பாலா மாதிரி படம் எடுக்க வராங்க..; நீ வந்தே ஆகனும் அருண்விஜய் சொல்லிட்டாரு.. – சிவகார்த்திகேயன்
பாலா மாதிரி படம் எடுக்க வராங்க..; நீ வந்தே ஆகனும் அருண்விஜய் சொல்லிட்டாரு.. – சிவகார்த்திகேயன்
நடிகர் விக்ரம் இன்றுவரை பல படங்கள் நடித்திருந்தாலும் அவரை அன்போடு ரசிகர்கள் சீயான் என்று அழைத்து வருகின்றனர்.. இந்த வார்த்தைக்கு அடித்தளம் போட்டவர் இயக்குனர் பாலா என்று சொன்னால் அது மிகையல்ல.
‘சேது’ படத்தின் மூலம் இயக்குனராக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் இயக்குனர் பாலா. இன்று அவர் திரைஉலகில் 25 ஆண்டுகளை கடந்துள்ள நிலையில் பாலா 25 என்ற விழாவை திரை உலகம் முன்னெடுத்து நடத்தியது.
மேலும் இத்துடன் சுரேஷ்காமாட்சி தயாரிப்பில் அருண் விஜய் நடிப்பில் பாலா இயக்கத்தில் உருவான ‘வணங்கான்’ படத்தின் இசை வெளியீட்டு விழாவும் சென்னையில் நடைபெற்றது.
இந்த விழாவில் சிறப்பு விருந்தினர்களாக நடிகர் சூர்யா, சிவகார்த்திகேயன், நடிகர் சிவகுமார் இயக்குனர் மிஷ்கின் உள்ளிட்ட பல திரையுலக பிரபலங்கள் கலந்து கொண்டனர்.
இந்த விழாவில் நடிகர் சிவகார்த்திகேயன் பேசியதாவது
‘சேது’ படம் வரும்போது எனக்கு 14 வயசு. அந்த க்ளைமேக்ஸ் பாதிப்பைக் கொடுத்தது.
நான் நடித்த ‘அமரன்’ படம் தீபாவளி நெகடிவ் எண்டிங் இருக்குனு சொல்லும்போது, எல்லோரும் ‘பிதாமகன்’ படம் தீபாவளிக்கு வந்து ஹிட்டடிச்சதுனு சொன்னாங்க.
‘அவன் இவன்’ படத்தோட நிகழ்வை நான்தான் தொகுத்து வழங்குனேன். அந்த நிகழ்வை ரொம்ப பயந்து பயந்து அப்போ பண்ணினேன்… இப்போ பாலா 25 கொண்டாடுற நிகழ்வுல நான் இருப்பது பெருமை.
பாலா சார் மாதிரி படம் எடுக்கணும்னு ஊர்ல இருந்து நிறைய பேர் வராங்க. அப்படியான தாக்கத்தை அவர் ஏற்படுத்தியிருக்கார்.
‘நீ கண்டிப்பா வரணும் தம்பி’ அப்படின்னு அருண் விஜய் அண்ணன்தான் கூப்பிட்டார். அருண் விஜய் சார் எனக்கு சீனியர்.
அவர் விட்டுக் கொடுக்காமல் முயற்சி பண்றதுதான் அவரோட வெற்றியா பார்க்கிறேன். தம்பியாக இந்தப் படத்துக்கு அவரை வாழ்த்துறேன்.
2025 பொங்கலுக்கு அஜித் சார் படம் வருது, வணங்கான் படமும் வரட்டும். ரெண்டு படமும் வெற்றி அடையும்” என பேசினார் சிவகார்த்திகேயன்..
Sivakarthikeyan speech at Bala 25 Vanangaan Audio launch


