ரஜினிக்கு ‘தளபதி’.. சிவகார்த்திகேயனுக்கு ‘ரஜினி முருகன்’..; மக்களே பார்க்க ரெடி..?

ரஜினிக்கு ‘தளபதி’.. சிவகார்த்திகேயனுக்கு ‘ரஜினி முருகன்’..; மக்களே பார்க்க ரெடி..?

 

 

ரஜினிக்கு ‘தளபதி’.. சிவகார்த்திகேயனுக்கு ‘ரஜினி முருகன்’..; மக்களே பார்க்க ரெடி..?

 

 

1990-களில் ரஜினியின் படங்களுக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கிய படங்களில் மிகப்பெரிய அளவில் பேசப்பட்ட படம் ‘தளபதி’.

மணிரத்னம் இயக்கிய இந்த படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார். இவர்கள் இருவரும் இணைந்து கடைசியாக பணியாற்றிய படம் இதுதான்.. அதன் பிறகு அவர்கள் இன்று வரை இணையவில்லை.

1992 ஆம் ஆண்டில் வெளியான இந்த படத்தின் புகைப்படங்கள் பெரிய அளவில் பேசப்பட்டது. பிசி ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்திருந்தார்.

இந்தப் படத்தில் ரஜினியுடன் மம்மூட்டி பானுப்பிரியா நாகேஷ் ஷோபனா அரவிந்தசாமி ஜெய்சங்கர் ஸ்ரீவித்யா சார்லி உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர்.

இந்த நிலையில் 32 வருடங்களுக்குப் பிறகு தற்போது ரஜினியின் பிறந்த நாளை முன்னிட்டு டிசம்பர் 12ஆம் தேதி ‘தளபதி’ படம் ரீ ரிலீஸ் ஆகிறது.

 

சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவான ‘ரஜினி முருகன்’ படமும் தற்போது ரீ ரிலீஸ் ஆகிறது.. அது பற்றி விவரம் இதோ…

சிவகார்த்திகேயன் ஆரம்ப கால படங்களில் அவருக்கு பெரிய அளவில் பெயரை பெற்று தந்த படங்களில் &ரஜினி முருகன்’ படத்தை சொல்லலாம்.

இதில் சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ், சூரி, ராஜ்கிரன் இணைந்து நடித்திருந்தனர்.. தற்போது ‘ரஜினி முருகன்’ படத்தை ரிலீஸ் செய்யப் போவதாக அதன் தயாரிப்பு நிறுவனமான திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

ஆனால் தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை.. விரைவில் அதிகாரப்பூர்வமான தேதியை எதிர்பார்க்கலாம்.

Thalapathi and Rajini Murugan movie rerelease