WILL (உயில்) விமர்சனம்..; ஒருவருக்கு தேவையில்லாத ஒன்று அடுத்தவருக்கு அவசியமாகிறது

WILL (உயில்) விமர்சனம்..; ஒருவருக்கு தேவையில்லாத ஒன்று அடுத்தவருக்கு அவசியமாகிறது
ஸ்டோரி…
செல்வந்தர் ஒருவர் தன் சொத்து பங்குகளை உயில் ஆக எழுதி வைக்கிறார்.. அதில் தனக்கு பிறந்த இரண்டு மகன்களுக்கும் சரிசமமாக சொத்தை பிரித்து எழுதி வைக்கிறார்.
அவருக்கு சென்னையில் ஒரு கெஸ்ட் ஹவுஸ் அப்பார்ட்மெண்ட்டை ஸ்ரத்தா என்ற இளம் பெண்ணுக்கு எழுதி வைக்கிறார்.
ஆனால் இந்த குடும்பத்தில் எவருக்குமே அந்த பெண் யார் என்று தெரியாத சூழ்நிலையில் அவர்கள் வேறு ஒரு பெண்ணை வைத்து நீதிமன்றத்தில் நீதிபதி முன்பு ஆஜராக வைக்கின்றனர்..
ஆனால் இவர்கள் மீது சந்தேகம் படும் நீதிபதி சோனியா அகர்வால் அங்கு காவலராக பணிபுரியும் எஸ்ஐ விக்ராந்திடம் இது பற்றிய விசாரணையில் இறங்க உத்தரவு இடுகிறார்..
உயிலில் சொல்லப்பட்ட அந்த பெண் யார்.? அந்த பெண்ணுக்கும் செல்வந்தருக்கும் என்ன தொடர்பு.? அவள் பெயரில் உயில் எழுதி வைக்க என்ன காரணம்.? இறுதியாக வந்த தீர்ப்பு என்ன.? என்பதெல்லாம் மீதிக்கதை..
கேரக்டர்ஸ்…
நீதிபதி என்றாலே பெரும்பாலும் 55 வயது கடந்தவர்களை பல படங்களில் பார்த்திருப்போம்.. ஆனால் இதில் சோனியா அகர்வால் இளமையானவராக தீர்ப்பளிப்பது சிறப்பு..
போலீஸ் ஆக விக்ராந்த்.. அலட்டிக் கொள்ளாத நடிப்பு.. இவருக்காக ஆக்ஷன் காட்சியும் திணிக்கப்பட்டிருக்கிறது..
கதை நாயகியாக அலக்கியா.. நம் பக்கத்து வீட்டுப் பெண் போல முகம்… கதாநாயகி போல இல்லாமல் முகம் தோற்றமளிக்கிறது.. இதுவே படத்திற்கு பலமாகவும் பலவீனமாகவும் அமைந்திருக்கிறது.
ஒரு செல்வந்தர் இவர் மீது ஆசைப்பட என்ன காரணம் ?? அதற்குப் பெரிய காரணம் இல்லை.. ஆனால் தன்னை சுற்றியே உயில் படம் அமைந்துள்ளது என்பதை உணர்ந்து கேரக்டருக்கு வலு சேர்த்து இருக்கிறார் அலக்கியா..
இவர்களுடன் நடித்த மற்றவர்கள் கேரக்டர் படத்திற்கு உறுதுணையாக இருந்துள்ளது..
டெக்னீசியன்ஸ்…
செளரப் அகர்வால் இசையில் பாடல்கள் ரசிக்க வைக்கிறது.. பின்னணி இசை ஓகே..
ஒளிப்பதிவாளர் டி.எஸ்.பிரசன்னாவின் கேமரா தரம்.. நீதிமன்ற காட்சியில் சுவாரஸ்யம்.. ஆனால் நீதிமன்ற காட்சிகளில் காந்தி அம்பேத்கர் உள்ளிட்ட பேசிய தலைவர்கள் படங்கள் இடம் பெற்றிருக்கும்.. ஆனால் இதில் தமிழக அரசு முத்திரை மட்டுமே இடம் பெற்றுள்ளது..??
படத்தில் முதல் காட்சியிலேயே நமக்கு அடுத்த காட்சிகளை யூகிக்க முடிகிறது.. எனவே படத்தில் திருப்புமுனைகள் வைக்காமல் மெதுவாக கதையை நகர்த்தி செல்வது நமக்கு சோர்வை தருகிறது..
படத்தொகுப்பில் இன்னும் கூடுதல் கவனம் செலுத்தி இருக்கலாம் எடிட்டர் ஜி.தினேஷ்.
இப்படம் உயில் பற்றிய கதைக்களமாக இருந்தாலும் இறுதியாக யாரோ ஒருவருக்கு தேவையில்லாத ஒன்று மற்றவருக்கு அவசியமாகிறது என்ற கருத்தை வலியுறுத்தி இருக்கிறது..
அதிலும் குழந்தை பெற்று எடுக்க இயலாமை.. கருக்கலைப்பு உள்ளிட்ட பல சோசியல் மெசேஜும் வைத்திருக்கார் இயக்குனர் சிவராமன்..
Will movie review