நடிகையுடன் கள்ளக்காதல்.? விஜய்யிடம் இருந்து விவகாரத்துக் கேட்டு சங்கீதா மனு
நடிகையுடன் கள்ளக்காதல்.? விஜய்யிடம் இருந்து விவகாரத்துக் கேட்டு சங்கீதா மனு
விஜய் மனைவி சங்கீதா.. ஒரு லண்டன் வாழ் தமிழ் பெண்மணி. இலங்கையை பூர்வீகமாக கொண்ட இவர்.
1996-ம் ஆண்டு ‘பூவே உனக்காக’ படம் மிகப்பெரிய வெற்றி பெற்ற நேரம். அப்போது விஜய்யைப் பாராட்டுவதற்காக லண்டனில் இருந்து சென்னை வந்தார் சங்கீதா..
விஜய்யைச் சந்தித்த சங்கீதா, தன்னை ஒரு ரசிகை ஆக அறிமுகப்படுத்திக் கொண்டார்.. இவர்கள் சந்திப்பு அடிக்கடி தொடர ஒரு கட்டத்தில் அதுவே காதலாக மாறியது..
விஜய்யின் தீவிர ரசிகையாக இருந்து, பின்னாளில் வாழ்க்கைத் துணையாக மாறினார்..
இருவீட்டார் சம்மதத்துடன் ஆகஸ்ட் 25, 1999 அன்று இவர்களது திருமணம் நடைபெற்றது. இந்து மற்றும் கிறிஸ்தவ முறைப்படி திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். மகன் சஞ்சய், கனடாவில் திரைப்படத்துறை சார்ந்த படிப்பை முடித்துவிட்டு, தற்போது இயக்குநராக அறிமுகமாக உள்ளார்..
விஜய்மகள் திவ்யா சாஷா அமெரிக்காவில் உயர்கல்வி பயின்று வருகிறார்..

இந்த நிலையில் விஜய் நடித்துள்ள ஜனநாயகன் திரைப்படம் தான் தனது கடைசி படம் என்று அறிவித்துவிட்டு அரசியலுக்கு வருகிறார் விஜய்.
தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை நிறுவி தற்போது முதல் முறையாக 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் போட்டியிடக் களம் காண உள்ளார்..
சமீபகாலமாக நடிகர் விஜயுடன் இரண்டு நடிகைகளை தொடர்பு படுத்தி பல்வேறு தரப்பிலிருந்து செய்திகள் வந்த வண்ணம் இருந்தன.. நடிகை கீர்த்தி சுரேஷ் மற்றும் த்ரிஷா என்ற நடிகைகளை அடிக்கடி தொடர்பு படுத்தி பேசி இருந்தனர்..
கீர்த்திக்கு திருமணம் ஆகிவிட்டது.. அந்த திருமணத்திற்கு விஜய் தனி விமானத்தில் சென்று வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.. நடிகை திரிஷாவுக்கு 40 வயதை தாண்டியும் இன்னும் திருமணம் ஆகவில்லை.. ஆனால் சில ஆண்டுகளுக்கு முன் திருமணம் நிச்சயதார்த்தம் நடைபெற்ற போதிலும் அந்த திருமணம் கைகூடவில்லை..

சமீபத்தில் கூட பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் விஜய் மற்றும் திரிஷாவை இணைத்து பேசியிருந்தார்.. இந்த சூழ்நிலையில் விஜய்யின் மனைவி சங்கீதா விவகாரத்து கேட்டு செங்கல்பட்டு கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார்..
அதில் 2021 ஆம் ஆண்டு நடிகர் விஜய்க்கு ஒரு நடிகையுடன் தொடர்பு இருப்பதாக சொல்லப்பட்டது.. நான் தெரிந்த பின்னும் விஜய் அந்த தொடர்பை தொடர்ந்து கொண்டிருந்தார் என்று குறிப்பிட்டுள்ளார் சங்கீதா..
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கேட்டு செங்கல்பட்டு நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார். 27 வருட மணவாழ்க்கைக்கு பிறகு விவாகரத்து கேட்டு மனுதாக்கல் செய்துள்ளார் என்பது இங்கே கவனிக்கத்தக்கது..
TVK Leader Actor Vijay wife Sangeetha filed Divorce notice

