஹைலைட். பிறகு அவர்களுக்கு மீண்டும் படம் போட்டுக் காண்பித்தேன். படத்தைப் பார்த்து விட்டு, அவர்களே கைதட்டினார்கள்.
இதை திமிராக தலை கனத்தோடு சொல்லவில்லை. வாழ்க்கையில் யார், எப்போது, எப்படி வருவார்கள் என்பது யாருக்கும் தெரியாது.. ஆனால் ஆண்டவனுக்குத்தான் தெரியும்..” என்றார்.
‘உயிருள்ளவரை உஷா’ படத்தில் செயின் ஜெயபால் என்ற கேரக்டரில் முதலில் ரஜினியை நடிக்க வைக்க எண்ணியிருந்தேன்… அவரும் அதுக்கு ஓகே சொன்னாலும் அவர் வேறு ஒரு தயாரிப்பில் பெரிய கம்பெனியில் தான் நடிப்பார் என்றார்..
ஆனால் என்னுடைய தயாரிப்பில் தான் நான் படத்தை தயாரித்தேன்… எனவே ரஜினிக்கு பதிலாக அவரது கேரக்டரில் நான் நடித்தேன்.. எனக்காக சில ஸ்டைல் மாடல்களை மாற்றிக் கொண்டேன்.. ரஜினி நடிக்க மறுத்து விட்டதால் நான் நடிகனாகி இன்று உயர்ந்து விட்டேன் என்றார்..
நளினி தன்னுடைய அறிமுகத்தை பற்றி பேசும்போது… டி ராஜேந்தர் தான் என் தெய்வம்.. அவர் இல்லை என்றால் நான் மேடையில் இருக்க முடியாது என்று நெகிழ்ச்சியாக பேசினார்.. நளினி பேச பேச டி ராஜேந்தர் கண் கலங்கியது குறிப்பிடத்தக்கது..
Uyirullavarai Usha re release T Rajendar Nalini praises each other

