தலைவன் தலைவி விமர்சனம்… மோதலை ஜெயித்த காதல் ‘குடும்ப’ சித்திரம்

தலைவன் தலைவி விமர்சனம்… மோதலை ஜெயித்த காதல் ‘குடும்ப’ சித்திரம்

தலைவன் தலைவி விமர்சனம்… மோதலை ஜெயித்த காதல் ‘குடும்ப’ சித்திரம்

 

ஸ்டோரி…

தன் பெற்றோருடன் தன் மகளுக்கு குலதெய்வ கோயிலில் மொட்டை அடிக்க நித்யா மேனன் செல்கிறார்.. மனைவியைப் பிரிந்து 3 மாதம் ஆன நிலையில் இந்த விஷயத்தை அறிந்த விஜய்சேதுபதி ‘என் அனுமதி இல்லாமல் என்னை அழைக்காமல் என் குழந்தைக்கு எப்படி மொட்டை அடிக்கலாம் என்று வருகிறார்..

இதனையடுத்து அந்த குலதெய்வம் கோயில் பகுதியே குடும்ப சண்டை கலவரமாக மாறும் நிலையில் இரு தரப்பு உறவினர்களும் வந்து சேர்கிறார்கள்..

 

மேலும் ஊர் பஞ்சாயத்து தலைவர்களும் வந்து இணைகின்றனர்.. பிரச்சனையை அவர்கள் பேசித் தீர்க்கும் போது இவர்கள் வாழ்வில் நடந்த ஒவ்வொரு பிரச்சனையும் சொல்ல சொல்ல அதுவே படத்தின் திரைக்கதையாகிறது..

இறுதியில் என்ன ஆனது.? பிரிந்த கணவன் மனைவி இணைந்தார்களா.? குடும்ப பிரச்சனை நீதிமன்றம் வரை சென்றதா.? என்பதெல்லாம் மீதிக்கதை..

கேரக்டர்ஸ்…

விஜய் சேதுபதி, நித்யா மேனன், காளி வெங்கட், ‘மைனா’ நந்தினி, யோகி பாபு, தீபா ஷங்கர், ஆர் கே சுரேஷ், மலையாள நடிகர் செம்பன் வினோத், அருள் தாஸ், ஜானகி, பருத்திவீரன் சரவணன், தங்கை ரோஷிணி மற்றும் பலர்..

நீண்ட நாட்களுக்கு பிறகு நடிப்பில் வெளுத்துக்கட்டி இருக்கிறார் விஜய் சேதுபதி.. கிராமத்து மனிதராக ஆகாச வீரனாக அசத்தல்..

இவருக்கு போட்டியாக நித்யா மேனேன்.. பேரரசியாக பேரழியாக பின்னி எடுத்து இருக்கிறார்..

சித்தப்பா – சித்தியாக வரும் காளி வெங்கட் ‘மைனா’ நந்தினி கேரக்டரும் செம.. அதிலும் காளி வெங்கட் தன்னுடைய குடும்பத்தில் வாழா வெட்டியாக வந்து நிற்கும் தங்கை நிலை சொல்லும்போது கலங்க வைக்கிறார்..

ஒரு படத்தில் சிறந்த நடிகர்கள் பலரையும் நடிக்க வைத்து அனைவருக்கும் நடிப்பதற்கான வாய்ப்பையும் கொடுக்க முடியும் என்று ஒவ்வொரு கேரக்டரிலும் முத்திரை பதித்திருக்கிறார் இயக்குனர்..

திருடனாக வரும் யோகி பாபு கேரக்டர் பெரிய வலுவில்லை என்றாலும் கொடுத்த இடத்தில் எல்லாம் சிரிக்க வைக்கிறார் யோகி பாபு.. முக்கியமாக படம் முடிந்து கிளைமாக்ஸ் காட்சியில்.. நீங்க நினைக்கிற மாதிரி அவர்கள் எல்லாம் நார்மல் ஆளுங்க இல்லை என்ற கிண்டல் அடிக்கும் போது நயன் – விக்கியை நினைக்காமல் இருக்க முடியவில்லை..


டெக்னீசியன்ஸ்…

குடும்பத் திரைப்படங்களில் ஆஸ்தான இயக்குனர் பாண்டியராஜ் இயக்கி உள்ள திரைப்படம் இது.. சத்யஜோதி நிறுவனம் தயாரிக்க சுகுமார் ஒளிப்பதிவு செய்ய சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்..

இந்த படத்தை குடும்பத்துடன் பார்த்து ரசிக்கலாம்..

 

Thalaivan Thalaivi movie review