யூத் படத்தில் என் பாடலை திருடி பாடிய கென் கருணாஸ்..; கானா தினேஷ் புகார்
யூத் படத்தில் என் பாடலை திருடி பாடிய கென் கருணாஸ்..; கானா தினேஷ் புகார்
நடிகர் கருணாஸின் மகன் கென்.. இவர் அசுரன் உள்ளிட்ட படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தார்.. தற்போது 24 வயதை அடைந்துள்ள இவர் முதல் முறையாக நாயகனாகவும் இயக்குனராகவும் அறிமுகம் ஆகியுள்ளார்..
இவர் இயக்கத்தில் வெளியான முதல் திரைப்படம் யூத்.. இந்த படம் கடந்த வாரம் வெளியானது.. இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக அணிஷ்மா மீனாட்சி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்..
இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசை அமைத்துள்ளார்.. இவரது பாடல்கள் ஏற்கனவே சூப்பர் ஹிட் அடித்துள்ளன.
இந்த நிலையில் ஆசைப்பட்ட பொண்ணு பேரு மோனிஷா என்ற ஒரு பாடல் இடம் பெற்றிருந்தது.. இந்தப் பாடலை படத்தில் கென் பாடுவது போல படமாக்கப்பட்டிருந்தது.
இந்தப் பாடல் என்னுடைய பாடல்.. நான் 2012 ஆம் ஆண்டில் இந்த கானா பாடலை பாடியிருந்தேன். என் அனுமதி இல்லாமல் என் பாடலை திருடி பயன்படுத்தி விட்டதாக கம்ப்ளைன்ட் கொடுத்துள்ளார் கானா பாடகர் தினேஷ்..
நான் புகார் அளிக்க போகிறேன் என்று சொன்னபோது சிலர் மறுப்பு தெரிவித்தனர்.. கென் தந்தை கருணாஸ் அரசியல் செல்வாக்கு மிகுந்தவர்.. அவர் மிரட்ட கூடும் என்றும் சிலர் எங்களுக்கு ஆதரவளிக்கவில்லை..

எங்களுக்கென்று கானா பாடகர்கள் சங்கம் என்று உள்ளது.. அதிலும் பெரிய ஆதரவு எனக்கு இல்லை.. ஆனால் என்னுடைய பாடலை பயன்படுத்தியது போல இனிவரும் பாடல்களை அவர்கள் பயன்படுத்தக் கூடாது என்பதற்காக புகார் அளித்துள்ளேன் என கானா பாடகர் தினேஷ் தெரிவித்துள்ளார்..
Singer Gana Dinesh complaint against Ken Karunas for Youth Song

