பிப்ரவரி 3… சிம்பு பிறந்த நாளில் தெறிக்க விடும் 3 புதிய படங்களின் அப்டேட்ஸ்
பிப்ரவரி 3… சிம்பு பிறந்த நாளில் தெறிக்க விடும் 3 புதிய படங்களின் அப்டேட்ஸ்
இன்று பிப்ரவரி 3ஆம் தேதி நடிகர் சிலம்பரசன் தன பிறந்த நாளை கொண்டாடி வருகிறார்.
இதனை முன்னிட்டு அவர் நடித்து வரும் 3 படத்தின் அப்டேட் கிடைத்துள்ளது.
கமல்ஹாசன் தயாரிப்பில் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் தக் லைப் (Thug Life) ஜூன் 5 தேதி வெளியாகும் என அறிவித்து சிம்புவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
இத்துடன் சிம்பு நடிக்க உள்ள மூன்று படங்களின் அப்டேட் கிடைத்துள்ளது..
முதலில்.. டான் பிக்சர்ஸ் நிறுவனம் சிம்பு படத்தை அறிவித்துள்ளது.. இது சிம்பு நடிப்பில் உருவாகி வரும் 49-வது படமாகும்.. டான் பிக்சர்ஸ் நிறுவனம் தமிழில் அதிரடியான மூன்று படங்களை தயாரித்து வருவது குறிப்பிடத்தக்கது..
(முதலில் தனுஷின் இட்லி கடை மற்றும் சிவகார்த்திகேயன் நடித்து வரும் பராசக்தி தற்போது சிம்பு நடிக்க உள்ள புதிய பட அறிவிப்பை வெளியிட்டுள்ளது.)
இத்துடன் சிம்பு தனது ATMAN பட நிறுவனத்தின் தயாரிப்பு குறித்து புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.. இந்த படத்தை ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ படத்தின் இயக்குனர் தேசிங்கு பெரியசாமி இயக்க உள்ளார்.. இந்த படம் சிம்பு நடிப்பில் உருவாகும் 50ஆவது படமாகும்…
(சிம்பு & தேசிங்கு பெரியசாமி இணையும் படத்தை தான் நடிகர் கமலஹாசன் தனது ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் சார்பாக தயாரிக்க இருந்ததாக அறிவித்திருந்தார்.. ஆனால் அந்த படம் சில காரணங்களால் டிராப்பானது என்பது குறிப்பிடத்தக்கது..)
இத்துடன் சிம்பு நடிக்கும் 51வது படத்தின் அறிவிப்பும் வெளியாகி உள்ளது.. இந்த படத்தை பிரபல ஏஜிஸ் நிறுவனம் தயாரிக்கிறது.. இது சிம்பு நடிப்பில் உருவாகி வரும் 51வது படமாகும்.. இந்தப் படத்தை அஸ்வத் மாரிமுத்து இயக்க உள்ளார்..
சிலம்பரசன் TR பிறந்த நாளில், அவரது ரசிகர்களை மகிழ்விக்கும் வகையில், அவரது அடுத்த படமான #STR49 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரனின் Dawn Pictures தயாரிப்பில், ‘பார்க்கிங்’ படப்புகழ் இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இப்படத்தை இயக்குகிறார்.
இப்படத்தின் மற்ற நடிகர்கள் மற்றும் தொழில் நுட்ப கலைஞர்கள் பற்றிய விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் என தயாரிப்பு தரப்பு கூறியுள்ளது..
Simbu announced his 3 upcoming projects on his birthday

