மும்பை போகல.. சென்னையில இருக்கேன்.. ; தமிழில் இப்படியொரு படம் பண்ண முடியுமா.? ‘சர்தார் 2’ விழாவில் சூர்யா பேச்சு

மும்பை போகல.. சென்னையில இருக்கேன்.. ; தமிழில் இப்படியொரு படம் பண்ண முடியுமா.? ‘சர்தார் 2’ விழாவில் சூர்யா பேச்சு

 

மும்பை போகல.. சென்னையில இருக்கேன்.. ; தமிழில் இப்படியொரு படம் பண்ண முடியுமா.? ‘சர்தார் 2’ விழாவில் சூர்யா பேச்சு

 

 

கார்த்தி நடிப்பில் கடந்த 2022 ஆம் ஆண்டு தீபாவளி தினத்தில் வெளியாகி வெற்றி பெற்ற படம் ‘சர்தார்’.

இந்த படத்தின் தொடர்ச்சியாக உருவாகியுள்ள Sardar2 இந்த ஸ்பை த்ரில்லர் படம் செப்டம்பர் 10 வெளியாகிறது..

கார்த்தி, எஸ் ஜே சூர்யா மற்றும் மாளவிகா மோகனன், ஆஷிகா ரங்கநாத், ரஜிஷா விஜயன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.. சாம் சி எஸ் இசையமைத்துள்ளார்…

ரோமியோ பிச்சர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படத்தையும் பிஎஸ் மித்ரன் இயக்கியுள்ளார்.. இந்தப் படத்தில் நாட்டின் பாதுகாப்புக்கு உள்ள அச்சுறுத்தலை தடுக்க உளவுத்துறை அதிகாரி கார்த்தி வருகிறார்..

இதன் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் உள்ள சென்னை வர்த்தக மையம் வளாகத்தில் நடைபெற்றது… இதில் சிறப்பு விருந்தினராக கார்த்தியின் அண்ணன் நடிகர் சூர்யா கலந்து கொண்டு பேசினார்..

அதில்…

50 வருடங்களுக்கு முன்பு நடந்த ஒரு உண்மைச் சம்பவத்தை தழுவி இந்த படத்தை பிஎஸ் மித்ரன் எடுத்துள்ளார்.. தமிழில் இப்படி ஒரு பிரம்மாண்டமான படத்தை எடுக்க முடியுமா என்று டீஸரை பார்த்து வியந்தேன்.

ஒரு ஸ்பை த்ரில்லர் கதையை தமிழில் ரொம்ப தத்ரூபமா எடுத்து இருக்காங்க.. என்னதான் படம் பண்ணி இருந்தாலும் அதை மக்கள் கிட்ட நெருக்கமா கொண்டு போறவர் எஸ் ஜே சூர்யா.

அது போல் ஒரு ஆக்டரை விட அவர் செய்யும் கேரக்டர் மக்களிடம் அதிகளவில் பேசப்படுவது என்றால் அது அவருக்கு கிடைக்கும் ஒரு ஆசிர்வாதம்.. இந்த படத்தில் கார்த்திக்கு அது கிடைக்கும்.. கார்த்தியை சர்தாரா மக்கள் பாக்குறாங்க.. என்னைவிட கார்த்தியால முக்கியமான படங்கள் பண்ண முடியுது… அது எனக்கு பெருமையாக ஆச்சரியமாகவும் இருக்கு..

கார்த்தியும் ப்ரொடியூசர் லட்சுமணன் எல் கே ஜி முதல்ல பிரெண்ட்ஸ்.. அவங்க இந்த படத்தை பிரம்மாண்டமா எடுத்து இருக்காங்க..

நான் மும்பையில இல்ல சென்னையில தான் இருக்கேன்… சென்னைக்கு வந்து போகல மும்பைக்கு தான் போயிட்டு வரேன்.. ”

இவ்வாறு சர்தார் 2 படக்குழுவினரை வாழ்த்தி பேசினார் நடிகர் சூர்யா.

 

Suriya praises Sardar2 and Karthi SJ Surya