ஜனவரியில் ஜானகி வருகை..; காதலர்களை மயக்கும் ‘மாயபிம்பம்’.. காத்திருக்கும் சுரேந்தர்.!

ஜனவரியில் ஜானகி வருகை..; காதலர்களை மயக்கும் ‘மாயபிம்பம்’.. காத்திருக்கும் சுரேந்தர்.!

ஜனவரியில் ஜானகி வருகை..; காதலர்களை மயக்கும் ‘மாயபிம்பம்’.. காத்திருக்கும் சுரேந்தர்.!

 

ஒவ்வொரு மாதத்திற்கும் ஒவ்வொரு சிறப்பு உண்டு. பிப்ரவரி மாதம் என்றால் அதனை காதல் மாதம் என்று கூட சொல்வார்கள்.. காரணம் பிப்ரவரி 14ஆம் தேதி காதலர்கள் தினம் கொண்டாடப்படுகிறது..

 

இந்த நிலையில் இந்த ஆண்டு 2026 ஜனவரி இறுதியிலேயே காதல் மாதம் தொடங்கும் என சொல்லலாம்.. ஏனென்றால் சுரேந்தர் இயக்கி தயாரித்துள்ள ‘மாயபிம்பம்’ படம் திரைக்கு வருகிறது.

இந்த படம் அழகான உணர்வுகளை சொல்லும் திரைப்படமாக வந்திருக்கிறது.. பல கட்ட போராட்டங்களுக்குப் பிறகு ஏழு  ஆண்டுகளுக்குப் பிறகு இந்த படத்தை திரைக்கு கொண்டு வர விடாத முயற்சித்திருக்கிறார் சுரேந்தர்.

(இந்த படத்தை நாம் ஏற்கனவே பார்த்து விட்டதால் இந்த உண்மையான பதிவு..)


“மாயபிம்பம்” 2005-ஆம் ஆண்டு காலகட்டத்தை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள ஒரு அழகான காதல் திரைப்படம். K.J. சுரேந்தர் தயாரித்து இயக்கியுள்ள இந்தப் படம், Self Start Productions நிறுவனத்தின் சார்பில் உருவாகியுள்ளது..

இப்படத்தில் ஜானகி, ஆகாஷ், ஹரிகிருஷ்ணன், ராஜேஷ், அருண்குமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இந்த படத்தின் சிறப்பம்சமாக, நடிகர்கள் மட்டுமல்லாமல் தொழில்நுட்பக் குழுவும் முழுவதுமாக புதிய முகங்களைக் கொண்டு இப்படம் உருவாகியுள்ளது. இசையமைப்பாளர் நந்தா, படத்தொகுப்பாளர் வினோத், ஒளிப்பதிவாளர் எட்வின் ஆகியோர் தங்கள் முதல் முயற்சியாக இப்படத்தில் பணியாற்றியுள்ளனர். பாடல்களை விவேகா மற்றும் பத்மாவதி எழுதியுள்ளனர்.

2005-ஆம் ஆண்டை பின்னணியாகக் கொண்டு உருவான இந்தக் காதல் கதை, அந்த காலத்து உணர்வுகளையும் நினைவுகளையும் உயிர்ப்பிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

காதல் மட்டுமின்றி, நட்பு மற்றும் குடும்ப உணர்வுகளும் அழகாக பின்னியமைக்கப்பட்டுள்ளன. இன்றைய தலைமுறைக்கு புதிய அனுபவமாகவும், 90-களில் வளர்ந்தவர்களுக்கு இனிய நினைவுகளாகவும் இந்த படம் அமையும் என படக்குழு தெரிவித்துள்ளது..

இப்படத்தின் ஹிட் பாடலான “எனக்குள்ளே” பாடலை இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார் மற்றும் நடிகை வாணி போஜன் வெளியிட்டனர். இருவரும் பாடலை பாராட்டி, படக்குழுவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்..

 

மேலும், முன்னணி இயக்குநர் சுந்தர் சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டு, பாடல்களையும் கேட்டுப் பாராட்டியுள்ளார்..

 

ஒரு அழகான காதல் அனுபவமாக உருவாகியுள்ள “மாயபிம்பம்” – வரும் 2026 ஜனவரி 23 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது.

 

Surendar directorial Janaki starrer Mayabimbum set to release on January