சல்லியர்கள் திரை விமர்சனம்…
சல்லியர்கள் திரை விமர்சனம்…
இலங்கை மண் சார்ந்த பல திரைப்படங்களை ஆவண படங்களை பார்த்திருக்கிறோம்.. போராட்ட கள படங்கள் வந்திருந்தாலும் இதில் அவர்களுக்கு சிகிச்சையளிக்கும் சல்லியர்களை பற்றி வந்துள்ள படம் இது..
ஸ்டோரி…
இலங்கை நாட்டில் சிங்களர்களுக்கும் இலங்கை தமிழர்களுக்கும் மோதல்.. போர் ஒரு பக்கம் இருந்தாலும் போர்க்களத்தில் படுகாயமடையும் வீரர்களுக்கு சிகிச்சை அளிக்க ஒரு பிரிவினர் செயல்பட்டு வருகின்றனர்.. பதுங்கு குழிகளில் மருத்துவ உதவி மையங்கள் அமைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
எதிரியாகவே இருந்தாலும் மருத்துவத்தின் படி உயிரைக் காப்பதே தங்கள் கொள்கையாக டாக்டர்களாக சத்யாதேவியும், மகேந்திரனும் பணியாற்றுகிறார்கள்.
இதனை அறியும் இலங்கை ராணுவம் மருத்துவ சிகிச்சை மையங்களை வெடிகுண்டு வீசி தகர்க்க முடிவு செய்கிறது..
அதன் பிறகு என்ன நடந்தது.? என்பதுதான் மீதிக்கதை..

கேரக்டர்ஸ்…
‘சல்லியர்கள்’ படத்தை சற்றும் சளைக்காமல் நாயகியாக சுமந்திருக்கிறார் சத்யாதேவி.. இப்படி எல்லாம் சிரமப்பட்டு நடிக்க முடியுமா.? நடிக்க வேண்டுமா என்று நம்மை வியக்க வைக்கிறார்.. வலி மிகுந்த காட்சிகளில் கண்களிலேயே நம்மை உணர வைக்கிறார்.. ‘பிளாஷ்பேக்’ காட்சிகள் உணர்ச்சி பிழம்பு.
மகேந்திரன் & திருமுருகன் கேரக்டரும் கவனிக்க வைக்கிறது.
சில காட்சிகளில் மட்டும் தான் வருகிறார் கருணாஸ்.. ஆனாலும் வழக்கம்போல நடிப்பில் கவனிக்க வைக்கிறார்.. ‘அடடா’

‘தலைகுனிந்து சாகாதே…’ என தனது மகனிடம் சொல்லும் காட்சியில் கண்ணீரை வர வைத்து விட்டார் கருணாஸ்..
சந்தோஷ், மோகன் உள்ளிட்டோரும் நாகராஜ் – பிரியாலயா காட்சிகள் போர்க்களத்தில் பூத்த காதல் மலர்கள்..
(நடிகர் திருமுருகன் தற்போது நாம் தமிழர் கட்சி சார்பில் வருகிற சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட உள்ளார் என்பது இங்கே கவனிக்கத்தக்கது…)

டெக்னீசியன்ஸ்…
சிபி சதாசிவத்தின் ஒளிப்பதிவில் காட்சிகள் ஒவ்வொன்றும் சிறப்பு..
கென் கருணாஸ் & ஈஸ்வர் கூட்டணி பின்னணி இசை படத்திற்கு பக்க பலம்..
வைரமுத்து வரிகளில் ‘மலரே மலரே…’, ‘தாயே…’ பாடல்கள் நெகிழ்ச்சி ரகம்..
நடிகரும் தந்தையுமான கருணாஸ் தயாரிக்க அவரது மகன் கென் கருணாஸ் இசை அமைத்திருக்கிறார்.. மேதகு படத்தை இயக்கிய கிட்டு இந்த சல்லியர்கள் படத்தை இயக்கியிருக்கிறார்..
இந்தப் படத்தைப் பார்த்து வெளியிட வந்த பிரபல தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி இந்த படத்திற்கு தியேட்டர் கிடைக்காத காரணத்தினால் இந்த படத்தை ஓடிடி தளத்தில் வெளியிட்டு இருக்கிறார்..

பல வருடங்களாக ஏற்கனவே இலங்கை தமிழ் மண் சார்ந்த கதைகளை பார்த்திருப்பதால் இந்த படத்தின் காட்சிகளை யூகிக்க முடிகிறது..
போராட்டக் களத்தில் தங்கள் உயிரை பணயம் வைத்து வீரர்களின் உயிரை மீட்கும் தேவர்களாக மருத்துவ சிகிச்சை தந்த ‘சல்லியர்கள்’ போராட்டக்காரர்களின் வாழ்க்கையை இதயத்திற்கு மிக நெருக்கமாக சொல்லி இருக்கிறார் இயக்குனர் கிட்டு..
Salliyargal movie review

