சொர்க்கவாசல் விமர்சனம் 4/5

சொர்க்கவாசல் விமர்சனம் 4/5
1999 ஆம் ஆண்டு மத்திய சிறைச்சாலை நடைபெற்ற ஜெயில் கலவரத்தை மையப்படுத்தி இந்த படத்தின் கதையை அமைத்திருக்கிறார் இயக்குனர் அறிமுக இயக்குநர் சித்தார்த் விஸ்வநாதன்..
கமல்ஹாசன் இயக்கி நடித்த விருமாண்டி பட கதையில் விசாரணை வளையத்துக்குள் கதையை நகர்த்தி இருக்கிறார்..
ஸ்டோரி…
சாலையோரம் கையேந்தி பவன் தன் அம்மாவுடன் நடத்தி வருகிறார் ஆர்.ஜே.பாலாஜி.. இவருக்கு எதிரிலேயே இவரது காதலி சானியா ஐயப்பன் பூக்கடை நடத்தி வருகிறார்.
ஒரு நாள் சந்தேகத்தின் பேரில் போலீஸ் விசாரணைக்காக பாலாஜியை அழைத்து செல்கின்றனர். இவர் நிரபராதி என்றாலும் இவருக்கு எதிராக அனைத்து சாட்சிகள் இருப்பதால் இவரை ஜெயிலில் அடைத்து விடுகின்றனர்.
சிறையில் தாதாவாக செயல்படும் செல்வராகனுக்கு எதிராக போலீஸ் அதிகாரி சுனில்குமார் ஒரு திட்டம் போடுகிறார்.. அந்தத் திட்டத்தில்.. நான் சொன்னதை செய்தால் உன்னை வெளியே அனுப்பி விடுகிறேன் என பாலாஜியை மிரட்டுகிறார்..
அதன் பிறகு என்ன நடந்தது.? செய்யாத குற்றத்திற்காக வந்த பாலாஜி ஜெயிலில் குற்றம் செய்தாரா.? அதன் பிறகு என்ன நடந்தது என்பதெல்லாம் மீதிக்கதை..
கேரக்டர்ஸ்…
பல படங்களில் காமெடி கவுண்டர் கொடுத்து அதன்பின் கதையின் நாயகனாக உருவெடுத்த ஆர் ஜே பாலாஜி இந்த படத்தில் முழுக்க முழுக்க சீரியஸ் நாயகனாக சிக்ஸர் அடித்திருக்கிறார்.. சில இடங்களில் இவர் கத்துவது செட்டாகவில்லை.. மற்றபடி அப்பாவித்தனம் கலந்த கேரக்டரில் பார்த்திபனாக பளிச்சிடுகிறார்..
சானியா ஐயப்பன் சாந்தமான நாயகியாக கவருகிறார் இருவருக்கும் காதல் கெமிஸ்ட்ரி சிறப்பு.. செல்வராகவன் தாதா என்ற சொல்லப்பட்டாலும் அவரது அடியாள் தாதாவாக ரவுடி டைகர் மணி (ஹக்கீம் ஷா) வெளுத்துக்கட்டி இருக்கிறார்..
செல்வராகவனின் சிகா கேரக்டர் சிறப்பு.. ஆனால் கூடுதல் கவனம் செலுத்தி இருக்கலாம்..
விசாரணை அதிகாரியாக நட்டி.. தாடி மீசை இல்லாமல் வித்தியாசமான கெட்டப்பில் கவர்ந்திருக்கிறார்..
மேலும் கென்ட்ரிக் (சாமுவேல் ராபின்சன்), ஈழ இளைஞர் சீலன் (எழுத்தாளர் ஷோபா சக்தி ஆகியோரது கேரக்டர்களும் கவனிக்க வைக்கிறது..
போதை கைதியாக அனிருத் அப்பா ரவி ராகவேந்தர் மற்றும் குக்கராக பாலாஜி சக்திவேல் கேரக்டர்கள் நடிப்பில் கவர்கிறது.
என்னதான் நேர்மையான அதிகாரியாக இருந்தாலும் அவரும் கட்சிக்கு ஆதரவாக செயல்படும் கட்டபொம்மன் கேரக்டரில் கலக்கி இருக்கிறார் நடிகர் கருணாஸ்..
டெக்னீசியன்ஸ்…
தமிழ் பிரபா, அஸ்வின் ரவிச்சந்திரன், சித்தார்த் விஸ்வநாத் ஆகியோரின் வசனங் வசனங்கள் கைத்தட்டல் பெற வைக்கிறது.
பிரின்ஸ் ஆண்டர்சன் ஒளிப்பதி + கிறிஸ்டோ சேவியரின் பின்னணி இசை + செல்வா ஆர்கே-வின் எடிட்டிங் + ஜெயச்சந்திரனின் கலை இயக்கம் அனைத்தும் சொர்க்கவாசலுக்கு தூண்களாக அமைந்திருக்கிறது..
அறிமுக இயக்குநர் சித்தார்த் விஸ்வநாதன்.. ஜெயிலுக்குள் நடந்த கதை ஜெயிலுக்குள் நடக்கும் சம்பவங்களை மையப்படுத்தி முழு படத்தையும் இயக்கியிருப்பது சிறப்பு..
பல காட்சிகளைப் பார்க்கும்போது இது சிறைச்சாலைதள்? மது அருந்தும் கூடமா? என நினைக்கத் தோன்றுகிறது.. ஆனால் இவை எல்லாம் ஜெயிலில் நடக்கும் சம்பவங்களே.. அன்றாடம் செய்திகளை பார்த்திருக்கிறோம் தானே…
அரசியல் வேட்டை.. சிறைக் கைதிகளாக எதிர்க்கட்சி எம்எல்ஏக்கள்.. கைதிகளின் ஆராஜகம் போலீஸ் விசாரணை என அனைத்தையும் கண் முன் நிறுத்தி இருக்கிறார் இயக்குனர் சித்தார்த்.
Sorgavaasal movie review