கேரளாவில் ரஜினியின் ‘ஜெயிலர் 2’-க்கு இணையாக சூர்யாவின் ‘சீன்’…; ஓ இதான் காரணமா.?
கேரளாவில் ரஜினியின் ‘ஜெயிலர் 2’-க்கு இணையாக சூர்யாவின் ‘சீன்’…; ஓ இதான் காரணமா.?
கடந்த வாரம் அக்டோபர் 15ஆம் தேதி ரஜினிகாந்த் நடிப்பில் உருவான ‘ஜெயிலர் 2’ திரைப்படம் உலகமெங்கும் வெளியானது..
இதுவரை இந்த படம் ₹ 800 கோடியை உலக அளவில் வசூல் ஈட்டியுள்ளது.. இந்த படம் கேரளாவில் மட்டும் 800 மேற்பட்ட திரையரங்குகளில் வெளியானது..
இதற்கு முக்கிய காரணம் இந்த படத்தில் நிறைய மலையாள நட்சத்திரங்கள் நடித்திருந்தனர்.. முக்கியமாக மோகன்லால், சூரஜ் வெஞ்சுரமோடு, நடிகை பூர்ணா, அன்னா ராஜன், மிர்னா, உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர்..
எனவே இந்த படத்திற்கு கேரளாவில் மிகப்பெரிய எதிர்பார்ப்பும் இருந்து வந்தது..
தற்போது இதே போல சூர்யாவின் சீன் படத்திற்கும் கேரளாவில் அதிக திரையரங்குகள் ஒதுக்கப்பட உள்ளது.. இதிலும் ஏகப்பட்ட மலையாள கலைஞர்கள் இணைந்துள்ளனர்..
www.rightnewsraja.com
சீன் படத்தை இயக்கியுள்ள ஜீத்து மாதவன் மலையாள இயக்குனர்… இவர் ஏற்கனவே பகத் பாஸில் வைத்து ஆவேசம் என்ற திரைப்படத்தை மெகா ஹிட் ஆக்கியவர்..
Scene இசையமைப்பாளர் சுஷின் ஷ்யாம் அவரும் மலையாளி..
மேலும் சூர்யாவுடன் மலையாள நடிகை நஸ்ரியா இணைந்து நடித்திருக்கிறார்.. நஸ்ரியாவுக்கு இது ரீ என்ட்ரி படம் என்பதால் அவர் தரப்பிலும் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.. மேலும் மலையாளத்தில் இளம் கலைஞரான நஸ்லென் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்..
www.rightnewsraja.com
இது மட்டுமில்லாமல் 2026 ஆம் ஆண்டில் வெளியான சூர்யாவின் கருப்பு மற்றும் விசுவநாத் அண்ட் சன்ஸ் ஆகிய இரு படங்களும் மாபெரும் வெற்றி பெற்றதால் சீன் படத்திற்கும் மிகப்பெரிய எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது..
இப்படத்தின் கேரள வெளியீட்டு உரிமையைப் பெற்ற ஸ்ரீ கோகுலம் மூவிஸ் அதிக திரைகளில் SCENE படத்தை வெளியிடத் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது..
Scene movie expectations is equal to Jailer 2 in Kerala

